நடிகை ரேவதி வாழ்க்கையில் நடந்த நெஞ்சை உலுக்கும் சொல்ல மறந்த கதை..!

தமிழ் சினிமாவில் 1980களில் மிக முக்கிய முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரேவதி. இவர் கேரளா மாநிலம் கொச்சியை சேர்ந்தவர். இவரது தந்தை இந்திய ராணுவ அதிகாரி மேஜர் ஆக பணிபுரிந்தவர். தாய் இல்லத்தரசி. ரேவதியின் இயற்பெயர் ஆஷா.

பாரதிராஜா இயக்கிய மண்வாசனை படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ரேவதி தொடர்ந்து புன்னகை மன்னன். வைதேகி காத்திருந்தாள், உன் கண்ணில் நீர் வடிந்தால், புதிய முகம், உதயகீதம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். 1987ம் ஆண்டில், சுரேஷ் சந்திர மேனன் என்பவரை காதல் திருமணம் செய்துக்கொண்டார்.

அதன்பிறகு படங்களில் நடிக்கவில்லை. ஆனால் சுரேஷ் சந்திர மேனன், திரைப்பட ஒளிப்பதிவாளராக இருந்தும் ரேவதியை தொடர்ந்து நடிக்க அனுமதிக்கவில்லை. இருவரும் ஒன்றாக சேர்ந்து 27 ஆண்டுகள் வாழ்ந்த நிலையில், இருவரும் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர். அதற்கு குழந்தையின்மை காரணம் என்று தெரிகிறது. ஆனால் அதற்கு முன்பே பல ஆண்டுகளாக அவர் மனதளவில் பிரிந்து வாழ்ந்துள்ளனர்.

நடிகை ரேவதி விவகாரத்துக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் அக்கா, அம்மா கேரக்டர்களில் நடிக்க ஆரம்பித்தார். ஜோதிகாவுடன் மகளிர் மட்டும், ஜாக்பாட், ஒஸ்தி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இதற்கிடையே மேகா என்ற பெண் குழந்தையை ரேவதி தத்து எடுத்து வளர்ப்பதாக தெரிய வந்தது.

ஆனால் சில ஆண்டுகள் கழிந்த நிலையில் அது தத்து குழந்தை இல்லை. என் வயிற்றில் சுமந்து நான் பெற்றெடுத்த குழந்தை. டெஸ்ட் டியூப் மூலம் என் பெற்ற என் குழந்தை. தாய்மையின் உணர்வை உணர விரும்பி இந்த முடிவை எடுத்தேன் என்றும் தெரிவித்தார். தவிர, சமூக நல உணர்வாளராகவும் தன்னை ரேவதி வெளிப்படுத்தி இருக்கிறார்.

இந்நிலையில் மீண்டும் தன் மனைவி ரேவதியுடன் சேருவதற்காக மாஜி கணவர் சுரேஷ் சந்திரமேனன் தூது அனுப்பிக்கொண்டு இருக்கிறார். ரேவதியின் திரையுலக நண்பர்களும், குடும்பத்தினரும் அவர்கள் வாழ்க்கையில் மீண்டும் இணைய வேண்டும் என்று தங்களது கோரிக்கையை வைத்து வருகின்றனர். ரேவதி என்ன முடிவு எடுப்பார் என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கிறது. வாழ்க்கையில் குழந்தையின்மையால் பலத்த போராட்டத்தை சந்தித்தவர், இறுதியில் டெஸ்ட் டியூப் பேபியை பெற்றிருக்கிறார் ரேவதி.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam