என் பொண்டாட்டி என்கிட்ட மாட்டிகிட்டா.. ஜெயம் ரவி ஓப்பன் டாக்…!

கடந்த சில காலங்களாகவே தமிழ் சினிமாவில்  ஆர்த்தி மற்றும் ஜெயம் ரவி இருவருக்கும் இடையே விவாகரத்து நடக்கப்போகிறது என்கிற விஷயம்தான் பெரிய விஷயமாக பேசப்பட்டு வருகிறது.

சில சினிமா பத்திரிகையாளர்கள் இந்த தகவலை முதன் முதலாக சமூக வலைதளங்களில் பரவவிட்டனர். அதனை தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஜெயம் ரவி மட்டும் ஆர்த்தி இருவருக்கிடையே விவாகரத்து ஆகப் போகிறது என்று பேச்சுக்கள் தினசரி இருந்து வருகின்றன.

அதற்கு தகுந்தார் போல பலவிதமான செய்திகளும் பரவி வருகின்றன. இந்த நிலையில் ஜெயம் ரவியின் மனைவியான ஆர்த்தி இன்ஸ்டாகிராமில் ஜெயம் ரவியுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை எல்லாம் நீக்கி இருக்கிறார்.

விவாகரத்து பிரச்சனை:

அதற்கான காரணம் இந்த விவாகரத்து பிரச்சனைதான் என்றும் பேசப்படுகிறது. ஆனால் இதில் எந்த உண்மையும் இல்லை என்றும் ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன. ஏனெனில்  ஆர்த்தியின் தாய் தயாரிப்பாளராக இருந்து வருகிறார்.

தமிழ் சினிமாவிலும் சின்ன திரையிலும் நிறைய நாடகங்களுக்கும் திரைப்படங்களுக்கும் தயாரிப்பாளராக இவர் இருந்திருக்கிறார். இதன் காரணமாக இவருக்கு வேண்டாதவர்கள் சிலர்தான் எதிர்மறையான விமர்சனங்களை உருவாக்கி வருகின்றனர் என்று கூறப்படுகிறது.

அதே சமயம் ஜெயம் ரவிக்கும் அவரது மாமியாருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை தான் இந்த விவாகரத்துக்கு காரணம் என்று ஒரு பக்கம் கூறப்படுகிறது. உண்மையில் அவர்கள் இருவரும் விவாகரத்து செய்து கொள்ளப் போவதில்லை அது குறித்த வதந்திகள்தான் வலம் வருகின்றன என்கின்றனர் இன்னோரு சாரார்.

ட்ரெண்டாகும் வீடியோ:

இதற்கு நடுவே முன்பு ஜெயம் ரவி பேசிய வீடியோ ஒன்று சமீபத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பேசும் ஜெயம் ரவி ஆர்த்திக்கு சினிமா மீது எந்த ஒரு ஈடுபாடுமே கிடையாது. அவருக்கு எப்போதுமே தொழில்கள் மீதுதான் ஆர்வம் இருந்திருக்கிறது.

தனியாக அவர்கள் தொழில் செய்ய வேண்டும் என்பதில் அவருக்கு ஆர்வம் அதிகமாக உண்டு. நான் நடிக்கும் திரைப்படங்களை மட்டும் பார்த்து அதற்கு சில விமர்சனங்களை தருவாரே தவிர சினிமா மீது துளி கூட அவருக்கு விருப்பம் இருந்தது கிடையாது.

எனவே நான் என் மனைவியிடம் பேசும் போதெல்லாம் நீ என்னிடம் மாட்டிக் கொண்டு விட்டாய் இல்லையென்றால் பெரிய தொழிலதிபராக வந்திருப்பாய் என்று கூறியிருக்கிறேன் என்று ஜெயம் ரவி கூறியிருக்கிறார். இதனை பகிரும்ம் நெட்டிசன்கள் இந்த காரணத்தால்தான் தற்சமயம் பிரிந்து தனியாக தொழில் துவங்க இருக்கிறாரா ஆர்த்தி? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version