அசர வைக்கும் அளவில்…. உடல் எடையை பக்காவாக குறைத்த லக்ஷ்மி மேனன்…!!

 இயக்குனர் வினயன் மூலம் மலையாள திரை உலகுக்கு அறிமுகமானவர்தான் லட்சுமிமேனன். சிறந்த நடன கலைஞரான இவர்  எட்டாம் வகுப்பு படிக்கும் போதே திரைப்பட வாய்ப்பு கிடைத்தது. அடுத்து இவர்  அலி அக்பர் இயக்கிய ஐடியல் கப்பிள் என்ற மலையாள படத்தில் நடிகர் வினித்துடன் இணைந்து நடித்திருக்கிறார்.

 இதனை அடுத்து தமிழில் இவர்  விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக கும்கி என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் இவரது நடிப்புத் திறனை பார்த்த இயக்குனர் பிரபாகரன் கும்கிக்கு முன் வெளியான சுந்தர பாண்டியன் படத்தில்  நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்தார்.

 மேலும் குட்டிப்புலியில் சசிகுமார் உடன் நடித்த இவர் சுசீந்திரனின்  ஆக்சன் நாடகத் திரைப்படமான பாண்டியநாடு என்ற படத்தில் நடிகர் விஷாலுடன் இணைந்து நடித்தார்.

 பெரும்பாலும் இவர் நடித்த தமிழ் திரைப்படங்கள் அனைத்துமே மெகா ஹிட் திரைப்படங்களாக அமைந்திருந்தது. 2014இல் விமலுடன் ஜோடி சேர்ந்து மஞ்சப்பை என்ற படத்தில் இவர் நடித்திருக்கிறார்.

அதுபோலவே 2016 ஆம் ஆண்டு ஜெயம் ரவியுடன் இணைந்து மிருதன் என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

 இதனை அடுத்து தற்போது சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் வாய் பிளந்து விட்டார்கள் என்று கூறலாம்.

இந்த புகைப்படத்தில் இவர் படு ஸ்மார்ட் ஆக ஸ்லிம்மாக காட்சி அளித்திருப்பது தான் ரசிகர்களின்  அந்த அதிர்ச்சிக்கு காரணம் என்று கூறலாம்.

 சமூக வலைத்தளத்தில் இதுவரை நடிகை குஷ்பூ உடல் எடை குறைத்து உள்ள புகைப்படத்தை வெளியிட்டு இருப்பது போலவே இவரும் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அட இது நம்ம லட்சுமி மேனன் என்று மூக்கின் மேல் விரலை வைத்து விட்டார்கள். அந்த அளவு படும் பிட்டாக தனது மேனி அழகை மிக அழகாக இவர் பதிவு செய்திருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam