“குஷ்பூவின் பேச்சுக்கு சூடு வைத்த அன்பே சிவம் இயக்குனர் சுந்தர் சி..” அந்த மனசு தான் கடவுள்..!

நடிகை குஷ்பூ சமீபத்தில் நடிகை சுஹாசினி தொகுத்து வழங்கிய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அந்த பேட்டியில், பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.

இவை அனைத்திற்கும் அழகாக பதில் கொடுத்து வந்தார் நடிகை குஷ்பூ. ஆனால், அவர் கொடுத்த ஒரே ஒரு பதில் மட்டும் ரசிகர்களை உறுத்தியது. அது என்னவென்றால் உங்களுக்கு பிடித்த ரொமாண்டிக்கான ஹீரோ என்றால் யார்..? என்று நடிகர் அரவிந்த்சாமி, நவரச நாயகன் கார்த்திக், நடிகரும் குஷ்பூவின் கணவருமான சுந்தர் சி ஆகிய மூவரின் புகைப்படங்களை காட்டினார் சுஹாசினி.

சுந்தர் சி

இதனை பார்த்த நடிகை குஷ்பூ கண்டிப்பாக சுந்தர் சி-ஐ தான் கூறுவார் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் அதற்கு மாறாக நடிகை குஷ்பூ நவரச நாயகன் கார்த்திக் தான் எனக்கு பிடித்த ரொமாண்டிக்கான ஹீரோ என்று ஒரு பறக்கும் முத்தத்தை பறக்க விட்டார். என்னடா இது. அந்த ஆப்ஷனில் கணவர் இருக்கிறார்.. அதை விட்டுவிட்டு நவரச நாயகன் கார்த்திக்கை ரொமான்டிக் ஹீரோ என்று தேர்வு செய்கிறாரே குஷ்பூ என வியந்து போனார்கள் ரசிகர்கள்.

அந்த இடத்திலேயே நடிகை குஷ்பூ அதற்கு விளக்கமும் கொடுத்தார். என்னுடைய கணவருக்கு அளவற்ற காதல் இருக்கின்றது. ஆனால், அதனை எப்படி வெளிக்காட்டுவது என்று அவருக்கு தெரியாது என கூறியிருந்தார்.

இந்நிலையில், சமீபத்தில் அன்பே சிவம் திரைப்படத்தின் இயக்குனரும் பிரபல நடிகருமான சுந்தர் சி இடம் பேட்டி ஒன்றில் கேள்வி எழுப்பப்பட்டது. அதில் நடிகை குஷ்பூவிடம் கேட்கப்பட்ட கேள்வியை போலவே உங்களுக்கு பிடித்த ஹீரோயின் யார்..? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அன்பே சிவம்

இந்த கேள்விக்கு சுந்தர் சி என்ன பதில் கொடுக்கப் போகிறார்..? என்று ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், நடிகர் சுந்தர் சி.. அந்த மனசு தான் சார் கடவுள் என்று சொல்லும் அளவுக்கு ஒரு பதிலை கொடுத்திருந்தார்.

எனக்கு பிடித்த ஹீரோயின் என்று கேட்டால்… என்னுடைய மனைவியை தவிர இன்னொருவரை பிடிக்கும் என்றால் நடிகை சினேகாவை எனக்கு பிடிக்கும் என தன்னுடைய மனைவி குஷ்பூவை விட்டுக் கொடுக்காமல் நடிகை சினேகாவை பிடிக்கும் என அழகாக தன்னுடைய பதிலை கொடுத்திருந்தார்.

இந்த இரண்டு வீடியோக்களையும் ஒப்பிட்டு.. பார்த்தீர்களா..? இதுதான் பசங்களோட காதல் என்று மீம் வீடியோக்களை பரப்பி விட்டு வருகின்றனர் ரசிகர்கள்.

மேலும் இதைத்தான் நடிகை குஷ்பூ அந்த பேட்டிலேயே பதிவு செய்திருக்கிறார். அவருக்கு காதலிக்கத் தெரியும்.. அதனை வெளிப்படுத்த தெரியாது.. போன்ற கருத்துக்களை பல ரசிகர்கள் பதிவு செய்வதை பார்க்க முடிகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version