ட்வீட் போட்ட தேவரகொண்டா செமையா பிளாப் ஆனது நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்த “லைகர்” திரைப்படம்

மிகப்பெரிய எதிர்பார்ப்போடு உருவாக்கப்பட்ட பிரம்மாண்டமான படம் என்று இந்த படத்தை நாம் கூறலாம்.  தனது வாயால் இந்தப்படம் இப்படி போகும் என இவர் எண்ணியிருக்க மாட்டார். அந்த அளவுக்கு மிகப் பெரிய அடியை இது இந்த நடிகருக்கு கொடுத்துள்ளது.

ஆமாம். இந்தி, தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் பேன்-இந்திய படமாக உருவாக்கப்பட்ட  லைகர் திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்நாத்  இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் பெண்களின் மனங்களைக் கொள்ளை கொண்ட காதல் நாயகன் விஜய் தேவரகொண்டா   கதாநாயகனாக நடித்திருந்தார்.இவர் முதல் முதலாக நுவ்விலா என்ற நகைச்சுவை படத்தின் மூலம் 2011 ஆம் ஆண்டு திரையுலகத்திற்கு அறிமுகமானார்.

லைக்கர் படத்தில் ரம்யா கிருஷ்ணன், அனன்யா பாண்டே, மைக் டைசன் போன்ற பலரும் நடித்திருக்கிறார்கள். மிகவும் பிரம்மாண்டமான பொருட்செலவில் இயக்கப்பட்ட இந்த படமானது பெருவாரியான மக்களின் கவனத்தை ஈர்த்து மிகப்பெரிய வசூலை கொடுக்கும் என  எதிர்பார்க்கப்பட்டது.

மேலும் இந்தப் படத்தில் ஜெயம் ரவி நடித்த  எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற படத்தில் சாயல்கள் அதிகளவில் காணப்படுகிறது. எனவே லைக்ர் படத்தை ரீமேக் என்று கூட கூறலாம். இந்த படத்தில் வரும் காட்சிகள் அனைத்துமே அமெரிக்காவில் உள்ள லாஸ்வேகாஸ் நகரில் எடுக்கப்பட்டிருக்கிறது.

எனினும் லைகர் படம் வெளியாவதற்கு முன்பே விஜய் தேவரகொண்டா ட்விட்டரில் பேசிய பேச்சுக்கள் தான் இந்த படத்தின் குறைந்த வசூலுக்கு மிக முக்கிய காரணமாக உள்ளது என அனைவரும் மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.

 

இதையடுத்து தனது தவறை உணர்ந்து விஜய்தேவரகொண்டா தான் பேசிய பேச்சிற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். ஆணவமாக யார் தடுக்கிறார்கள் பார்க்கலாம் என்று ஹேஷ்டேகுக்கு பதிலளித்த தேவர கொண்டாவால் மக்கள் யாரும் தியேட்டருக்கு வராமல் புறகணித்தது காரணமாக  தான் இந்த படம் பிளாப் ஆனது.

இதைத்தான் தவளை தன் வாயால் கெடும் என்று என்கிறார்களோ? எனினும் இவர் வருத்தம் தெரிவித்த விதம் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது. மக்கள் சக்தி அளப்பரியது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …