பிரபல சின்னத்திரை நடிகை லதா ராவ் சினிமாவில் துணை நடிகையாக இருந்து அதன்பிறகு சீரியலில் நடிக்க வந்தவர். தமிழில் குறிப்பிடும்படியாக அப்பா, திருமதி செல்வம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இவர் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது தன்னுடன் நடித்த சக சீரியல் நடிகர் ராஜ்குமார் என்பவரை காதலித்து அவரையே திருமணம் செய்து கொண்டார். சின்னத்திரையில் நடித்து வரும் இவர் அவ்வப்போது சினிமாவில் நடிப்பது உண்டு.
அந்த வகையில் தில்லாலங்கடி நிமிர்ந்துநில் உள்ளிட்ட திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து சினிமாவிலும் தன்னுடைய பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
இப்படி சினிமா சீரியல் என இரட்டை குதிரை சவாரி செய்து வரும் நடிகை லதா ராவ் தன்னுடைய இணைய பக்கங்களில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இன்றைய இளம் நடிகைகளுக்கு இணையாக இணையத்தில் துருதுருவென இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கவர்ச்சி கறி விருந்து லதா ராவ் என்று அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். புடவை சகிதமாக தலை நிறைய மல்லிகை பூவுடன் மொட்டை மாடியில் நின்று கொண்டிருக்கும் இவரது புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
மட்டுமில்லாமல் மஞ்சள் நிற புடவையில் மங்களகரமாக தன்னுடைய புடவையை சரி செய்வது போல போஸ் கொடுத்திருக்கும் சில புகைப்படங்கள் ரசிகர்கள் கவனத்தை சுண்டி இழுத்து இருக்கிறது.
மேலும் அணை ஒன்றில் அமர்ந்து கொண்டிருக்கும் இவர் பஞ்சுமிட்டாய் நிற சுடிதாரில் பார்ப்பதற்கு தேவதை போல் காட்சி அளிக்கக்கூடிய ஒரு புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
குறிப்பாக பட்டன் வைத்த சிடிதார் அணிந்துகொண்டு குனிந்தபடி வெட்கப்படும் இவரது அழகில் ரசிகர்கள் தொப்பென விழுந்து விட்டார்கள் என்று தான் கூறவேண்டும்.
கருப்பு நிற இருக்கமான சுடிதாரில் நீச்சல் குளத்தின் அருகில் நின்றுகொண்டு இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்துடன் வாழ்க்கை ஒரு முடிவில்லாத அழகு நிறைந்தது என்று கேப்சன் வைத்திருக்கிறார்.
இதனை பார்த்த.. ரசிகர்கள்.. உண்மைதான் வாழ்க்கை ஒரு முடிவில்லாத அழகு நிறைந்தது என்று அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.