அப்படி என்னதான் முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி குஷ்புவிடம் கேட்டார்…! வைரலாகும் நியூஸ்…!!

முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதியான மார்க்கண்டேய கட்ஜு  நடிகை குஷ்புவிடம் வலைத்தளத்தின் மூலம் கேட்க கேள்விகள் தற்போது வலைத்தளமே பரபரப்பாக உள்ளது என்று கூறலாம்.

 அப்படி என்ன கேள்வியைத்தான் அவர் குஷ்புவிடம் கேட்டிருப்பார் என்று பலரும் பல வகைகளில் யோசித்து வருகின்ற வேளையில்  உண்மையான நிலை என்ன என்று அறிந்து கொண்டால் அட இவ்வளவுதானா என்று மொக்கையாகிவிடும்.

 தமிழ் திரையுலகை பொருத்தவரை உச்சகட்ட நட்சத்திரங்களோடு இணைந்து நடித்த நடிகையான இவர் தற்போது வரை திரையுலகில் நிலைத்து நிற்பதற்கு காரணம் இவரது ரசிகர்கள் என்று கூறலாம்.

 நடிகையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் பன்முகத்திறமையை தன் நகத்தைக் கொண்டிருப்பவர். சின்னத்திரையிலும் சில ரியாலிட்டி ஷோகளிலும் பங்கேற்று வருகிறார்.

 அதுமட்டுமல்லாமல் அரசியலிலும் ஆர்வம் காட்டி வரும் இவர் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து அரசியல் பணியை செய்து வருகிறார். சின்ன தம்பி படத்தின் மூலம் பிரபலமாகப்பட்ட நடிகை குஷ்பூ இந்த படத்தை பார்த்த பல ரசிகர்கள் இவருக்கு என தனியாக கோவிலை கட்டினார்கள் என்பது உச்சகட்ட மரியாதை என்று கூறலாம்.

இடையில் சற்று உடல் எடை கூடி காட்டிப்பட்ட இவர் அவர் உடல் எடையை பக்காவாக குறைத்து அந்த புகைப்படங்களை வெளியிட்டு பலவிதமான கமெண்ட்களை பெற்றிருந்தார். இதை அடுத்து இவர் சிவப்பு நிறத்தில் சேலை அணிந்து தலை குனிந்தபடி வெட்கத்தோடு சிரிக்கக்கூடிய புகைப்படத்தை ட்விட்டரில் பதிவு செய்திருக்கிறார்.

 அதுமட்டுமல்லாமல் அந்த பதிவோடு சேர்த்து உங்கள் கஷ்டங்களை போக்க சிரிப்பு ஒன்று தான் சிறந்த வழி என்று கூறி இருப்பது மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

 இந்த புகைப்படத்தை பார்வையிட்ட முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு நீங்கள் எந்த ஷாம்புவை பயன்படுத்தி வருகிறீர்கள் என்று கேட்ட கேள்விதான் தற்போது இணையத்தில் வைரலாக பரவி விட்டது.

ஏதாவது முக்கியமான கேள்வியை கேட்டிருப்பார் என்று நினைத்த ரசிகர்கள் மத்தியில் ஷாம்புவின் பெயரை தெரிந்த உடனேயே அவர்களுக்கு அலுப்புத்தட்டி விட்டது.

இந்த கேள்வியின் மூலம் அவர் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக  இருந்தாலும் ரசனை மிக்க ஒரு ரசிகர் என்பதை இந்த ஒற்றை கேள்வியில் நிரூபித்து விட்டார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version