“நைட்டு தங்குங்க.. நான் வந்ததே உங்களை..” இயக்குனர் மீது லட்சுமி ராமகிருஷ்ணன் பகீர் புகார்..!

திரைப்பட நடிகையும் சமூக ஆர்வலரும் ஆன நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் மூலமாக மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.

அந்த நிகழ்ச்சியில் குடும்ப பிரச்சனைகளை குறித்து விவாதித்து அவர்களுக்கு தக்க தீர்வை கொடுத்து வழி அனுப்பி வைத்ததன் மூலமாக ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் இடம் பிடித்தார்.

லட்சுமி ராமகிருஷ்ணன் ஆடை வடிவமைப்பாளராகவும், திரைப்பட நடிகையாகவும் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

லட்சுமி ராமகிருஷ்ணன்:

தென்னிந்திய சினிமாவில் தெலுங்கு தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட பழமொழி படங்களில் இவர் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகையாகவும் இருந்தார்.

இந்நிலையில் தனக்கு நேர்ந்து பாலியல் துன்புறுத்தல் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

அதாவது, மலையாளத்தின் பிரபல இயக்குனரான ஹரிஹரன் தன்னை பாலியல் ரீதியாக மிகவும் துன்புறுத்தியதாக,

கூறி பரபரப்பு புகார் ஒன்றைக் கூறி இருக்கிறார். இவரின் புகார் ஒட்டுமொத்த தெனிந்திய சினிமா ரசிகர்களையும் அதிர வைத்துள்ளது. ஆம் அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது,

மலையாளத் திரைப்பட உலகில் புகழ்பெற்ற இயக்குனரான ஹரிஹரன் இயக்கத்தில் “பழசிராஜா” என்ற திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

இயக்குனர் மீது பாலியல் புகார்:

அந்த படத்தில் மம்மூட்டிக்கு மனைவியாக நடிக்கும் ரோல் கிடைத்தது. இதனால் மிகுந்த மகிழ்ச்சியோடு,

மிகப்பெரிய இயக்குனர். மிகப்பெரிய நடிகர் படம் என்பதால் மிகுந்த மகிழ்ச்சியோடு எதிர்பார்ப்போடு நான் காத்திருந்தேன்.

அந்த படத்தின் பூஜையில் கூட கலந்து கொண்டேன். சில நாட்களுக்கு பிறகு ஏதோ ஒரு வேலைக்காக நான் திருவனந்தபுரத்திற்கு நிகழ்ச்சி ஒன்றுக்கு நான் சென்றிருந்தேன்.

காலையில் போய் அங்கு இறங்கியதும் ஹரிஹரன் இடமிருந்து ஒரு மெசேஜ் எனக்கு கிடைத்தது. மாலையில் நாம் இருவரும் சந்திக்கலாம் என அந்த குறுஞ்செய்தி வந்திருந்தது.

அன்று எனக்கு அவர் சொல்வது புரியவில்லை. உடனே உடனே நான் இன்று இரவே சென்னை திரும்ப வேண்டிய டிக்கெட் எடுத்துவிட்டேன்.

அதனால் நிகழ்ச்சியை முடித்துவிட்டு சென்னை கிளம்பும் வழியில் நான் உங்களை வந்து சந்தித்து விட்டு செல்கிறேன் என கூறினேன்.

நைட் என்கூட அத பண்ணுங்க:

ஆனால் அவரோ, அவர் இல்லை இல்லை… இன்று இரவு நீங்கள் என்னுடன் தங்க வேண்டும், நான் இங்கு வந்ததே உங்களை பார்க்க தான் என்றும் கூறியிருந்தார்.

அந்த சமயத்தில் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை என் வாயில் வந்த எல்லா கெட்ட வார்த்தையும் பேசி திட்டி மெசேஜ் ஆக அவருக்கு அனுப்பி விட்டேன்.

அதன் பிறகு இந்த ஒரு விஷயத்திலிருந்து என் மனநிலை மாறவே இல்லை. தொடர்ந்து அது என் மனதை உறுத்திக்கொண்டே இருந்தது.

இது பற்றி எனது நண்பர்கள் சிலபேரிடம் நான் கூறும்போது அவர் பெரிய இயக்குனர் அவரைப் பற்றி எல்லாம் இப்படி நடந்தது என்று வெளியில் சொல்லி விடாதீர்கள் என கூறினார்கள்.

நான் ஏன் பேசாமல் இருக்க வேண்டும்? பெரிய ஆட்கள் என்றால் இப்படித்தான் நடந்து கொள்வார்களா? அந்த காலம் எல்லாம் மாறிப் போய்விட்டது.

எனக்கு கிடைக்கவேண்டிய பெரிய பட வாய்ப்பு ஹரிஹரனால் அன்று பறிபோனது. அதனால் எனது சினிமா வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

அதுமட்டுமில்லாமல் மனரீதியாக நான் மிகவும் துன்புறுத்தப்பட்டேன். எனவே இதை பொதுவெளியில் வந்து பேசுவது எந்த ஒரு தவறும் கிடையாது.

பரபரப்பான திரையுலகம்:

நான் இதைப்பற்றியு நிச்சயம் பேசித்தான் ஆகவேண்டும் என மிகவும் வெளிப்படையாக தைரியமாக இப்படி ஒரு புகார் கூறியிருக்கிறார்.

மலையாள திரைப்பட உலகில் பிரபலமான இயக்குனராக இருந்து வரும் அவர் மீது லட்சுமி ராமகிருஷ்ணன் என்ற,

ஒரு போல்டான தைரியமான தைரியசாலியான பெண் இப்படி புகார் கூறியிருப்பதால் திரைத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam