நடிகர் முரளியின் அழகான மகளை பார்த்துள்ளீர்களா? அட.. பாத்தா நம்பவே மாட்டீங்க!

தமிழ் திரை உலகில் ஜெமினி கணேசனுக்கு அடுத்ததாக காதல் மன்னனாக திகழ்ந்த நடிகர் முரளி இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராக இருந்த அமீர்ஜான் என்பவரின் பூவிலங்கு படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் ஹீரோவாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

இவர் பிரபல கன்னட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரான சித்தலிங்கய்யாவின் மகன் தமிழில் நடிப்பதற்கு வருவதற்கு முன்பே சில கன்னட படங்களில் நடித்து அறிமுகம் ஆகி இருந்தார்.

நடிகர் முரளி..

1984 ஆம் ஆண்டு வெளி வந்த பூவிலங்கு படத்தில் முரளி குயிலி மோகன் செந்தாமரை உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் தனது அபார நடிப்பை வெளிப்படுத்திய முரளிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

மேலும் இந்த படத்தில் வெளி வந்த ஆத்தாடி பாவாட காத்தாட என்ற பாடல் இன்றளவும் பலரது ஃபேவரைட் பாடல்களில் ஒன்றாக திகழ்வதோடு பல ரசிகர்களால் முணுமுணுக்கப்படும் பாடல்களில் ஒன்றாக உள்ளது.

இந்த படத்தை அடுத்து பல பட வாய்ப்புகள் முரளிக்கு தேடிவந்தது அந்த வகையில் இவர் பகல் நிலவு, வண்ண கனவுகள், இதயம், புது வசந்தம், பொற்காலம், காலமெல்லாம் காதல், வெற்றி கொடி கட்டு, சுந்தரா ட்ராவல்ஸ் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

முரளியின் குடும்ப வாழ்க்கை..

திரை உலகில் நல்ல நிலையில் இருக்கும் போதே திருமணம் செய்து கொண்ட முரளிக்கு மொத்தம் மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். இதில் மூத்த மகள் காவியா, இரண்டாவதாக பிறந்தவர் அதர்வா மூன்றாவதாக ஆகாஷ் என்ற மகன் பிறந்தார்.

இதில் தற்போது தமிழ் திரை உலகில் நடிகராக நடித்து வரும் அதர்வா பற்றி உங்களுக்கு மிக நன்றாக தெரிந்து இருக்கலாம். இவர் பானா காத்தாடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் ஹீரோவாக அறிமுகம் ஆனார். இந்த படத்தில் இவரது அப்பா முரளி இவரோடு இணைந்து நடித்திருக்கிறார்.

எனினும் துரதிஷ்டவசமாக இந்த படம் வெளிவருவதற்கு முன்பே நடிகர் முரளி உயிரிழந்து திரை உலகத்தையும் மற்றவர்களையும் சோகத்தில் ஆழ்த்தினார்.

மேலும் மூன்றாவது மகன் ஆகாஷ் தன்னுடன் கல்லூரியில் படித்த சினேகா பிரிட்டோ என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர் வேறு யாரும் இல்லை விஜயின் மாஸ்டர் படம் உள்ளிட்ட பல படங்களை தயாரித்த சேவியர் பிரிட்டோவின் மகள் ஆவார் மேலும் முரளியின் இரண்டாவது மகனும் விரைவில் சினிமாவில் நடிக்க வருவார் என்று சொல்லப்பட்டு வருகிறது.

முரளியின் மகள் காவ்யா..

இந்நிலையில் முரளியின் மூத்த மகள் யார்? அந்த அழகான மகளை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அட.. நீங்கள் அவர்களின் புகைப்படத்தை பார்த்தால் நம்பவே மாட்டீர்கள். எனவே இந்த பதிவில் முரளியின் மூத்த மகள் பற்றிய விவரங்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

திரைத் துறையில் விருப்பம் இல்லாமல் இருக்கும் முரளியின் மூத்த மகள் ஒரு மருத்துவராக அதுவும் சென்னையில் இருக்கும் காவேரி மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இவர் சினிமா நடிகைகளை எல்லாம் ஓரம் கட்ட கூடிய அளவு அழகு தேவதையாக ஜொலிக்கிறார்.

முரளியின் மூத்த மகள் காவ்யா காது மூக்கு தொண்டை நிபுணராக பணியாற்றி வருவதோடு மலேசியாவை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினிகரான ஆதித்யா என்பவரை 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

தற்போது குடும்பம் குழந்தை குட்டி என்று செட்டில் ஆகிவிட்ட இவர் காவேரி மருத்துவமனையில் மக்களுக்காக சிறப்பான முறையில் சேவையை செய்து வருகிறார். இப்போது உங்களுக்கு முரளியின் மகள் குறித்த விவரங்கள் தெரிந்திருக்கும்.

இந்த விஷயத்தை அறிந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் இணையத்தில் இந்த விஷயம் குறித்து பேசி இந்த விஷயத்தை பேசும் பொருளாக மாற்றி விட்டதோடு முரளியின் மகள் புகைப்படத்தை நண்பர்களோடு ஷேர் செய்து பார்த்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version