Site icon Tamizhakam

கொல மாஸ் லுக்கில் லெஜெண்ட் சரவணன்.. அடுத்த பட இயக்குனர் யாரு தெரியுமா…?

திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை யாரை விட்டது என்று சொல்லக்கூடிய அளவு சாமானிய மனிதர் இருந்து தொழில் அதிபர் வரை திரையுலகில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பதை நடிகர் லெஜெண்ட் சரவணன் லெஜென்ட் படத்தில் நடித்ததின் மூலம் நிரூபித்திருக்கிறார்.

ஏற்கனவே சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களில் தலைகாட்டி வந்த இவர் விரைவில் திரைப்படங்களில் நடிக்க இருக்கிறார் என்ற விஷயத்தை யூகித்த மக்கள் அது எப்போது நடக்கும் என்று காத்திருந்த சமயத்தில் திரைப்படத்தில் நடிக்க களம் இறங்கினார்.

லெஜன்ட் சரவணன்..

இதனை அடுத்து தமிழ் திரை உலகில் தி லெஜெண்ட் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக களம் இறங்கிய சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டதோடு அண்ணாச்சியின் அடுத்த படம் எப்போது என்று கேட்க வைத்தார்.

இவரின் முதல் படத்தை இயக்குனர் ஜேடி ஜெர்ரி இயக்கியிருந்தது உங்களுக்கு மிகவும் நன்றாக தெரியும், மிகப்பெரிய பொருட்செலவில் அந்த திரைப்படமானது உருவாக்கப்பட்டது. மேலும் இந்த படத்திற்கு விளம்பரம் வெளி வந்ததை பார்த்து பலரும் பிரம்மித்தார்கள்.

சமீப காலமாக அடுத்த படத்தில் சந்திக்கிறேன் என்று புது லுக்கில் பதிவுகளை இணையங்களில் பகிர்ந்து சரவணன் ரசிகர்களின் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

கொலை மாஸ் லுக்கில்..

இதனை அடுத்து கொல மாஸ் லுக்கில் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களின் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது அத்தோடு நடிகர் சூரி, சசிகுமார் நடிப்பில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற கருடன் படத்தின் இயக்குனரான துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.

இந்த தகவலை அறிந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் பரபரப்பாக இது பற்றி பேசி வருவதால் பேசும் பொருளாகி இருக்கக்கூடிய இந்த விஷயம் தற்போது இணையத்தில் அதிகளவு பேசப்படும் விஷயமாக மாறிவிட்டது.

அடுத்த பட இயக்குனர் யார் தெரியுமா?

இதனைத் தொடர்ந்து அடுத்த பட இயக்குனர் கருடன் படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் என்ற விஷயத்தை கேள்விப்பட்டு படம் எப்படி இருக்கும் என்பதை சில ரசிகர்கள் யோசிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள்.

இந்நிலையில் தற்போது லெஜெண்ட் சரவணாவை வைத்து புதிய படத்தை துரை செந்தில் குமார் இயக்க உள்ள செய்தி அதிகாரப்பூர்வமாக வெளி வந்து அதனை லெஜெண்ட் சரவணன் அறிவித்திருக்கிறார்.

மேலும் தன்னுடைய மிரட்டலான புது தோற்றத்துடன் இணையத்தில் அந்த தகவலை பகிர்ந்து இருப்பதை பார்த்து ரசிகர்களின் ரியாக்ஷனும் வேறு லெவலில் உள்ளது என்று சொல்லலாம்.

எக்ஸ் தளத்தில் வெளியாகிய இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களின் மத்தியில் வைரலாக பரவி வருவதோடு பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதை அடுத்து நீங்களும் இந்த வித்தியாசமான கெட்டப்பை பார்த்தால் அசந்து போவீர்கள். அத்தோடு இந்த படமும் இவருக்கு வெற்றிப்படமாக அமையுமா அல்லது கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகுமா? என்பது படம் வெளிவந்த பிறகு தான் தெரியவரும்.

Exit mobile version