என் வயசை கூட பாக்காம படுக்கைக்கு அழைத்தார்.. பிரபல இயக்குனர் குறித்து லட்சுமி ராம கிருஷ்ணன்..!

தமிழில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என்று இரண்டிலுமே அதிக வரவேற்பை பெற்ற பிரபலமாக இருப்பவர் லட்சுமி ராமகிருஷ்ணன் பொதுவாகவே சொல்லுவதெல்லாம் உண்மை என்கிற நிகழ்ச்சியின் மூலமாக இவரை பலருக்கு தெரியும்.

ஆனால் அதற்கு முன்பிருந்தே சினிமா துறையில் இவர் பங்காற்றி வருகிறார் ஏற்கனவே பணக்கார குடும்பத்தை சேர்ந்த லட்சுமி ராமகிருஷ்ணன் சினிமாவின் மீது ஆர்வம் கொண்ட ஒரு நபராக இருந்தார். எனவே பணம் சம்பாதிப்பது என்பதையும் தாண்டி சினிமாவில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் நினைத்தார்.

அதனை தொடர்ந்து தமிழில் சினிமாவில் பல்வேறு துறைகளில் இவர் பணியாற்றி இருக்கிறார். தமிழில் பெரும் வெற்றி கொடுத்த பல படங்களில் பின்னால் வெவ்வேறு துறைகளில் இவர் பணியாற்றி இருக்கிறார். இது இல்லாமல் நிறைய திரைப்படங்களில் நடித்தும் இருக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

நடிகையாக வாய்ப்பு:

தமிழ் சினிமாவிற்கு மிக தாமதமாகவே வந்ததால் அவருக்கு கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் அம்மா கதாபாத்திரத்தில் நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இந்த நிலையில்தான் இவருக்கு சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்தது.

வெற்றிகரமாக 1500 க்கும் அதிகமான எபிசோடுகளை நடத்தினார் லட்சுமி ராமகிருஷ்ணன். எப்படி நீயா நானா என்று நிகழ்ச்சியின் பெயரை கூறினால் கோபிநாத்தின் நினைவு வருமோ அதே போல சொல்வதெல்லாம் உண்மை என்று கூறினாலே லட்சுமி ராமகிருஷ்ணன்தான் நினைவுக்கு வருவார்.

அதன் பிறகு அது குறித்து நிறைய சர்ச்சை உண்டான பிறகு சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை விட்டு விலகினார் லட்சுமி ராமகிருஷ்ணன். இந்த நிலையில் அவருமே கூட சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் விஷயங்களை அனுபவித்தது குறித்து ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

அட்ஜெஸ்ட்மெண்ட் தொல்லை:

கேரளாவில் திரைப்படம் ஒன்றில் நடிகையாக நடிப்பதற்கு லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு வாய்ப்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து அவர் அங்கு சென்று நடித்துக் கொண்டிருந்த பொழுது அந்த படத்தின் அவுட்புட் எப்படி இருக்கிறது என்று திரையில் பார்த்துக் கொண்டிருந்தார் இயக்குனர்.

பொதுவாகவே நாம் நடித்தது நன்றாக இருக்கிறதா என்று லட்சுமி ராமகிருஷ்ணனும் அந்த திரையில் சென்று பார்ப்பது வழக்கும். அப்படி அவர் பார்க்கும் பொழுது அவரது கை மேல் இயக்குனர் கையை வைத்திருக்கிறார் சரி தெரியாமல் வைத்திருப்பார் என்று லட்சுமி ராமகிருஷ்ணன் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது அவரது தொடுதல் தவறாக இருப்பது இவருக்கு புரிந்திருக்கிறது.

உடனே விலகி இருக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன் இதனை அறிந்த இயக்குனர் ஏன் உங்களுக்கு இது பிடிக்கவில்லையா என்று கேட்டிருக்கிறார்.

மேலும் அதனை தொடர்ந்து படப்பிடிப்புகளில் அவரிடம் மிகவும் கோபமாக நடந்து கொண்டிருக்கிறார் இயக்குனர் இதனால் கடுப்பான லட்சுமி ராமகிருஷ்ணன் ஒழுங்காக நீங்கள் செய்த விஷயத்திற்கு என்னிடம் மன்னிப்பு கேளுங்கள் இல்லை என்றால் பத்திரிகையாளர்களிடம் இது குறித்து கூறி விடுவேன் என்று மிரட்டி இருக்கிறார். இந்த சம்பவம் நடந்தப்போது லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு வயது 51 ஆகியிருந்ததாம். இந்த சம்பவத்தை அவர் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Comments are closed.
Exit mobile version