மாஸ் நடிகரின் அடுத்த அப்டேட்..! – இதை யாருமே எதிர்பார்க்கலையே..! – தீயாய் பரவும் தகவல்..!

லீடர் நடிகரின் குடும்ப பிரச்சினை தான் தற்பொழுது கோலிவுட் வட்டாரத்தில் சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் வைத்துள்ள அந்த லீடர் நடிகர் விரைவில் அரசியல் கட்சி ஒன்றை தொடங்க இருக்கிறார் என்று கூட பலரும் நம்புகிறார்கள்.

சமீபத்தில் அவருடைய படத்தை முடக்கும் வேளையில் பெரிய குடும்பத்தில் இருந்து அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. தனக்கு இணையாக இருக்கக்கூடிய சக நடிகரின் ஒரு திரைப்படத்திற்கு அதிக திரையரங்குகளும்.. தன்னுடைய திரைப்படத்திற்கு குறைவான திரையரங்குகளும் கொடுக்கப்பட்டதால் கடும் கோபமடைந்தார் லீடர் நடிகர்.

சோரா..? சொரனையா..?

இதனால், தன்னுடைய ரசிகர்களை அழைத்து விருந்து நிகழ்ச்சி என்ற பெயரில் குட்டியான மாநாடுகள் சிலவற்றை நடத்தி தனக்கு அழுத்தம் கொடுக்கும் பெரிய குடும்ப நண்பர்களுக்கு தன்னுடைய பலம் என்ன என்பதை காட்டினார்.

ஆனால் பெரிய குடும்பம் நண்பர்களோ.. நீங்கள் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் பலத்தை காட்டிக் கொள்ளுங்கள்.. படத்தை நாங்கள் தான் வெளியிடுவோம் என கரார் கண்டிப்பாக இருந்தனர்.

கடைசியாக சோரா..? சொரனையா..? என்பது போல காரியம் முக்கியமா..? அல்லது வீரியம் முக்கியமா..? யோசித்து.. குறைவான திரையரங்குகளில் படத்தை வெளியிட்டால் தலையில் துண்டு தான்.. எனவே காரியம் தான் முக்கியம் என தன்னுடைய படத்தை பெரிய குடும்ப நிறுவனத்திற்கே விற்றுவிட்டு ஒதுங்கிக் கொண்டார் லீடர் நடிகர்.

விரைவில் அரசியல் களத்திலும் இவரை எதிர்பார்க்கலாம் என்று கூறுகிறார்கள். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தற்பொழுது இவருடைய குடும்ப சண்டை வீதிக்கு வந்திருக்கிறது. இதனை அறிந்த ரசிகர்கள் இதனை நம்பலாமா..? நம்ப வேண்டாமா..? நம்பவும் முடியவில்லை…! நம்பாமல் இருக்க முடியவில்லை..! என்ற ஒரு குழப்பமான மனநிலையில் இருக்கின்றனர்.

ஒரு வேலை இருக்குமோ..?

ஆனால் நடந்த விஷயங்களை வைத்து பார்க்கும் பொழுது இது ஒரு வேளைநடந்திருக்குமோ…? ஒரு வேலை இருக்குமோ..? என்று சந்தேகிப்பது போல இருக்கிறது. அதாவது தன்னுடைய பெயரிலேயே வெற்றியை வைத்திருக்கும் அந்த நடிகையுடன் லீடர் நடிகர் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது.

அந்த நடிகை உடன் தொடர்ந்து இரண்டு படங்களில் நடித்தார் லீடர். எத்தனையோ நடிகர்கள் நடிகைகள் லீடர் நடிகருடன் நடித்திருந்தாலும் கூட படத்தில் நடித்தோமா சம்பளத்தை வாங்கினோமா என்று ஒதுங்கி விடுவார்கள்.

ஆனால் இந்த வெற்றி நடிகை மட்டும் லீடர் நடிகரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்கிறேன் என்ற பெயரில் அவருக்கு பரிசுகளை அனுப்புவது. சட்டை மற்றும் பேண்ட் எடுத்துக் கொடுப்பது உள்ளிட்ட விஷயங்களை செய்து கொண்டிருக்கிறார்.

எல்லாவற்றிற்கும் மேலாக சமீபத்தில் வெற்றி நடிகை லண்டனுக்கு சுற்று சுற்றுலா சென்றிருந்தார். அவர் சென்ற அடுத்த நாளே லீடர் நடிகரும் சுற்றுலாவிற்கு சென்றார்.

லண்டனில் லக லக..

லீடர் நடிகர் சுற்றுலா செல்வது ஒன்றும் புதிய விஷயம் அல்ல. ஆனால், இந்த முறை அவர் சென்ற ஊர் லண்டன். பல இடங்களில் எனக்கு லண்டன் தான் மிகவும் பிடித்தமான சுற்றுலா தளம் என்று கூறியிருக்கிறார் லீடர் நடிகர்.

என்றாலும் கூட இது வெற்றி நடிகைக்கும் லீடர் நடிகர்களுக்கும் இடையே உள்ள தொடர்பை உறுதிப்படுத்தும் விதமாக இருந்திருக்கிறது. இது அதே லண்டனையைச் சேர்ந்த லீடர் நடிகரின் மனைவியை கடுப்பில் ஆழ்த்தி இருக்கிறது.

மட்டுமில்லாமல் லீடர் நடிகரின் மனைவியுடைய நலம் விரும்பிகள் சிலரும் இந்த விஷயத்தை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். இதனால் கடுப்பான மனைவி லீடர் நடிகரை அழைத்து இந்த விஷயத்தை கூறி அந்த வெற்றி நடிகையுடன் இருக்கும் தொடர்பை துண்டிக்க கூறி இருக்கிறார்.

பாலத்தை உடைங்க..

மட்டுமில்லாமல் அந்த வெற்றி நடிகைக்கும் உங்களுக்கும் இடையே உறவு பாலமாக இருக்கக்கூடிய அந்த மேனேஜரின் உறவை துண்டிக்க வேண்டும் என்றும் இந்த உறவு பாலத்தை உடைத்தால் எல்லாம் சரியாகி போயிடும் என்றும் கட்டளை போட்டிருக்கிறார்.

இதனைப் பற்றி கண்டுகொள்ளாத லீடர் நடிகர். கொட்டு கொட்டு மேளம் கொட்டு.. கட்டு கட்டு பாலம் கட்டு.. என்று அந்த மேனேஜருக்கு கோடி மதிப்பில் புதிய வீடு ஒன்றை வாங்கி கொடுத்திருக்கிறார்.

மனைவியோ அந்த மேனேஜருடன் தொடர்பே இருக்கக் கூடாது என்று கூறுகிறார்.. ஆனால், மறுபக்கம் அந்த மேனேஜருக்கு கோடி ரூபாயில் வீடு ஒன்றை வாங்கி கொடுத்திருக்கிறார் லீடர் நடிகர் என்றதும் கடுப்பின் உச்சத்திற்கே சென்று இருக்கிறார் லீடர் நடிகரின் மனைவி.

குழந்தைகளை சந்திக்க கூடாது..

இனி இது வேலைக்கு ஆகாது.. என்று தெரிந்து கொண்டு தன்னுடைய சொந்த வீட்டிற்கு சென்று விட்டாராம். மேலும் தன்னுடைய குழந்தைகளையும் நீங்கள் சந்திக்கக் கூடாது. என்று கரார் கண்டிப்பாக உத்தரவு போட்டு இருக்கிறார். இதனால் தான் லீடர் நடிகர் பயங்கர அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

இத்தனை நாள் வெறும் கட்டுப்பாடுகள் மட்டுமே இருந்தது. தற்பொழுது குழந்தைகளை சந்திக்க கூடாதா..? என்ற பிறகுதான் லீடர் நடிகர்களுக்கு புத்தியில் உரைத்தது போல் இருக்கிறதாம்,

இது இப்படியே சென்றால் தன்னுடைய அரசியல் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய கெட்ட பெயராகிவிடும். மட்டுமில்லாமல் தற்போது தன்னுடைய மார்க்கெட் மிகப்பெரிய வினையாக முடிந்து விடும். இதனை எப்படியாவது சுமுகமாக முடித்து கட்ட வேண்டும் என்று லீடர் நடிகர் படாத பாடுபட்டு வருவதாக கூறுகிறார்கள்.

மறுபக்கம் வெற்றி நடிகை உடனான தொடர்பை முறித்துக் கொள்ளவும் லீடர் நடிகர் தயங்கி வருவதாகவும்… வெற்றி நடிகையும் லீடர் நடிகருக்கு தனிப்பட்ட முறையில் அழுத்தங்களை கொடுத்து வருவதாகவும் கிசு கிசுக்கிறார்கள்.

ரிசார்ட் ஓனர் மகனுடன் வெற்றி நடிகை டும் டும்..

ஆனால் ஒருவேளை இவர்கள் இருவரும் சேரும் பட்சத்தில் லீடர் நடிகரின் மார்க்கெட், அரசியல் ஆசை என அனைத்தும் துவம்சம் செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது. இந்த விஷயத்தை அறிந்த புகழ் நடிகையின் பெற்றோர்கள் ( அவர்களும் கலைக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் தான்)  இந்த விஷயம் எப்படி போய் மக்களிடம் சேரும் என்பதை நன்றாகவே அறிந்தவர்கள்.

எனவே வெற்றி நடிகைக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து ரிசார்ட் உரிமையாளர் ஒருவருடன் திருமண பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

கேரளா, சென்னை, ஆந்திரா மற்றும் புகழ் பெற்ற மலைவாச ஸ்தலங்களான உதகமண்டலம், ஏற்காடு, கொடைக்கானல் என பல இடங்களில் தங்களுக்கான சொந்தமாக ரிசார்ட் வைத்துள்ள ஒருவரின் மகனை வெற்றி நடிகைக்கு திருமணம் செய்து வைக்க திட்டமிட்டுள்ளனர் பெற்றோர்கள் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த விவரங்கள் இலை மறை காய் மறையாக இணைய வட்டத்திலும் பேப்பர் நியூஸ் வரை நாறிக் கொண்டிருக்கிறது. இதனை அறிந்த லீடர் நடிகரின் ரசிகர்கள் இதை நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்க முடியவில்லை.. என்று தலையில் அடித்துக் கொண்டு புலம்பி வருகின்றனர்.

ஸ்வீட் எடு.. கொண்டாடு..

மறுபக்கம் எப்போதும் இல்லாத திருநாளாக தன்னுடைய முந்தைய படத்தின் வெற்றியை படத்தில் பணியாற்றிய சிறு சிறு நடிகர்களுடன் சேர்ந்து கொண்டாடிக் கொண்டிருக்கிறார் லீடர் நடிகர்.

பொதுவாக லீடர் நடிகர் இப்படியான விஷயங்கள் எல்லாம் செய்ய மாட்டார். படம் வெளியானால்.. வெற்றியோ.. தோல்வியோ.. அதனை அப்படியே விட்டு விட்டு சென்று விடுவார். தன்னுடைய அடுத்த படத்தில் கவனத்தை செலுத்துவார்.

ஆனால் தற்போது அடுத்த படத்தில் வேலை எதுவும் செய்யாமல்.. பழைய படத்தின் வெற்றியை கொண்டாடிக் கொண்டிருக்கிறார். அந்த அளவுக்கு வேலையில்லாமல் இருக்கிறாரா..? என்று புலம்புகிறார்கள்.

தலையை சீவுனா..

நீங்கள் அடுத்த படத்தின் வேலையை பாருங்கள் அல்லது இந்த படத்தின் வெற்றியை கொண்டாடுங்கள் அது உங்கள் விருப்பம் எங்கு சென்றாலும் தயவு செய்து உங்களுடைய சிகை அலங்காரத்தை மாற்றுங்கள்… தலையை சீவுங்கள் என்று கலாய் மீம்களையும் பார்க்க முடிகிறது.

மட்டுமில்லாமல் தயவு செய்து உங்கள் தலையை சீவுங்கள் என்று தொலைக்காட்சி மட்டத்தில் பிரபலமாக இருக்கக்கூடிய ஒரு விமர்சகரே லீடர் நடிகரை பார்த்து அட்வைஸ் கூறியிருந்தார் என்பதுதான் கூத்திலும் கேலிக்கூத்து.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam