என் வயதை கூட பார்க்காமல் என்னை படுக்கைக்கு அழைத்தார் அந்த டைரக்டர்.. லட்சுமி ராமகிருஷ்ணன் ஓப்பன் டாக்..!

வீட்டுக்குள் அடைந்து இருந்த பெண்கள் எப்போதோ வெளியே வந்துவிட்டனர். ஆனால் இப்போதும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதுதான் கசப்பான உண்மை. பெண்கள் பணி செய்யும் இடங்களிலும், அவர்கள் தொழில் செய்யும் இடங்களிலும் பாலியல் துன்புறுத்தல் நீடித்திருக்கிறது.

குறிப்பாக சினிமா துறையில், நியாய தர்மங்கள் பேசும் சினிமாவில்தான் அத்தனை விதமான அநியாயங்களும் நடக்கின்றன. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிக்கின்றன. பிரபல நடிகைகள் என்று கூறப்படுபவர்கள் கூட பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி கொண்டு இருக்கின்றனர்

லட்சுமி ராமகிருஷ்ணன்

லட்சுமி ராமகிருஷ்ணன் ஒரு திரைப்பட நடிகை மற்றும் இயக்குனர். இவர் 2006 ஆம் ஆண்டில் மலையாளத்தில் அறிமுகமானார். தமிழ் சினிமாவில் துணை நடிகையாக நடித்து வருகிறார். நடிகை, வசனகர்த்தா, இயக்குனர், ஆடை வடிவமைப்பாளர் என இவருக்கு பல அடையாளங்கள் உண்டு .

லட்சுமி ராமகிருஷ்ணன் பிரிவோம் சந்திப்போம், பொய் சொல்ல போறோம், ஈரம், நாடோடிகள், வேட்டைக்காரன், விண்ணைத்தாண்டி வருவாயா, ஆண்மை தவறேல், ராவணன், நான் மகான் அல்ல, பாஸ் என்கிற பாஸ்கரன், கனிமொழி, யுத்தம் செய், சிங்கம்புலி, பொன்னர் சங்கர், ரௌத்திரம், நெல்லை சந்திப்பு, சென்னையில் ஒரு நாள், நையாண்டி உள்ளிட்ட படபடங்களில் அம்மா கேரக்டர்களில் நடித்திருக்கிறார்.

சொல்வதெல்லாம் உண்மை

குறிப்பாக தனியார் டிவி சேனல் ஒன்றில், சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை நடத்தியது மூலம், இந்த நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

பிரபலமாக ஆசை இல்லை

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் லட்சுமி ராமகிருஷணன் கூறியதாவது, சினிமா இண்டஸ்ட்ரிக்கு வந்தபோது எனக்கு வயது 42. வாழ்க்கையில் ஓரளவு செட்டில் ஆகி விட்டேன். பணம் சம்பாதிக்க ஆசைப்பட்ட சூழ்நிலையில் நான் இங்கு வரவில்லை. பிரபலமாக வேண்டும் என்பதற்காகவும் சினிமாவுக்கு வரவில்லை.

சினிமாவில் ஆர்வமும், என் கதைகளையும், அனுபவங்களையும், அதிக பார்வையாளர்களிடம் கொண்டு செல்ல விரும்பியதால் திரைப்படங்களில் நுழைய முடிவு செய்தேன்.

கையை தட்டி விட்டேன்

நான் இயக்குனருடன், ஒரு அறையில் மானிட்டருக்கு பக்கத்தில் அமர்ந்திருந்தேன். எனக்கு இயக்கத்தில் ஆர்வம் இருந்ததால் ஷாட் இல்லாத போதெல்லாம், நான் மானிட்டரை பார்ப்பேன். அப்படிப்பட்ட அந்த நேரத்தில் அவர் என் மீது கை வைத்தார். அது எனக்கு பெரிதாக படவில்லை. அதை அவர் தவறுதலாக செய்துவிட்டார் என்று விட்டு விட்டேன்.

இதையும் படியுங்கள்: நிஜ வாழ்வில் இவ்ளோ கஷ்டமா..? எதிர்நீச்சல் சீரியல் நந்தினியின் மர்ம பக்கங்கள்..!

ஆனால் அடுத்த முறை அவர் அப்படிச் செய்ய, நான் கையை உடனடியாக தள்ளி விட்டேன். உடனே அந்த இயக்குனர், இது பிடிக்கவில்லையா என்று கேட்டார். இதை ஏற்க முடியாது என்று சொல்லிவிட்டு வெளிநடப்பு செய்தேன்.

இதற்குப் பிறகு படப்பிடிப்பில், என் வாழ்க்கை பரிதாபமாக ஆகிவிட்டது. அவர் என் கையை இழுத்து என்னை துன்பப்படுத்தவில்லை.ஆனால் விஷயங்கள் கடினமாகிவிட்டன.

பல பேர் முன்னிலையில் அவமதிப்பார்

அவர் என்னை ஒரு ஷாட்டுக்கு 25 டேக்குகள் செய்ய வைப்பார். பல பேர் முன்னிலையில் அவமதிக்கும் வகையில் பேசுவார். நான் கடந்து செல்லும்போது அவர் ஒரு நடிகருடன் சேர்ந்து என்னைப் பற்றி பேசுவார்.

இதையும் படியுங்கள்: ஜோவிகாவின் அப்பா நான் இல்லை.. தகாத உறவில் பெற்றெடுத்தார்.. வனிதா முன்னாள் கணவர் பகீர்..!

தயாரிப்பாளர், இயக்குனர் மீது நடவடிக்கை எடுத்து என் வலியை சரி செய்யவில்லை என்றால், பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி நடந்தது அனைத்தும் கூறுவோம் என்று சொன்ன பிறகு, அவர் மன்னிப்பு கேட்டார்.

வயதை கூட பார்க்காமல்…

இயக்குனருக்கு கொஞ்சம் பயம் இருந்தது. நிச்சயமாக அவர் என்னை மோசமாக திட்டியிருப்பார். ஆனால் அது என்னை தொந்தரவு செய்யவில்லை.
51 வயதான என் வயதை கூட பார்க்காமல் என்னை படுக்கைக்கு அழைத்தார் அந்த டைரக்டர் குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் ஓப்பனாக பேசியிருப்பது, தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam