அம்மா.. ஆண்ட்டி அடிச்சிட்டாங்க.. நயன்தாரா மீது பக்கத்து வீட்டு குட்டீஸ் புகார்.. எப்போ காலி பண்ணுவாங்க..

தங்கத்தாமரை மகளே என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப தனது அற்புத நடிப்பால் ரசிகர்களின் மனதை கவர்ந்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற உச்சகட்ட அந்தஸ்தில் இருக்கும் நடிகை நயன்தாரா கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர்.

ஆரம்ப நாட்களில் நடிகை நயன்தாரா திரைப்படங்களில் நடித்ததை அடுத்து தமிழில் நடிக்கக்கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது. அந்த வகையில் தமிழில் முதல் முதலில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரோடு இணைந்து ஐயா திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா..

முதல் படமே சூப்பர் டூப்பர் வெற்றியை தந்ததை அடுத்து ரசிகர்களின் கனவு கன்னியாக மாறிய இவர் தமிழில் முன்னணி நடிகர்களோடு இணைந்து பல படங்கள் பண்ணியிருந்தாலும் தல அஜித்தோடு இணைந்து நடித்த பில்லா திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தார்.

இதனை அடுத்து பல பட வாய்ப்புகள் இவருக்கு கிடைத்ததை அடுத்து அந்த படங்களில் பக்குவமாக தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்ட இவர் தென்னிந்திய மொழி திரைப்படங்கள் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் கோலோச்சி வருகிறார்.

அந்த வகையில் அண்மையில் இவர் அட்லி இயக்கத்தில் வெளி வந்த ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கானோடு இணைந்து நடித்து பாலிவுட்டில் அடி எடுத்து வைத்ததை அடுத்து இவருக்கு அங்கும் பல பட வாய்ப்புகள் கிடைத்துள்ளது.

திரை உலகில் சிரமப்பட்டு இன்று எந்த அளவுக்கு உயர்ந்து இருக்கக்கூடிய இவர் படங்களில் நடிப்பதோடு நின்று விடாமல் தொழில் முனைவோராக பல்வேறு தொழில்களில் முதலீடுகள் செய்து பெண்களுக்கு முன் உதாரணமாக இருந்து வருகிறார்.

அம்மா.. ஆன்ட்டி அடிச்சுட்டாங்க..

இதனை அடுத்து இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் வாடகை தாயின் மூலம் இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின்னரும் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி கணவன் மற்றும் குழந்தைகளோடு இருக்கக்கூடிய புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவார்.

இந்நிலையில் நடிகை நயன்தாரா தற்போது வசித்துக் கொண்டிருக்கும் அப்பார்ட்மெண்ட் ஒன்றில் சிறுவர்கள் சிலர் அவர்களுடைய பெற்றோர்களிடம் நயன்தாரா குறித்து புகார் கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இதனை யூட்யூப் பிரபலம் வலைப்பேச்சு அந்தணன் தன்னுடைய சமீபத்திய வீடியோ ஒன்றில் பதிவு செய்திருக்கிறார்.

இதில் அவர் கூறியதாவது, நடிகை நயன்தாரா குறிப்பிட்ட அப்பார்ட்மெண்ட்டிற்கு வந்த புதிதில் அப்பாயிண்ட்மெண்ட் வாசிகள் அனைவரும் பெருமையாக தங்களை உணர்ந்து இருக்கிறார்கள்.

மேலும் தங்களுடைய அப்பார்ட்மெண்டில் தான் நயன்தாராவை வசிக்கிறார் என்று தங்களுடைய உறவினர்களுக்கு போன் போட்டு பெருமையாக பேசி இருக்கிறார்கள்.

இதனை அந்த அப்பார்ட்மெண்ட் வாசி ஒருவரே பேச்சு வாக்கில் என்னிடம் தெரிவித்தார். ஆனால், தற்போது எப்போது தான் இந்த அப்பார்ட்மெண்ட்டை விட்டு காலி செய்வார்கள் என்ற சூழ்நிலையில் அனைவரும் இருக்கிறார்கள்.

நயன்தாரா மீது புகார் சொன்ன குட்டிஸ்..

ஏனென்றால் நயன்தாரா இந்த அபார்ட்மெண்டில் இருப்பது அனைவருக்குமே ஒரு மிகப்பெரிய ஒரு தர்ம சங்கடமான சூழ்நிலையாக உள்ளது. அநேக நேரங்களில் அவர் படப்பிடிப்புக்கு சென்று விடுகிறார். வீட்டில் இருப்பதில்லை என்றாலும் படப்பிடிப்பு இல்லாத நாட்களில் ஒட்டு மொத்த அப்பார்ட்மெண்டுமே அவருடையது போன்ற சூழ்நிலை தான் நிலவுகிறது.

ஒரு முறை நீச்சல் குளத்திற்கு அருகில் தன்னுடைய குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார் நடிகை நயன்தாரா. அப்போது அந்த அப்பார்ட்மெண்ட்டில் வசிக்கும் சில குழந்தைகள் செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

அப்போது ஒரு சிறுவனின் செல்போன் கேமரா தன்னை நோக்கி இருப்பதை பார்த்த நடிகை நயன்தாரா அவனை அழைத்து அவனுடைய கைப்பேசியை பிடுங்கி தன்னை பதிவு செய்து வைத்திருந்த அனைத்து வீடியோ புகைப்படம் அனைத்தையும் டெலிட் செய்திருக்கிறார்.

அந்த சிறுவன் நிஜமாகவே நயன்தாராவை படம் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் படம் பிடிக்கவில்லை. அங்கு இருந்து தன்னுடைய நண்பர்களை படம் பிடித்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருக்கிறார். ஆனால், நயன்தாரா செய்த அந்த செயல் அந்த சிறுவனை மிகுந்த மன அழுத்தத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

இப்படி தொடர்ச்சியாக நடிகை நயன்தாரா மீது பக்கத்து வீட்டு குட்டீஸ் புகார் கொடுத்த வண்ணம் இருக்கிறார்கள். இதனால் அந்த அப்பார்ட்மெண்டில் இருக்கும் வாசிகள் அவர்களுடைய சங்கத்தில் புகார் கொடுத்திருப்பதாக தகவல்கள் வந்திருக்கிறது.

அத்துடன் ஆரம்பத்தில் நயன்தாரா தங்களுடைய அப்பார்ட்மெண்ட்டுக்கு வந்திருப்பதை நினைத்து பெருமைப்பட்ட அனைவருமே இப்போது எப்போ காலி செய்து செல்வார்கள் என்ற மனநிலையில் இருக்கிறார்கள் என்று பதிவு செய்திருக்கிறார் வலைப்பேச்சு அந்தணன்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version