எனக்கு ஒருத்தனை பிடிச்சு போயிட்டா நேரா போய் இதை கேட்பேன்.. லட்சுமி மேனன் ஓப்பன் டாக்..!

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை லட்சுமிமேனன் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஆரம்ப காலங்களில் மலையாள படத்தில் நடித்த இவர் ரகுவிண்டெ சுவந்தம் ரசியா என்ற திரைப்படத்தில் 2011 ஆம் ஆண்டு நடித்தார்.

இதனை அடுத்து இவர் சுந்தர பாண்டியன் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்ததை அடுத்து தமிழ் ரசிகர்களின் மத்தியில் பெரிய அளவு பிரபலம் ஆனார். இதனை அடுத்து தமிழ் திரைப்படங்களில் நடிக்கக் கூடிய வாய்ப்பு இவருக்கு தேடி வந்தது.

நடிகை லட்சுமி மேனன்..

சுந்தர பாண்டியன் திரைப்படத்தில் நடித்ததை அடுத்து கும்கி படத்தில் நடித்த இவர் தனது எதார்த்த நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். எப்போதும் அலட்டிக் கொள்ளாமல் கவர்ச்சி காட்டாமல் நடிக்கக்கூடிய இவரது நடிப்பை பலரும் பாராட்டி இருந்தார்கள்.

இதனை அடுத்து 2013- ஆம் ஆண்டு குட்டி புலி, மஞ்சப்பை, சிற்பி, பாண்டியநாடு, வசந்தகுமாரன் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும் 2014-இல் நான் சிகப்பு மனிதன், ஜிகர்தண்டா, சிப்பாய், அவதாரம் என தொடர்ந்து பிஸியாக படங்களில் நடித்த இவர் 2021-ஆம் ஆண்டுக்குப் பிறகு எங்கே இருக்கிறார் என்று கேட்க கூடிய அளவு திரையிலிருந்து விலகி விட்டார்.

இதற்கு காரணம் மேற்படிப்புக்கு சென்றதை அடுத்த தான் இவர் திரையுலகில் நடிக்க முடியாமல் போனது என்று சொல்லி இவர் தற்போது மீண்டும் நடிக்க இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்து விட்டார்.

ஒருத்தன பிடிச்சு போயிட்டா நேரா போய் கேட்பேன்..

சமூக வலைத்தளங்களில் படுபிசியாக இருக்கக் கூடிய இவர் அடிக்கடி வண்ண வண்ண உடைகளை அணிந்து ரசிகர்களை கவரக் கூடிய வகையில் புகைப்படங்களை வெளியிடுவார்.

அந்த வகையில் இவர் எப்போது புகைப்படங்களை வெளியிடுவார் என்று ஒரு ரசிகர் கூட்டமே காத்திருக்கும்.

இதனை அடுத்து அண்மை பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட லட்சுமிமேனன் பேசிய பேசானதே இணையங்களில் தற்போது வைரலாக மாறி வருகிறது.

அப்படி அந்த பேட்டியில் அவர் என்ன பேசினார் என்பதை இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

ஓபனாக பேசிய லட்சுமிமேனன்..

நடிகை லட்சுமிமேனன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் பேசிய அவரிடம் உங்களுக்கு ஒருவரை பிடித்து விட்டால் அதை எப்படி வெளிப்படுத்துவீர்கள்.

மேலும் உங்கள் காதலை எப்படி வெளிப்படுத்துவார்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த லட்சுமிமேனன் நான் நேரடியாக போய் சொல்லி விடுவேன். ஒருவரை எனக்கு பிடித்திருக்கிறது என்றால் நேரடியாகவே உங்களை எனக்கு பிடித்திருக்கிறது என சொல்லி விடுவேன். சொல்லியும் இருக்கிறேன்.

அப்படி சொல்லி அவருடன் எனக்கு காதல் ஏற்பட்டது. பள்ளியில் படிக்கும் போது அவரை நான் காதலித்தேன். அவரிடம் நிறைய பேசியிருக்கிறேன்.

ஆனால் டேட்டிங் சென்றது கிடையாது. தொலைபேசியில் பேசுவதோடு சரி அதன் பிறகு படம் தொடர்ந்து சினிமா வாய்ப்பு என படிப்பை என்னால் தொடர முடியவில்லை

அது அதே போல காதலையும் என்னால் தொடர முடியவில்லை என பேசி இருக்கிறார் நடிகை லட்சுமி மேனன். இவருடைய இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரல் ஆகிவிடுகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version