“படுக்கையில் என்னோட அ****…” – பிரபல தமிழ் இயக்குனர் மீது யாஷிகா ஆனந்த் பகீர் குற்றச்சாட்டு..!

பிரபல நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவின் தந்தை என்ற ரேஞ்சில் இருக்கும் இயக்குனர் ஒருவர் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்த விஷயத்தை பொதுவெளியில் போட்டு உடைத்திருக்கிறார்.

இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் நடித்து பிரபலமடைந்த நடிகை யாஷிகா ஆனந்த் சினிமாவில் அறிமுகமான பொழுதில் தான் சந்தித்த சங்கடமான சூழ்நிலைகள் பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார்.

அவர் கூறியதாவது, தமிழ் சினிமாவின் தந்தை என்று பலராலும் அறியப்படும் ஒருவர் எனக்கு இப்படியான தொந்தரவுகளை கொடுத்தார். எனக்கு இருக்கக்கூடிய பொறுப்புகள் மற்றும் அவருடைய குடும்பம் இதையெல்லாம் கருத்தில் கொண்டு அவருடைய பெயரை நான் பொதுவெளியில் சொல்லாமல் இருக்கிறேன்.

ஒருமுறை பட வாய்ப்புக்காக வேண்டி ஆடிஷனுக்கு சென்றிருந்தேன். என்னை தேர்வு செய்து விட்டு என்னை அவருடைய அறைக்குள் அழைத்தார். நானும் என்னுடைய அம்மாவும் அறைக்குள் சென்றோம்.

அப்போது என்னுடைய அம்மாவை வெளியே செல்லுமாறு சொல்லிவிட்டு உனக்கு இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு வேண்டும் என்றால் என்னுடன் படுக்கையில் நீ அப்படி இருக்க வேண்டும்… இப்படி இருக்க வேண்டும்… என்று மோசமான சில விஷயங்களை கூறினார்.

அப்போதுதான் பெரிய அந்தஸ்தில் இருக்கும் நபர்கள் தங்களுடைய அந்தஸ்தை.. தங்களுடைய புகழை எப்படி தவறாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டேன்.

என்னால் அதை செய்ய முடியாது என்று கூறியதால் அந்த படத்தில் இருந்து நான் நீக்கப்பட்டேன். மட்டுமல்லாமல் பல்வேறு விஷயங்கள் எனக்கு எதிராக நடந்திருக்கின்றன.

அந்த வகையில், பொது இடத்தில் ஒருவர் என்னை தொடக்கூடாத இடத்தில் தொட்டு சீண்டினார். இதனால் கோபமடைந்த நான் அந்த இடத்திலேயே அவரை எட்டி உதைத்தேன். உடனே, அந்த இடத்தில் இருந்து அந்த நபர் ஓடிவிட்டார்.

மேலும், சில வருடங்களுக்கு முன்பு எங்கள் பகுதியில் வசித்துக் கொண்டிருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் வேறு ஒரு நடிகை நடித்திருந்த சில வீடியோ காட்சிகளை இணையத்தில் பரவ செய்து.. அந்த வீடியோவில் இருப்பது நான்தான் என்று சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்பிக் கொண்டு இருந்தார்.

இதனால் நான் பாதுகாப்பு அற்றவளாக உணர்ந்தேன். இதனை தொடர்ந்து நான் கொடுத்த புகாரின் பேரில் அந்த காவல்துறை அதிகாரியிடம் மாற்றம் செய்யப்பட்டார் என்று கூறியிருந்தார்.

இப்படி ஒவ்வொரு பிரச்சனையாக நான் சந்தித்துக் கொண்டே வரும் பொழுது ஒரு கட்டத்தில் இப்படியான விஷயங்களுக்கு எதிராக இருப்பதற்கு பதிலாக இதிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்வதே சிறப்பான விஷயம் என்பதை உணர்ந்து அதன் பிறகு சில கட்டுப்பாடுகளுடன் இருந்து வருகிறேன் என்று கூறியிருக்கிறார் நடிகை யாஷிகா ஆனந்த்.

மேலும் பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்தால் தான் அந்த வாய்ப்பு நமக்கு கிடைக்கும் என்று வரும் பொழுது அப்படியான அழைப்பு விடுக்கும் இயக்குனர்கள் சினிமா துறையை விட்டு விலக்கப்பட வேண்டும் என்றும் பதிவு செய்திருக்கிறார்.

Summary in English : Leading Actress Yashika Anand’s story and her experience with a powerful director in the Tamil film industry. Uncover the truth and find out what really happened behind closed doors in this exclusive.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version