என்னால Bed லாம் Share பண்ண முடியாது.. நடிகை குட்டி பத்மினி ஓப்பன் டாக்…!

சினிமாவிலும் நடித்து, சீரியல்களிலும் பங்களிப்பை செய்துவரும சில நடிகைகள் இருக்கின்றனர். உதாரணமாக ராதிகா, குஷ்பு, குட்டி பத்மினி உள்ளிட்டோரை சொல்ல முடியும். வண்ணத்திரையை போலவே, சின்னத்திரையிலும் தனது பங்களிப்பை அளித்து வருபவர்களில் மிக முக்கியமானவர் குட்டி பத்மினி.

குட்டி பத்மினி

சமீபத்தில் ஒரு நேர்காணலில் குட்டி பத்மினி கூறியதாவது,
மூன்று மாத குழந்தையாக சினிமாவில் நடிக்க வந்த குழந்தை நான். குழந்தையும் தெய்வமும் படம் நடிக்கும்போது 8 வயது சிறுமியாக இருந்தேன்.

நான் நடித்த காலகட்டத்தில் கேரவன் வசதி எல்லாம் கிடையாது. எம்ஜிஆர் சிவாஜி எல்லோருமே மரத்தடியில்தான் இருப்பார்கள். படப்பிடிப்பு தளமே ஜாலியாக இருக்கும்.

துரோகங்களை, வலிகளை சந்தித்தவள்

நான் சினிமாவில் நிறைய துரோகங்களை வலிகளை சந்தித்து இருக்கிறேன். என் கணவருக்காக நிறைய விஷயங்களை விட்டுக் கொடுத்தேன். நிறைய விதங்களில் நான் நஷ்டங்களை சந்தித்தேன். ஆனால் என் கணவர், குட்டி பத்மினி கணவர் என்பதை விட, என் மனைவிதான் குட்டி பத்மினி என்று கூறப்பட வேண்டும் என்ற ஈகோவில் இருந்தார்.

இதையும் படியுங்கள்: “படிக்கவே தனி தைரியம் வேணும்..” மரணிக்க சில மணி நேரம் முன்பு பத்மினி கூறிய அந்த வார்த்தை.. சரோஜா தேவி கண்ணீர்…!

என் 2வது கணவரை பிரிந்த பின், முதல் கணவருக்கு உதவியதற்கு நிறைய காரணங்கள் இருக்கிறது. 21வது வயதில் சீரியலில் நடித்த போது, முதியோர் இல்லத்தை பார்த்து, நானும் சினிமா துறையில் இருப்பவர்களுக்காக முதியோர் இல்லம் துவங்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.

என் முதல் கணவர்

அப்படி மற்றவர்களுக்கு உதவும் எண்ணம் கொண்ட நான், நோய்வாய்பட்டு துன்பப்படும் நிலையில் இருந்த என் கணவருக்கு எப்படி உதவாமல் இருக்க முடியும்? அவர் என் கணவர். அவருடன் வாழ்ந்திருக்கிறேன். ஒரு பெண்ணை பெற்றிருக்கிறேன். பிரிவு என்பது ஒருவரால் மட்டுமே வருவதில்லை என்ற பக்குவம் எனக்கு இருந்தது.

இதையும் படியுங்கள்: “நீ பண்ணா.. செத்துப்போனது கூட எந்திரிச்சிடும்..” இன்னைக்கு ஒரு நாள் மட்டும்.. VJ மகாலட்சுமி குறித்து ரவீந்தர்..!

அமெரிக்காவில் இருந்து என் மகள் போன் செய்தாள். அப்பாவுக்கு நிறைய அடிபட்டு இருக்கிறது. ரத்தம் நிறைய போயிருக்கிறது என்றாள். உடனடியாக போய் பார்த்து அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தேன். அவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி இருந்தார்.

படுக்கையை பகிர முடியாது

அதனால் எங்கள் அலுவலகத்தில் ஒரு அறை கீழே இருந்தது. அங்கு அவரை தங்க வைத்தேன். என்னால் அவருக்கு என் படுக்கையை பகிர முடியாது. அந்த பிரிவு பிரிவுதான். அதை மாற்ற முடியாது. மனசு மாறிவிட்டது.

இந்த நேரத்தில் என் 2வது கணவரை பிரிந்திருந்தேன். அவர் என்ன நினைத்தாலும் அதுபற்றி எனக்கு கவலையில்லை என்று கூறிவிட்டேன் என்று அந்த நேர்காணலில் பல விஷயங்களை மனம் விட்டு பகிர்ந்து இருக்கிறார் நடிகை குட்டி பத்மினி.

முதல் கணவராக இருந்தாலும், மனசால் பிரிந்த பின், என்னால Bed லாம் Share பண்ண முடியாது என்று நடிகை குட்டி பத்மினி ஓப்பனாக அதில் பேசியிருக்கிறார்.

https://www.youtube.com/watch?v=T-0LT4fHfXs

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version