சிங்கிள் பீஸ்… நீச்சல் உடையில் நடிகை குஷ்பூ..! – ரசிகர்கள் ஷாக்..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

பிரபல நடிகை குஷ்பூ தமிழ் சினிமா ரசிகர்கள் கோயில் கட்டி கும்பிடும் அளவுக்கு பிரபலமாக இருந்த ஒருவர். தற்போது பிரபலமாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது சினிமா மட்டுமல்லாமல் அரசியலிலும் தன்னுடைய பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

இவர் சேராத கட்சி என்ற ஒரு கட்சியே இல்லை என்றுதான் கூறவேண்டும். கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளிலும் உறுப்பினராக சேர்ந்து தற்போது பாரதிய ஜனதா கட்சியின் நட்சத்திர பேச்சாளராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

வெள்ளித்திரையில் கிட்டத்தட்ட அனைத்து முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்து விட்டார் நடிகை குஷ்பூ. சின்னத்திரையிலும் சில காலம் நடித்து வந்தார். இதன் மூலம் தாய்மார்களின் நெஞ்சில் இடம் பிடித்தார் சினிமா அரசியல் இதையெல்லாம் தாண்டி சமீபகாலமாக கடுமையாக உடற்பயிற்சிகள் மற்றும் உணவுக் கட்டுப்பாடுகளை மேற்கொண்டு உடல் எடையை குறைத்து ஒல்லியாக இருக்கிறார் நடிகை குஷ்பூ.

இந்நிலையில் இவருக்கு படவாய்ப்புகளும் வருவதாக தகவல். அதிலும் ஹீரோயினாக நடிக்கும் அளவுக்கு இவருக்கு வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது என கூறுகிறார்கள்.

அந்த வகையில், இயக்குனர் விஜய் ஸ்ரீஜி இயக்கும் புதிய திரைப்படம் ஒன்றில் நடிகை குஷ்பு ஹீரோயினாக நடிக்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. நடிகர் மைக் மோகன் ஹீரோவாக ரீ-என்ட்ரி கொடுத்திருக்கக்கூடிய இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை குஷ்பூ நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

தொடர்ந்து சினிமாவில் எங்க முடிவெடுத்து இருக்கும் நடிகை குஷ்பூ சமீபத்தில் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை எடுத்துக்கொண்டார் தற்பொழுது மருத்துவ ஓய்வில் இருக்கிறார்.

விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சினிமா மற்றும் அரசியல் என இரண்டு தளங்களிலும் தன்னுடைய கருத்தை எந்த ஒரு ஒளிவு மறைவில்லாமல் எடுத்து வைக்கும் துணிச்சல் கொண்ட ஒரு முக்கிய புள்ளியாக நடிகை குஷ்பூ இன்றளவும் இருக்கிறார்.

இளம் வயதில் இவர் நடிக்காத கதாநாயகர்களே இல்லை. இவர் நடிக்காத இந்திய மொழிகளே இல்லை என்றுதான் கூற வேண்டும். அந்த அளவுக்கு தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் இந்தி மராத்தி என அனைத்து மொழிப் படங்களிலும் தன்னுடைய பங்களிப்பை கொடுத்திருக்கிறார்.

மேலும் இளம் வயதில் எந்த அளவுக்கு கவர்ச்சியாக நடிக்க முடியுமோ..? அந்த அளவுக்கு கவர்ச்சியாக நடித்திருக்கிறார். அதிலும் தமிழ் சினிமாவின் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான சிங்கார வேலன் திரைப்படத்தில் படு கிளாமரான காட்சிகளில் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார்.

இந்நிலையில் இளம் வயதில் நீச்சல் உடையில் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் நடிகை குஷ்பூவா இது..? என்று வாயை பிளந்து நின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …