இணையத்தில் வெளியான நடிகை லட்சுமி மேனன் வீடியோ.. அதிர்ச்சியில் திரையுலகம்..!

தமிழ் சினிமாவில் மிகப் குறைந்த படங்களில் நடித்தாலும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டால், அவர்களுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு சினிமாவில் கிடைத்து விடுகிறது.

அவர்கள் தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் ஆசைப்பட்டாலும், அவர்களுக்கான வாய்ப்பு தொடர்ந்து சினிமாவில் கிடைத்தால் மட்டுமே, அவர்களால் திரையில் ரசிகர்கள் முன்னால் தோன்ற முடியும்.

இல்லையென்றால் அவர்கள் சினிமாவை விட்டு வெளியேற வேண்டிய சோகமான முடிவுதான் ஏற்படுகிறது.

லட்சுமி மேனன்

கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்தவர் நடிகை லட்சுமி மேனன். பிரபு சாலமன் இயக்கிய கும்கி படத்தில், தமிழில் அறிமுகமானார். நடிகர் பிரபு மகன் விக்ரம் பிரபுவும் கும்கி படத்தில் தான் அறிமுகமானார்.

சிறந்த இசையில் மிகச் சிறந்த பாடல்கள், நல்ல திரைக்கதை, கும்கி யானையை மையப்படுத்திய கதை என, மிகப்பெரிய அளவில் கும்கி வெற்றி பெற்றது.

லட்சுமிமேனன் ஒரு நல்ல நடிகை என்ற அறிமுகம் முதல் படத்திலேயே கிடைத்தது. அதைத் தொடர்ந்து முத்தையா இயக்கத்தில், சுந்தரபாண்டியன் என்ற படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக மிகச் சிறப்பாக நடித்திருந்தார் லட்சுமி மேனன்.

கும்கி

கும்கி படத்தில் நடித்ததற்காக தென்னிந்திய அளவில் சிறந்த அறிமுக நடிகை என்ற பிலிம் பேர் விருது பெற்றார் லட்சுமிமேனன். அதேபோல் ஆனந்த விகடன் சிறந்த அறிமுக நடிகை விருதை அவருக்கு வழங்கியது.

இதைத்தொடர்ந்து விஷாலுடன் பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட படங்களில் நடித்த போது விஷாலும் லட்சுமிமேனனும் மிக நெருக்கமாக பழகி வருகிறார்கள், இருவரும் காதலிக்கிறார்கள் என்ற சினிமா வட்டாரத்தில் கிசுகிசு எழுந்தது. மிக விரைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.

விஷாலுடன் காதல் இல்லை

ஆனால் அப்படி எந்தவிதமான உண்மையும் இல்லை. நிச்சயமாக காதல் எங்களுக்குள் இல்லை என்று விஷாலும் லட்சுமி மேனனும் ஒரு கட்டத்தில் வெளிப்படையாக பேசி, அந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

தொடர்ந்து கொம்பன், றெக்க, புலிக்குத்தி பாண்டியன், வேதாளம் உள்ளிட்ட சில படங்களில் நடித்த லட்சுமி மேனன், பிறகு தமிழ் சினிமாவில் மொத்தமாக மார்க்கெட் இழந்து விட்டார். சில ஆண்டுகளாக அவரை திரையில் காண முடியவில்லை.

யோகிபாபுவுக்கு ஜோடி

சமீபத்தில் வந்த ஒரு தகவலின் படி அவர் காமெடி நடிகர் யோகி பாபுவுக்கு ஒரு படத்தில் ஜோடியாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

நடன வீடியோ வைரல்

இந்நிலையில் நடிகை லட்சுமி மேனனின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 27 வயதில், லட்சுமி மேனன் நடனமாடும் அந்த வீடியோவை பார்க்கும் ரசிகர்கள், இவ்வளவு பெரிய உடம்புடன் இருக்கும் லட்சுமிமேனன், இனிமேல் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்க முடியாது.

அம்மா கேரக்டரில்…

வேண்டுமென்றால் அம்மா கேரக்டரில் நடிக்கலாம் என்று பங்கம் செய்து கலாய்த்து வருகின்றனர்.

ஏனெனில் மிகவும் குண்டான உடல்வாகுடன் அவர் இருப்பதால் பலரும் இப்படி கிண்டல் செய்து வருகின்றனர். நடிகைகள் ஸ்லிம்மாக இருக்கும் வரைக்கும்தான் அவர்களுக்கு நாயகி வேடம். உடல் பருத்து பெருத்து விட்டால், அவர்களுக்கு அம்மா, அக்கா, அண்ணி, அத்தை, மாமியார் வேடங்கள் தான் கிடைக்கும்.

இணையத்தில் வெளியான நடிகை லட்சுமி மேனன் வீடியோவை பார்த்து, இவ்வளவு குண்டாகி விட்டாரே என திரையுலகம் அதிர்ந்து போயுள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version