“வீட்டுத் தோட்டத்திற்கு ஏற்ற குத்து அவரை ..!” – இப்படி வளர்த்துப் பாருங்க..!

இன்று பலரும் தங்களது வீட்டில் இருக்கக்கூடிய சின்ன பகுதியில் கூட தோட்டங்களை வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் வீட்டு தோட்டத்தில் மாடி தோட்டமும் முக்கிய இடம் பிடித்து உள்ளது.

 இதில் அவர்களுக்கு தேவையான காய்கறிகளை அவர்களே பயிரிட்டு வளர்த்து  வருகிறார்கள். இதன் மூலம் ஒரு ஆரோக்கியமான உணவை உட்கொள்ளக்கூடிய வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்துள்ளது.

அந்த வகையில் இன்று இந்த கட்டுரையில் உங்கள் வீட்டுத் தோட்டத்தில் குத்து அவரைச் செடியை எப்படி வளர்ப்பது என்பதை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

குத்து அவரைச் செடி வளர்க்கும் முறை

பொதுவாக அவரையில் கொடி அவரை, கொத்து அவரை என்று இரண்டு வகைகள் காணப்படுகிறது.இதில்  கொடி அவரைக்குத்தான் நாம் பந்தல் போட வேண்டும். இந்த குத்து அவரை பந்தல் போட வேண்டிய அவசியம் கிடையாது. அப்படியே மண்ணில் இருந்தோ அல்லது தொட்டியில் இருந்தோ நாம் வளர்க்க முடியும்.

சந்தையில் கிடைக்கக்கூடிய விதைகளை வாங்கி வந்து அவற்றை நீங்கள் தொட்டிகளில் போட்டு செடிகளாக மாற்றலாம். செடிகள் வளர்ந்த பின்பு இந்த செடிகளை நீங்கள் தனியாக நடவு செய்து போதிய அளவு நீரை கொடுத்தால் போதுமானது.

 மேலும் இந்த அவரைச் செடியை நீங்கள் விதைக்கும் போது அடிக்கு ஒரு அடி என்று இடைவெளியை விட்டு விதையுங்கள். அப்படி விதைப்பதன் மூலம் உங்களுக்கு ஒரு கிளையில் பத்திலிருந்து பதினைந்து காய்கள் வரை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

 பொதுவாக அவரைச் செடியை அதிகமாக தாக்கக்கூடிய பூச்சி என்றால் அது அஸ்வினி பூச்சிதான். இதனை வராமல் பாதுகாக்க நீங்கள் உங்கள் வீட்டிலேயே இயற்கை பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தி நீங்கள் பூச்சிகளை விரட்ட முடியும்.

 அதுமட்டுமல்லாமல் இந்த செடிகளுக்கு தேவையான உரங்களை நீங்கள் கொடுப்பதின் மூலம் செடி செழித்து வளர்வதோடு உங்களுக்கு தேவையான அருமையான அவரைத் காயையும் கொத்துக்கொத்தாக கொடுக்கும்.

நீங்களும் இதுபோல உங்கள் தோட்டத்தில் குத்து அவரையே நட்டு அதன் மூலம் பயனடைந்தால் எங்களுக்கு உங்களது கருத்துக்களை தெரிவிக்கவும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …