கொண்டையில் தாழம்பூ பாடல்.. தியேட்டரில் ரசிகர்கள் கொடுத்த கமெண்ட்.. உடம்பெல்லாம் கூசிடுச்சு.. குஷ்பூ ஓப்பன் டாக்..!

தமிழ் சினிமாவில் முதல் படத்திலேயே பெரும் வெற்றியை கொடுத்தவர் நடிகை குஷ்பூ. வட இந்தியாவை சேர்ந்த நடிகை குஷ்பூவிற்கு தமிழில் அப்பொழுது நல்ல வரவேற்பு கிடைத்தது.

அவருக்கு தமிழே தெரியாது என்ற போதும் கூட ரசிகர்கள் பலரும் குஷ்பூவை தனது கனவு கன்னியாகவே நினைத்து வந்தனர். அதனை தொடர்ந்து அவருக்கு தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களுடன் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது.

குஷ்பூ நடித்த திரைப்படங்களில் ரஜினிகாந்துடன் அவர் இணைந்து நடித்த அண்ணாமலை திரைப்படம் அவருக்கு பெரிய வெற்றி திரைப்படமாக அமைந்தது. அந்த திரைப்படத்தில் வரும் அனைத்து பாடல்களும் பெரும் வெற்றியை கொடுத்தது.

அந்த படத்திற்கு இசையமைப்பாளர் தேவா இசையமைத்திருந்தார் பாட்ஷா திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இந்த படத்தை இயக்கியிருந்தார். முக்கியமாக அதில் குஷ்பூவிற்காகவே ஒரு பாடல் எழுதப்பட்டிருந்தது. கொண்டையில் தாழம்பு என்கிற அந்த பாடலை குஷ்பூவிற்காகவே எழுதியிருந்தனர்.

குஷ்பூவிற்கு கிடைத்த வரவேற்பு:

அப்போதே அந்த விஷயத்தை அறிந்து தனக்கும் அந்த மாதிரியே பாடல் வரிகள் வைக்க வேண்டும் என கேட்டிருந்தார் நடிகர் ரஜினி. இதனையடுத்து அந்த பாடலில் ரஜினியின் பெயரும் இணைக்கப்பட்டது. வருஷம் 16 திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை குஷ்பூ.

அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் கமல்ஹாசன், சரத்குமார் மாதிரியான முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்தார். அண்ணாமலை திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் நடித்ததன் மூலமாக அதில் நல்ல வரவேற்பை பெற்றார்.

இவர்கள் இருவரின் ஜோடி பொருத்தத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து மீண்டும் குஷ்பூவும் ரஜினியும் சேர்ந்து மன்னன் திரைப்படத்தில் நடித்தனர். ஆனால் அந்த திரைப்படத்தில் குஷ்பூ ரஜினிக்கு ஜோடியாக நடிக்க வில்லை.

அண்ணாமலையில் வரவேற்பு:

இப்படி ஒரு சில திரைப்படங்களில் தொடர்ந்து குஷ்பூ ரஜினிக்கு ஜோடியாக நடித்து வந்தார். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அவருக்கு சினிமாவில் வரவேற்பு குறைய துவங்கியது. இந்த நிலையில் அண்ணாமலை திரைப்படத்தில் நடிக்கும் போது அதில் நடந்த அனுபவங்களை ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார் குஷ்பூ.

அதில் கொண்டையில் தாழம்பூ பாடலின் வரிகளை கேட்ட உடனே அதற்கு சிரித்து விட்டாராம் குஷ்பூ. இது என்ன தாழம்பூ வாழைப்பூ என்றெல்லாம் பாடல் வரிகள் இருக்கிறது என்று கேட்டிருக்கிறார் குஷ்பூ. அவருக்கு பதில் அளித்த ரஜினிகாந்த் திரையரங்கில் இந்த பாடலுக்கு கிடைக்கப் போகும் வரவேற்பை பாருங்கள் என்று கூறியிருக்கிறார்.

அதனை தொடர்ந்து படம் கமலா தியேட்டரில் வெளியான பொழுது அந்த திரைப்படத்தை பார்க்க நேரில் சென்று இருக்கிறார். ரசிகர்களுடன் இணைந்து அவரும் திரைப்படத்தை பார்க்கும் பொழுது அந்த பாடலுக்கு எக்கச்சக்கமான வரவேற்பு கிடைத்திருக்கிறது.

அதனை பார்த்து பயந்த குஷ்பூ திரையரங்கை விட்டு ஓடி வெளியே வந்து விட்டாராம். அதை தன்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத மகிழ்ச்சியான நிகழ்வு என்று பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார் குஷ்பூ.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version