நடிகையான மகளுக்கு சரக்கு ஊத்தி கொடுத்த அம்மா நடிகை.. காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகி போயிடுவீங்க..!

தமிழ் ஹிந்தி என்று இரண்டு மொழிகளிலும் பிரபலமான நடிகையாக ஸ்ரீதேவி இருந்து வருகிறார். தமிழில் 16 வயதினிலே திரைப்படம் மூலமாக மக்கள் மத்தியில் அதிக பிரபலமானவர் நடிகை ஸ்ரீதேவி. ஆனால் அதற்கு முன்பே அவர் நிறைய திரைப்படங்களில் நடித்து வந்ததாக கூறப்படுகிறது.

1967 முதலே குழந்தை நட்சத்திரமாக ஸ்ரீதேவி நிறைய திரைப்படங்களில் நடித்து வந்திருக்கிறார். 1967 இல் தமிழில் வந்த கந்தன் கருணை திரைப்படத்தில் முருகன் கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவிதான் நடித்திருப்பார்.

அதற்கு பிறகு துணைவன் என்கிற திரைப்படத்திலும் முருகன் கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவி நடித்திருந்தார். அதேபோல நிறைய திரைப்படங்களில் குழந்தை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். எம்ஜிஆர் திரைப்படத்தில் கூட ஸ்ரீதேவி நடித்திருக்கிறார்.

குழந்தை நட்சத்திரம்:

கமல்ஹாசன் போலவே ஸ்ரீ தேவியும் சிறு வயது முதலே பிரபலமான நடிகையாக இருந்தவர் ஆவார். பல படங்களில் நடித்த பிறகுதான் இவருக்கு 16 வயதினிலே திரைப்படத்தில் வாய்ப்புகள் கிடைத்தது.

16 வயதினிலே திரைப்படத்திற்கு முன்பே மூன்று முடிச்சு கவிக்குயில் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார் ஸ்ரீதேவி. கவிக்குயில் திரைப்படத்தில் ரஜினிக்கு தங்கையாக ஸ்ரீதேவி நடித்தார். ஆனால் 16 வயதினிலே திரைப்படம்தான் அவருக்கு முக்கியமான திரைப்படம்.

இந்தி சினிமாவில் 16 வயதினிலே திரைப்படம் ரீமேக் ஆகி வெளியான பொழுது அந்த திரைப்படத்திற்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. கிட்டத்தட்ட அது தோல்வியை கண்டது. பாலிவுட் சினிமா அப்பொழுது பெரும் மார்க்கெட் கொண்ட சினிமாவாக இருந்தது.

பாலிவுட்டில் கதாநாயகி ஆவது என்பது சாதாரண விஷயம் கிடையாது முக்கியமாக கோலிவுட்டில் இருந்து பாலிவுட்டிற்கு வரும் நடிகைகளை கொஞ்சம் எகத்தாளமாகவே நடத்தி வந்தனர். இந்த நிலையில் பாலிவுட்டில் ஸ்ரீதேவிக்கு பெரும் போட்டி நடிகையாக இருந்தவர் ஜெயப்பிரதா.

பாலிவுட்டில் போட்டி:

தொடர்ந்து ஸ்ரீதேவி படங்களில் வெற்றிபெறும் போது அது குறித்து சர்ச்சையான கருத்துக்களை ஜெயப்பிரதா கூறி வந்தார். இருந்தாலும் அவரையும் தாண்டி பாலிவுட்டில் தனக்கான இடத்தை பிடித்தார் ஸ்ரீதேவி.

அதற்கு பிறகு தமிழ் சினிமாவை விடவும் பாலிவுட்டில்தான் அவருக்கு அதிகமாக வாய்ப்புகள் வந்தது. எனவே பாலிவுட் தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட ஸ்ரீதேவி அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். தற்சமயம் அவரது மகள் கூட பாலிவுட்டில் தான் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் குடி பழக்கத்தால்தான் ஸ்ரீதேவி இறந்தார் என்று அவரது இறப்பு குறித்து ஒரு பேச்சு உண்டு. இது குறித்து ஸ்ரீதேவியின் பால்ய தோழியான குட்டி பத்மினி தனது பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதில் அவர் கூறும் பொழுது சிறு வயது முதலே ஸ்ரீதேவியின் தாய் ஸ்ரீதேவிக்கு மதுவை ஊற்றி கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

ஸ்ரீதேவிக்கு அவர் தினசரி ஒயின் கொடுப்பார். அதை குடித்தால் உடலுக்கு நல்லது என்று யாரோ கூறியதன் காரணமாக அவரே ஸ்ரீதேவிக்கு அதை கொடுத்து வந்தார். ஆனால் ஒரு கட்டத்திற்கு பிறகு அதுவே ஸ்ரீதேவிக்கு தீமையாக முடிந்தது. அவர் ஒயின் குடிக்காமல் இருக்க முடியாது என்கிற நிலைக்கு தள்ளப்பட்டார் அதற்கு பிறகு அதற்கு அடிமையானார் ஸ்ரீதேவி என்று கூறுகிறார் குட்டி பத்மினி.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version