“சரத்குமாருடன் இப்படித்தான் நட்பு உருவானது..” விசித்திரமான காரணத்தை கூறிய கே.எஸ்.ரவிக்குமார்..!

சுப்ரீம் ஸ்டார் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சரத்குமார். இவர் திரைப்பட நடிகர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டு சிறந்து விளங்கி வருகிறார்.

தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர நடிகராக ஜொலித்துக் கொண்டு இருந்த நடிகர் சரத்குமார் குறிப்பாக 90ஸ் காலத்தில் பிரபல ஹீரோவாக பார்க்கப்பட்டார்.

விஜயகாந்துக்கு டஃப் கொடுத்த சரத்குமார்:

தொடர்ச்சியாக பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து அன்றைய காலத்தில் ஸ்டார் நடிகராக இருந்த விஜயகாந்த்திற்கு செம டஃப் கொடுக்கும் ஹீரோவாக பார்க்கப்பட்டு வந்தார்.

சரத்குமார் நடிப்பில் வெளிவந்து இன்றளவும் ரசிகர்களின் ஃபேவரைட் திரைப்படம் என்ற லிஸ்டில் இடம் பிடித்திருப்பது புலன்விசாரணை , செந்தூர பாண்டியன், நட்புக்காக,

சூரிய வம்சம், நாட்டாமை, கம்பீரம் உள்ளிட்ட படங்கள் இவரது மிகச்சிறந்த படங்களாக பார்க்கப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து சரத்குமார் காஞ்சனா படத்தில் பேய் கெட்டப்பில் நடித்து,

அனைவரையும் பிரம்மிக்க வைத்தார். அப்படத்தில் அவரது நடனம் நடிப்பு உள்ளிட்ட அனைத்துமே வெகுவாக மக்கள் மனதை கவர்ந்தது.

ஐயா படத்தில் இவர் மிகவும் சாதுவான மகனாக நடித்திருப்பார். அதேபோல் பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் ஜென்டில்மேன் போன்று நடித்திருப்பார்.

இப்படி ஒவ்வொரு படத்திற்கும் தனது மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி கட்டுமஸ்தான தோற்றத்துடன் கோலிவுட் சினிமா ரசிகர்களின் கவனத்தை கவர்ந்த நடிகர் சரத்குமார்.

இவர் பல்வேறு விருதுகளையும் பெற்றிருக்கிறார். ஆம் தமிழக அரசின் கலை மாமணி விருது, சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றிருக்கிறார்.

குறிப்பாக நாட்டாமை திரைப்படத்தில் இவரது நடிப்புக்காக சிறந்த தமிழக அரசின் நடிகருக்கான விருது இவருக்கு கொடுத்து கௌரவிக்கப்பட்டது .

நக்மா உடன் ரகசிய உறவு:

90 காலகட்டத்தில் இவர் நடித்த பல திரைப்படங்கள் விருதுகள் குவித்த படமாகவே பார்க்கப்பட்டு வந்தது. இதனிடையே சரத்குமாரின் தனிப்பட்ட வாழ்க்கை என எடுத்துக்கொண்டோமானால்,

சாயாதேவி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட சரத்குமாருக்கு வரலட்சுமி, பூஜா என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.

இதனிடையே இவர் நடிகை நக்மாவுடன் நெருக்கமாக பழகி ரகசியமாக குடும்பம் நடத்தி வந்ததால்,

சாயாதேவிக்கும் சரத்குமாருக்கும் இடையே மணமுறிவு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள்.

அதன் பிறகு இவர் தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்த வந்தார். இதனிடையே ராடான் என்ற,

தயாரிப்பு நிறுவனம் தயாரித்த கோடீஸ்வரன் என்னும் நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் வழங்கினார்.

அப்போது ராடன் நிறுவனத்தின் உரிமையாளரும் நடிகையுமான ராதிகாவுடன் சரத்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டு,

பின்நாளில் அது காதலாக மாறி 2021 ஆம் ஆண்டில் சரத்குமார் ராதிகாவின் மறுமணம் செய்து கொண்டார்கள்.

ராதிகா உடன் காதல்:

இவர்களுக்கு பிறந்த மகன் தான் ராகுல். திரைப்பட வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, அரசியல் என பிசியாக இருந்து வரும் நடிகர் சரத்குமாருக்கு தற்போது 69 வயதாகிறது.

ஆனாலும் அவரது வயதிற்கு ஏற்ற தோற்றமே கிடையாது. இன்னும் கட்டுமஸ்தான தோற்றத்தை தான் மெயின்டைன் செய்து வருகிறார்.

இந்நிலையில் சரத்குமார் வைத்து படம் இயக்கி வெற்றி கண்ட கே எஸ் ரவிக்குமார் சமீபத்திய பேட்டி ஒன்றில் ,

சரத்குமார் உடன் தனக்கு எப்படி நட்பு ஏற்பட்டது என்பது குறித்த சுவாரசியமான தகவல் ஒன்றை பகிர்ந்து இருக்கிறார்.

கே எஸ் ரவிக்குமார் சரத்குமார் இருவரும் கூட்டணி அமைத்து உருவாக்கிய முதல் படமான செந்தூரப்பாண்டியன் திரைப்படத்தில்,

படப்பிடிப்பின் போது எனக்கும் சரத்குமாருக்கும் சண்டை வந்துவிட்டது என சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார் கே எஸ் ரவிக்குமார்.

அவர் கூறியதாவது, மாலை ஆறு மணிக்கு ஷூட்டிங் என சரத்குமாரிடம் கூறியிருந்தேன். ஆனால், அவர் தாமதமாக வந்தார்.

கே. எஸ் ரவிக்குமார் உடன் சண்டை:

எந்த அளவுக்கு தாமதம் என்றால் நள்ளிரவு இரண்டு மணிக்கு படப்பிடிப்பு தளத்திற்கு வந்தார். அதுவரை நான் டூப் வைத்து படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்தேன்.

அவர் வந்த பிறகு அவர் சார்ந்த காட்சிகளை எடுத்துக் கொள்ளலாம் என விட்டுவிட்டேன். ஒரு கட்டத்தில் காத்திருந்து காத்திருந்து அவர் வராததால் நான் முகத்தையே டூப் போட்டு காட்டிக்கொள்கிறேன்.

அந்த ஆளை… வந்தால் வர சொல்லுங்க.. வரவில்லை என்றால் அப்படியே போக சொல்லுங்கள்.. என்று பட குழுவில் உள்ள அனைவரிடமும் சத்தம் போட்டேன்.

அவர் வந்த பிறகு அவர் ஏதோ கோபத்திலிருந்து இருப்பார் போல் தெரிகிறது.. அவருக்கும் ஏதோ பிரச்சனை போல் தெரிகிறது.

அவரும் கோவமாக இருந்தார்.. இதனால் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது.. அதன் பிறகு இருவரும் சமாதானமாகி வாங்க காட்சிகளை பார்ப்போம் என படமாக்க ஆரம்பித்தோம்.

அதன் பிறகு சரத்குமார் தன்னுடைய காரிலேயே என்னை அழைத்துக் கொண்டு என்னுடைய வீட்டில் விட்டு சென்றார்.

இப்படித்தான் எங்களுடைய நட்பு ஆரம்பமானது.. ஒரு சண்டை தான் எங்களுக்கு இப்படியான நட்பு உருவாக்குவதற்கு காரணமாக அமைந்தது என பேசி இருக்கிறார் கே எஸ் ரவிக்குமார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version