சூர்யா சொன்ன வார்த்தை.. நன்றியே இல்லை.. ஆதவன் பட அனுபவத்தை பகிர்ந்த கே.எஸ்.ரவிக்குமார்..!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கலகலப்பான குடும்ப படங்களை இயக்கி பெயர் பெற்றவர் தான் கே.எஸ். ரவிக்குமார்.

இவர் புரியாத புதிர் என்ற திரைப்படத்தை இயக்கி 1990 ஆம் ஆண்டு இயக்குனராக அறிமுகமாகியிருந்தார் அதை அடுத்து பல்வேறு திரைப்படங்கள் குறிப்பாக சேரன் பாண்டியன், புத்தம் புது பயணம் உள்ளிட்ட படங்கள் நல்ல அறிமுகத்தை கொடுத்தது.

கே. எஸ் ரவிக்குமாரின் வெற்றி படங்கள்:

தொடர்ந்து ஊர் மரியாதை, நாட்டாமை , பெரிய குடும்பம், முத்து , அவ்வை சண்முகி, பிஸ்தா, நட்புக்காக , மின்சார கண்ணா , படையப்பா , சுயம்வரம் , தெனாலி, ஆதவன் என பல வெற்றி திரைப்படங்களை இயக்கி மாபெரும் வசூல் சாதனை படைத்த இயக்குனராக தமிழ் சினிமாவில் இடம் பிடித்துள்ளார்.

இவர் சிறந்த திரைப்படங்கள் இயக்கியதற்காக பல்வேறு விருதுகளை பெற்று கௌரவிக்கப்பட்ட இயக்குனராக பார்க்கப்பட்டு வருகிறார்.

அந்த வகையில் கே. எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் ஆதவன். இந்த திரைப்படம் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளிவந்து தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஹிட் படமாக முத்திரை பதித்தது.

இப்படத்தில் சூர்யா , நயன்தாரா, முரளி , வடிவேலு, ஆனந்த்பாபு , ரமேஷ் கண்ணா , சரோஜாதேவி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள்.

சூர்யாவின் ஆதவன் திரைப்படம்:

இதுதிரைப்படத்தில் வடிவேலுவின் காமெடி மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது இன்று வரை பலரது ஃபேவரைட் காமெடி காட்சியாகவும் அது பார்க்கப்பட்டு வருகிறது.

இந்த திரைப்படத்தில் சூர்யா சிக்ஸ் பேக் வைத்து நடித்திருப்பார் . அது ரசிகர்கள் கவனத்தை பெரிதாக ஈர்த்திருந்தது.

இந்த நிலையில் சூர்யா ஆதவன் படத்தில் சிக்ஸ் பேக் வைத்து நடித்ததை குறித்து இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் சரத்குமார் உடன் கலந்து கொண்ட பேட்டியில் கூறியுள்ளார்.

அதாவது, நான் ஆதவன் படத்தை இயக்கிக் கொண்டிருக்கும்போது சூர்யா சூட்டிங் ஸ்பாட்டில் மிகவும் வருத்தமாக அமர்ந்து கொண்டிருந்தார்.

அப்போது என்ன நடந்தது? என நான் சென்று கேட்டதற்கு இந்த வயிற்றுக்கு கொஞ்சம் கூட நன்றியே இல்ல சார்… எவ்வளவு ஒர்க்அவுட் பண்ணேன். நேத்து ஒரு நாள் தான் கொஞ்சம் சாப்பிட்டேன் உடனே தொங்கி போச்சு என புலம்பினார்.

நன்றி இல்லை… சூர்யா குறித்து கே. எஸ் ரவிகுமார்:

சூர்யா வயசுக்கு ஆதவன் படத்தில் நடிக்கும் போதே அப்படி புலம்புகிறார் என்றால் சரத்குமார் இந்த வயசுலும் இவ்வளவு ஃபிட்டாக இருப்பதற்கு காரணம் அவர் செய்யும் உடற்பயிற்சிகள் தான் .

ஆனால் சரத்குமார் அதை சந்தோசமாக செய்வதால் அவர் இன்னும் இளமையாக இருக்கிறார். இப்போகூட அவரது வயசு அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியாது.

அவருடைய மனதில் எப்போதுமே 20 வயசு பையன் என்று தான் நினைத்துக் கொண்டிருப்பார். அந்த அளவுக்கு சரத்குமார் மிகவும் டெடிகேஷன் ஆன நடிகர் என சரத்குமாரை பற்றி மிகுந்த பெருமையோடு அந்த பேட்டியில் பேசியிருந்தார் கே எஸ் ரவிக்குமார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version