அக்காவின் துரோகம் மகனின் மறைவு.. நடிகை வாணிஸ்ரீ வாழ்க்கையில் விளையாடிய வருத்தமும்.. வெற்றியும்..

1948-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3-ஆம் தேதி ரத்ன குமாரி என்ற இயற்பெயரில் பிறந்த நடிகை வாணிஸ்ரீ தென்னிந்திய மொழி படங்கள் பலவற்றில் நடித்து தென்னிந்திய ஃபிலிம் ஃபேர் விருது, நந்தி விருது, தமிழ்நாடு மாநில திரைப்பட விருது போன்ற விருதுகளை பெற்றவர்.

தமிழ் சினிமாவின் ஸ்டைல் குயின்னாக அறியப்படும் இவர் பல படங்களில் தனது அபார திறமையை வெளிப்படுத்தி நடித்தவர். இதனை அடுத்து இவர் 1980-ஆம் ஆண்டு டாக்டர் கருணாகரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரு மகள்கள் இருக்கிறார்கள்.

நடிகை வாணிஸ்ரீ..

நடிகை வாணிஸ்ரீ 1972 -ஆம் ஆண்டு இத்தரு அம்மாயிலு என்ற படத்தில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து 1975-இல் கங்கா மங்கா படத்தில் நடித்த இவர் தமிழ் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

தமிழைப் பொறுத்த வரை இவர் சிவாஜி கணேசனுடன் இணைந்து உயர்ந்த மனிதன் நிறைகுடம், குலமா குணமா, வசந்த மாளிகை, சிவகாமியின் செல்வன், வாணி ராணி, ரோஜாவின் ராஜா, இளைய தலைமுறை, புண்ணிய பூமி, வாழ்க்கை போன்ற படங்களில் நடித்து அசத்தியவர்.

அதுபோலவே எம்ஜிஆர் உடன் சேர்ந்து கண்ணன் என் காதலன், தலைவன், ஊருக்கு உழைப்பவன் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் திரை உலகில் இருக்கும் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்ததை அடுத்து இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அன்றைய காலகட்டத்தில் வாணிஸ்ரீ அணிந்த உடைகளும், ஹேர் ஸ்டைலும், ஆடை ஆபரணங்களும் ரசிகர்களை கவரக்கூடிய வகையிலும் பெண்களை கட்டி இழுக்கக்கூடிய வகையிலும் இருந்தது.

ஆரம்ப நாட்களில் காமெடி கலந்த வேடங்களில் நடித்த இவர் பின்னாடி குறுகிய படங்களில் நடித்தாலும் முக்கியமான ரோல்களை ஏற்று நடித்து அதன் மூலம் ரசிகர்களை பெருமளவு கவர்ந்த நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார்.

அத்தோடு திரைப்படங்களை மிகுந்த தைரியமான காட்சிகளில் நடித்திருக்கக் கூடிய நடிகையான இவர் நிஜ வாழ்க்கையில் எப்படிப்பட்ட பெண்ணாக திகழ்ந்தார். இனி அவர் என்னென்ன சங்கடங்களையும் வலிகளையும் வெற்றிகளையும் பெற்றார் என்பது பற்றி இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

வாணிஸ்ரீ வெற்றிகளும் வலிகளும்…

ஆரம்ப நாட்களில் வாணிஸ்ரீயை படிக்க வைக்க முயற்சி செய்த போதும் படிப்பில் நாட்டம் இல்லாமல் நடனத்தில் அதிக அளவு நாட்டம் மிக்கவராக இவர் திகழ்ந்தார். ஆரம்ப நாட்களில் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை அவர் அம்மாவிடம் தெரிவித்த போது அவர் அம்மா அதற்கு தடையைத்தான் விதித்திருக்கிறார்.

எனினும் அம்மாவின் எதிர்ப்பை மீறி கன்னட படமான வீர சங்கல்ப் என்ற திரைப்படம் அவருக்கு வெற்றியை தந்ததோடு தொடர்ந்து திரைப்படங்கள் வந்து சேர்ந்தது. எஸ் வி ரங்காராவ் இவரது பெயரை மாற்றி வாணிஸ்ரீ என்று வைத்திருக்கிறார் தெலுங்கிலும் இவர் மிகச்சிறப்பான நடிகையாக வலம் வந்தார்.

தமிழ் திரை உலகில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த இவர் எம்ஜிஆர் படத்தில்தான் முதன்முதலாக ஹீரோயினியாக நடித்திருக்கிறார். அடுத்ததாக சிவாஜியோடு ஜோடி சேர்ந்து உயர்ந்த மனிதன் படத்தில் நடித்த இவரது நடிப்பை பார்த்து பலரும் பாராட்டினார்கள்.

மேலும் இந்த படத்தில் இடம் பிடித்த நாளை என்ற வேளை பார்த்து ஓடிவா நிலா என்ற பாடல் தமிழ் மக்களின் நெஞ்சங்களை அள்ளி சென்றதோடு இவரை அதிகளவு நேசிக்கக்கூடிய ரசிகர் வட்டாரத்தையும் உருவாக்கிக் கொடுத்தது.

இதை அடுத்து வாணி ராணி என்ற படத்தில் இவர் நடித்திருந்த நடிப்பு மட்டுமல்லாமல் இவரது ஸ்டைல் அனைவரையும் கவரக்கூடிய விதத்தில் அமைந்தது. இதை எடுத்து படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே தனது குடும்ப மருத்துவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களது திருமணம் காதல் திருமணம் ஆகத்தான் அன்றே அமைந்தது. இதனை அடுத்து சினிமாவை விட்டு முற்றிலும் விலகிய இவர் குடும்பம் குட்டி என்று செட்டில் ஆகிவிட்டார்.

வாணி ஸ்ரீ தைராய்டு பிரச்சனைகள்..

வாணிஸ்ரீக்கு பிறந்த குழந்தைகள் அவரது தந்தையைப் போலவே மருத்துவராக மாறி மக்கள் சேவையை திறம்பட செய்தார்கள். குழந்தைகள் வளர்ந்த நிலையில் மீண்டும் வாணிஸ்ரீ திரைப்படத்திற்கு ரீஎன்ட்ரி கொடுத்து அம்மா வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். இதற்கிடையில் எமது மகன் ஒருவர் மாரடைப்பால் இறந்து போனார்.

இதனை அடுத்து தைராய்டு பிரச்சனையால் உடல் ரீதியாக பாதிக்கப்பட்ட வாணிஸ்ரீ இதனால் பல்வேறு தொல்லைகளுக்கு உள்ளானார். அந்த சமயத்தில் இவருக்கும் இவரது சகோதரிக்கும் ஏற்பட்ட சொத்து தகராறு காரணமாக மனரீதியாகவும் பாதிக்கப்பட்டார்.

திருமணத்துக்கு முன்பு வாணி ஸ்ரீ சம்பாதித்த அத்தனை சொத்துக்களையும் அவருடைய அக்கா நிர்வகித்து வந்த வேளையில் சொத்துக்களை மீட்டெடுக்க மிகப்பெரிய போராட்டத்தை செய்ய வேண்டி இருந்தது.

கோர்ட் கேஸ் என அலைந்த வாணிஸ்ரீ..

இதனை அடுத்து நடிகையாக இருந்த சமயத்தில் சேர்த்து வைத்த சொத்தை மீட்டெடுக்க தனது அக்காவின் மீது கேஸ் போட்டு கோர்ட் கேஸ் என்று 12 ஆண்டுகளுக்கு மேலாக அலைந்து இருக்கிறார் வாணிஸ்ரீ.

இவர் அலைந்ததற்கு பலனாக நீண்ட ஆண்டுகள் கழித்து அந்த சொத்துக்கள் அனைத்தையும் வாணிஸ்ரீ தன் பக்கம் மீட்டு எடுத்து வந்தார். அப்படி அவருக்கு திரும்ப கிடைத்த சொத்துக்களை கொண்டு பல நிறுவனங்களை ஆரம்பித்து நடத்த ஆரம்பித்தார் வாணிஸ்ரீ.

இதனை அடுத்து அரசியல் சமூக சேவை என்று இரண்டிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட நடிகை வாணிஸ்ரீ சினிமாவில் போல்டாக நடித்தது போலவே வாழ்க்கையிலும் படு போல்டாக அனைத்தையும் எதிர்கொண்டவர்.

அத்தோடு குறுகிய காலத்தில் திரைப்படங்களில் ஒரு நிறைவான இடத்தை பிடித்து ரசிகர்களின் மத்தியில் இன்றளவும் பேசப்படும் நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார் என்றார் அதற்கு அவரது தனித்துவமான நடிப்பும் ஆடை அலங்காரமும் பக்க பலமாக இருந்தது என்று கூறலாம்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam