காசுக்காக அப்பா இதை செய்ய சொன்னார்.. எல்லாத்துக்கு பிரபு தான் காரணம்.. அவருதான் ஆரம்பிச்சாரு.. குஷ்பூ தடாலடி..!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நடித்திருக்கும் நடிகை குஷ்பூ தமிழ் திரை உலகில் வருஷம் 16 என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இதனை அடுத்து தமிழில் முன்னணி நடிகர்கள் பலரோடு நடிக்கின்ற வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் ரஜினி, கமல், சரத்குமார் என பல நடிகர்களோடு நடித்து தனக்கு என்று ரசிகர் பட்டாளத்தை அதிகரித்துக் கொண்டார்.

காசுக்காக அப்பா இதை செய்ய சொன்னார்..

திரை உலக வரலாற்றிலேயே ஒரு நடிகைக்கு கோயில் கட்டி ரசிகர்கள் சிறப்பித்தார்கள் என்றால் அது நடிகை குஷ்பூவுக்கு தான் என்று சொல்ல வேண்டும். அந்த அளவு குஷ்புவின் மீது தீவிர பிரியர்களாகவே ரசிகர்கள் இருந்தார்கள்.

இன்று வரை எவர்கீன் நடிகையாக திரை உலகில் பன்முக திறமையை காட்டி மிகச் சிறப்பான வளர்ச்சியை அடைந்திருக்கும் நடிகை குஷ்பூ நடிகை என்பதோடு மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்கிறார்.

இவர் பெரிய திரை மட்டுமல்லாமல் சின்ன திரையிலும் கலக்கி வரக்கூடிய இவர் நடிக்க வேண்டும் என்ற ஆசைப்பட்ட போது அவரது அப்பா எதற்காக சம்மதித்தார் தெரியுமா? நடித்தால் காசு கிடைக்கும் என்பதற்காக தான் சம்மதித்திருப்பதாக சொல்லி இருக்கிறார்.

அத்தோடு தனக்கு நடிகையாக வேண்டும் என்ற ஆசை எல்லாம் கிடையாது. படத்தில் நடித்த காசு கிடைக்கும் என்பது தான் அவரது நோக்கமாக இருந்தது என ஓப்பனாக சொல்லிய விஷயம் ரசிகர்களின் மத்தியில் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

எல்லாத்துக்கும் பிரபு தான் காரணம்..

ஒரு சமயம் பிரபுவோடு இணைந்து நடித்த படத்தில் ஷூட்டிங் நடந்து கொண்டு இருந்த இடத்தில் இவர் அமர்ந்து கொண்டு இருந்த போது என்னுடைய கன்னத்தை பிடித்து கிள்ளி இட்லி மாதிரி இருக்கு என்று பிரபு சொன்னார்.

இதனை அடுத்து தான் தமிழக இட்லிக்கு குஷ்பூ இட்லி, குஷ்பூ கன்னத்தைப் போல புசுபுசுவென்று பஞ்சு போல இட்லி இருந்ததால் அதை குஷ்பூ இட்லி என்று அழைக்க ஆரம்பித்தார்கள். இதனால் தான் இட்லிக்கு குஷ்பூ இட்லி என்ற பெயர் வந்து பரவியது இதை ஆரம்பித்து வைத்ததே பிரபு தான் என்று நடிகை குஷ்பு கூறி இருக்கிறார்.

மேலும் இது வரை ஏன் குஷ்பூ இட்லி என்று பெயர் வந்தது என்று புரியாமல் தவித்து வந்தவர்களுக்கு இந்த விஷயம் தெரிந்த உடன் ஆச்சரியம் ஏற்பட்டதோடு மட்டுமல்லாமல் இந்த விஷயத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

அவரு தான் ஆரம்பிச்சாரு குஷ்பூ தடாலடி..

தற்போது குஷ்பூ திரைவுலகில் மட்டுமல்லாமல் அரசியலிலும் களம் இறங்கி பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கு குரல் கொடுக்கக் கூடிய வகையில் செயல்பட்டு வருகிறார்.

அப்படிப்பட்ட இவர் எதார்த்தமாக நடந்த விஷயத்தை சொல்லி இருப்பதோடு மட்டுமல்லாமல் குஷ்பூ இட்லி என்று பெயர் வர காரணமே பிரபு தான் என்ற உண்மையை மறைக்காமல் சொன்னதை அடுத்து இந்த விஷயம் இணையங்களில் வைரலாக மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version