குஷ்பூ இட்லின்னு சொல்றதுக்கு மூல காரணமே இந்த நடிகரா..? பலரும் அறியாத பலே சம்பவம்..!

80, 90-களில் தமிழ் சினிமாவில் வடக்கில் இருந்து வந்து தனக்கு என்று ஒரு தனி வட்டாரத்தை அமைத்துக் கொண்டு ரசிகர்களால் கோயில் கட்டி ஆராதனை செய்யப்பட்ட நடிகைகளில் ஒருவர் குஷ்பூ என்பது உங்களுக்கு நன்றாக தெரியும்.

அந்த வகையில் இவர் தமிழில் முன்னணி நடிகர்களாக இருந்த சூப்பர் ஸ்டார் முதல் உலகநாயகன் வரை ஜோடி போட்டு நடித்து பலர் மனதையும் கவர்ந்தவர்.

குஷ்பூ இட்லின்னு சொல்றதுக்கு காரணம்..

குஷ்புவின் ஆதிக்கம் திரையுலகில் வளர வளர மார்க்கெட்டில் விற்கப்படும் பொருட்கள் அனைத்தும் குஷ்புவின் பெயராலேயே விற்கப்பட்டது என்றால் நீங்கள் ஆச்சரியம் அடைவீர்கள். அந்த வகையில் குஷ்புவுக்கு என்று ஒரு தனி கிரேஸ் இருந்ததால் அது மாதிரி செய்யப்பட்டது.

அந்த வகையில் சாதாரணமான இட்லி என்று பெயர் பெற்றிருந்த காலை உணவான இட்லிக்கு குஷ்பூ இட்லி என்ற பெயர் எப்படி வந்தது என்பது குறித்து தற்போது சில விஷயங்கள் கசிந்துள்ளது. அது பற்றி விரிவாக இந்த பதிவில் படிக்க தெரிந்து கொள்ளலாம்.

குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமான நடிகை குஷ்பூ பன்முக திறமையை கொண்டவர். இயக்குனர் சுந்தர் சி யை திருமணம் செய்து கொண்டு எப்போதாவது சின்ன திரையில் தலைகாட்டி வருகிறார்.

சின்னத்தம்பி படத்தில் நடிகர் பிரபுவோடு இணைந்து நடித்ததை அடுத்து மேலும் பல திரைப்படங்களில் பிரபுவோடு இணைந்து நடித்து கிசுகிசுகளுக்கு உள்ளான நடிகை குஷ்பூ மனதில் பட்டதை பட்டென்று பேசக்கூடிய குணம் கொண்டவர்.

இப்போது சினிமாத்துறை மட்டுமல்லாமல் அரசியலிலும் வலம் வரக்கூடிய இவர் தனது அரசியல் வாழ்க்கையை திமுகவில் ஆரம்பித்து காங்கிரஸ், பாஜக என பல்வேறு கட்சிகளின் தாவித் தாவி அரசியல் நகர்வுகளை செய்த வண்ணம் இருக்கிறார்.

மேலும் திருமணத்திற்குப் பிறகு பல காலம் திரை உலகிற்கு நடிப்பில் ஓய்வு கொடுத்த அவர் தற்போது மீண்டும் நடிப்பில் கவனத்தை செலுத்தி வருகிறார். அந்த வகையில் ராம பானம் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

மேலும் தமிழில் விஜயுடன் வாரிசு படத்தில் நடித்திருந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக அவர் நடித்த காட்சிகள் அனைத்தும் படத்தில் இருந்து நீக்கப்பட்டது.

அட..இந்த நடிகரா?..

இதனை அடுத்து தற்போது ஸ்லிம்மாக எவர்கிரீன் நடிகை போல இளம் நடிகைகளுக்கு சவால் விடக்கூடிய வகையில் தனது மேனி அழகை பராமரித்து இருக்கும் நடிகை குஷ்புவுக்கு கோயில் கட்டிய கதையும் உங்களுக்கு தெரியும்.

இந்த சூழ்நிலையில் குஷ்பூ இட்லி எப்படி உருவானது என்பதை நீங்கள் தெரிந்து கொண்டால் ஆச்சரியப்படுவீர்கள்.

குஷ்பூ வட இந்தியாவில் வந்த பெண் என்பதால் சரளமாக தமிழ் பேசத் தெரியாது. அது மட்டுமல்லாமல் மரியாதை கொடுத்து பேச வேண்டும் என்ற விஷயமும் அவருக்கு பழக்கத்தில் இல்லை.

இதனை அடுத்து இவர் ரஜினிகாந்தையும் வாடா என்று சொல்லிவிட்டாராம் .அந்த சமயத்தில் அவர் அருகில் இருந்த நடிகர் பிரபு, குஷ்பூவிடம் இப்படியெல்லாம் சொல்லக்கூடாது என்று அட்வைஸ் செய்திருக்கிறார்.

பலரும் அறியாத சம்பவம்..

அதுக்கு குஷ்பூ லைட் மேன்களை காமித்து இவர்களெல்லாம் இப்படித்தான் வாடா போடா என்று பேசி வருகிறார்கள். ஆனால் நான் ரஜினியை அப்படி கூறினால் என்ன தப்பு என்று கேட்டிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து குஷ்புவின் கன்னத்தைக் கிள்ளி நல்லா இட்லி மாதிரி இருக்கே என்று விளையாட்டாக பிரபு சொல்ல அதிலிருந்து தான் குஷ்பூ இட்லி பிறந்தது என்று உண்மையை அண்மை பேட்டி ஒன்றில் குஷ்புவே பகிர்ந்திருக்கிறார்.

இதனை அடுத்து இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு குஷ்பூ இட்லியின் பெயர் காரணத்தை அறிந்து கொண்ட ரசிகர்கள் அனைவருக்கும் இதைப் பற்றி சொல்லி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version