தன்னை விட 21 வயசு அதிகமான நடிகருடன் லட்சுமி மேனன் லிப்லாக்… அம்பலமான உண்மை..!

கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்து படையெடுத்து இங்கு பிரபலமான நட்சத்திர நடிகையாக மார்க்கெட் பிடித்த நடிகைகள் பல பேர் இருக்கிறார்கள்.

அதிலும் குறிப்பாக நயன்தாரா, வித்யா பாலன், அமலாபால், மஞ்சுவாரியர், மாளவிகா மோகனன், மகிமா நம்பியார், மீரா ஜாஸ்மின் உள்ளிட்ட பல நடிகைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

நடிகை லட்சுமி மேனன்:

அந்த லிஸ்டில் இருப்பவர்தான் நடிகை லட்சுமி மேனன் .குழந்தை பருவமாக பள்ளியில் படிக்கும் போது ஹீரோயின் ஆக ஆகிவிட்டார் நடிகை லட்சுமிமேனன்.

இவரது தந்தை ராமகிருஷ்ணன் மற்றும் தாய் நடன ஆசிரியர் உஷா ஆகியோரின் மகளாக பிறந்த லட்சுமிமேனனுக்கு சிறுவயதிலிருந்தே நடனம் ஆடுவதில் அதிக ஆர்வம் கொண்டவர்.

குறிப்பாக பரதநாட்டிய கலைஞராக இருந்தார். மேலும் பாடகராகவும் தனது திறமையை வெளிப்படுத்தி வந்தார் .

இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பரதநாட்டியம் ஆடியதன் மூலமாக அவருக்கு திரைப்பட வாய்ப்பு கிடைத்தது .

ஹீரோயினாக அறிமுகம்:

முதன் முதலில் மலையாள திரைப்படத்தில் நடித்த நடிகையாக அறிமுகமானார். அந்த திரைப்படம் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த ரகுவிண்டெ சுவந்தம் ரசியா என்ற திரைப்படம் தான்.

அதில் கிடைத்த அறிமுகத்தை வைத்து அவருக்கு தமிழ் திரைப்படங்களில் வாய்ப்பு தேடி வந்தது. முதன் முதலில் 2012 ஆம் ஆண்டு சுந்தரபாண்டியன் திரைப்படத்தில் அர்ச்சனா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் .

முதல் படத்திலேயே சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான விருதை பெற்று கௌரவிக்கப்பட்டார். அதை அடுத்ததாக கும்கி திரைப்படத்தில் நடித்து மாபெரும் ஹிட் கொடுத்தார்.

அந்த திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருதும் பெற்றிருந்தார். தொடர்ந்து குட்டி புலி, மஞ்சப்பை, பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், ஜிகர்தண்டா,கொம்பன் ,றெக்க, புலிகுத்தி பாண்டி உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்த பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார்.

இங்கு நட்சத்திர நடிகையாக வளர்ந்து வந்த வேகத்தில் திடீரென அவரது மார்க்கெட் குறைய ஆரம்பித்தது. காரணம் அவர் சினிமாவில் பீக்கில் இருந்தபோதே படிப்பில் கவனத்தை செலுத்தப் போவதாக கூறிவிட்டு கிடைத்த வாய்ப்புகளை தவற விட்டார்.

சரசரவென குறைந்த மார்க்கெட்:

இந்த சமயத்தில் அவருக்கு மார்க்கெட் குறைந்து போனது. பின்னர் சில வருடங்களுக்கு ஒரு பிறகு மீண்டும் திரைப்பட வாய்ப்புகளை பெற வேண்டும் என்பதற்காக தனது சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட ஆரம்பித்தார்.

ஆனால், அவர் உடல் பருமனாகி விட்டது ரசிகர்கள் பலரும் ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். இந்நிலையில் தற்போது சமீபத்தை பேட்டி ஒன்றிய சசிகுமார் லட்சுமிமேனனுடன் லிப் லாக் காட்சி குறித்து பேசி இருக்கிறார்.

சசிகுமார் உடன் லிப்லாக்:

அதாவது குட்டி புலி படத்தில் லட்சுமிமேனன் உடன் லிப் லாக் ஆட்சி இருக்கிறது என இயக்குனர் கூறினார். ஆனால் நான் அந்த காட்சியில் நடிக்க மாட்டேன் என சொல்லிவிட்டேன் .

அதன் பிறகு அந்த காட்சியை மாற்றி விட்டார்கள். காரணம் ஹீரோவுக்கு முத்தம் கொடுப்பது போல் படம் பார்ப்பவர்களுக்கு புரிய வேண்டுமே தவிர உண்மையிலேயே முத்த காட்சியெல்லாம் இருக்கக் கூடாது.

அது அவசியமே இல்லை. எனவே சில கிமிக்ஸ் செய்து அந்த லிப் லாக் காட்சியை நாங்கள் எடுத்தோம் என சசிகுமார் கூறியிருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version