நடிகை லட்சுமி மேனன் வெப் சீரிஸ் ஒன்றில் ஹீரோயினாக ஒப்பந்தமாகி இருக்கிறார் ட்ரஷர் ஹண்ட் ஜானரில் உருவாக உள்ள இந்த வெப் சீரிஸில் நடிகை லட்சுமிமேனன் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.
தமிழ் தெலுங்கு மலையாளம் என ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் இந்த வெப் சீரிஸ் தயாரிப்பு தயாராக இருக்கிறது. புதுமுக இயக்குனர் இயக்க உள்ள இந்த வெப் சீரிஸில் முதன்முறையாக நீச்சல் உடைகளும் சில காட்சிகளில் நடித்த சம்மதம் தெரிவித்திருக்கிறார் நடிகை லட்சுமிமேனன் என்று கூறுகின்றனர்.
இதற்காக தன்னுடைய உடல் எடையை கணிசமாக குறைத்து இருக்கிறார் லட்சுமிமேனன் என்று கூறப்படுகிறது. தமிழில் சுந்தரபாண்டியன் என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை லட்சுமிமேனன் அதனை தொடர்ந்து நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் உருவான கும்கி திரைப்படத்தில் நடித்தார்.
ஆனால் இவர் நடித்த முதல் திரைப்படமான சுந்தரபாண்டியன் ரிலீஸ் ஆகும் முன்பே கும்கி திரைப்படம் வெளியானது. இதனால் கும்கி திரைப்படம் லட்சுமிமேனனின் அறிமுக படமாக அமைந்தது.
இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. இதனால் இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. இவர் நடித்த படங்கள் அனைத்துமே வரிசையாக வெற்றி படங்களாக அமைந்தன.
எனவே ராசியான நடிகை என்று அடையாளத்துடன் தமிழ் சினிமாவை கலக்கி வந்தார் நடிகை லட்சுமிமேனன். ஒரு கட்டத்தில் தனக்கான பட வாய்ப்புகள் குறை தொடங்கியதை தொடர்ந்து தன்னுடைய படிப்பை தொடர்வதற்காக தன்னுடைய சொந்த ஊருக்கு சென்ற இவர் மீண்டும் சினிமாவுக்கு திரும்பவே இல்லை.
ஏனென்றால் எதிர்பார்த்தபடி இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை எனவே வாய்ப்பு ஏற்றுக் கொண்டு நடிப்பது என்ற முடிவில் இருக்கிறார். இதன் மூலம் மீண்டும் சினிமா வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையிலும் இருக்கிறார் லட்சுமிமேனன்.
கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு ரசிகர்கள் மத்தியில் மீண்டும் பிரபலமாக வேண்டும் என்று முடிவில் இருக்கும் லட்சுமிமேனன் முதன் முறையாக நீச்சல் உடைகளும் சில காட்சிகளில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. இதனை அறிந்த ரசிகர்கள் ஏக்கத்துடன் இந்த வெப்சீரிஸின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு குறித்து காத்து கிடக்கிறார்கள்.