போதும் போதும் லிஸ்ட் ரொம்ப பெருசா போகுது… லியோவில் இணைந்த புது வில்லன் !

விஜயின் LEO

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் படம் லியோ. இத்திரைப்படத்தை எஸ் எஸ் லலித்குமார் தயாரிக்கிறார். கடந்த ஆண்டு லோகேஷ் இயக்கத்தில் வெளியான கமல் நடித்த விக்ரம் திரைப்படம் மெகா ஹிட் அடித்தது அத்திரைப்படத்தில் பகத் பாசில் விஜய்சேதுபதி ஆகியோர் கமலுடன் நடித்து இருந்தார்கள்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து விஜய் உடன் லியோ என்ற படத்தை இயக்கி விருப்பதாக அறிவிப்புகள் வெளியானது. அன்று முதல் இருந்தே ரசிகர்கள் ஒவ்வொரு அப்டேடையும்  கொண்டாடி வருகிறார்கள்.

இப்பொழுது லியோ படக்குழு காஷ்மீரில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது இதில் கௌதம் வாசுதேவ் மேனன் மிஷ்கின் திரிஷா ஆகியோரும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

14 வருடங்களுக்கு பிறகு திரிஷா மீண்டும் விஜயுடன் இணைந்து நடிக்கிறார். இத்திரைப்படத்தில் ஒரு மிகப்பெரிய சினிமா பட்டாளமே இருக்கிறது. மன்சூர் அலிகான் இந்த படத்தில் நடிக்கவிருக்கிறார்.

புதிதாக இணைந்த நடிகர்

இந்த நிலையில் தற்பொழுது புதியதாக ஒரு பிரபல நடிகர் இணைவதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் வேறு யாருமில்லை பாபு ஆண்டனி thaan விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் படங்களிலும் இவர் நடித்திருக்கிறார் .

இப்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் இந்த  தகவலையும் பகிர்ந்துள்ளார். இந்த படத்தில் ஏற்கனவே பலர் வில்லனாக நடித்துக் கொண்டிருக்கும் போது புதிதாக இவரும் இணைந்து இருப்பது ரசிகர்களிடையே பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே கடந்த வாரம் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் லியோ படக்குழுவுடன் இணைந்திருந்தார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தளத்தில் விரலை வந்தன. அதில் விஜயின் கெட்டப்பை பார்த்த ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

இந்த படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் எனவும் படக்குழு தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்தது. மேலும் இத்திரைப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசை அமைக்கிறார்.  இதுபோல பல சுவாரசியமான சினிமா செய்திகளை உடனுக்குடன் காண நம்ம தமிழகம் இணையதள பக்கத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …