வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பிரபலங்கள் யார் யார்..? – இதோ பட்டியல்…!

திரை துறையை பொருத்தவரை நடிகர் நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொள்வதும் ஓரிரண்டு ஆண்டில் விவாகரத்து செய்து கொள்வதும் வழக்கமாகிவிட்டது.

மேலும் சில நடிகைகள் தங்களது மார்க்கெட் குறைந்து விடக் கூடாது என்பதற்காக குழந்தை பெற்றுக் கொள்ளாமலும் இருக்கிறார்கள்.

சில நடிகைகள் வயதான பின்பு குழந்தை பெற்றுக் கொள்ள முயற்சிப்பதாலும், சில மருத்துவ காரணங்களால் குழந்தை பெற முடியாத காலம் வாடகை தாய் மூலம் குழந்தைகளை பெற்றெடுத்து கொள்கிறார்கள்.நடிகைகள் மட்டுமல்ல நடிகர்களும் இம்முறையையே பயன்படுத்துகிறார்கள் என்பது ஆச்சரியப்படும் விஷயமாகும்.

பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி ஹீரோவாக வலம்  பெறுபவர் நடிகர் அமீர்கான். அமீர்கான் கிரண் ராவ் தம்பதியினர் கடந்த 2011 ஆம் ஆண்டு வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்துள்ளனர்.

ஹிந்தியில் சூப்பர் ஸ்டார் ஆன ஷாருக்கான் 2013 ஆம் ஆண்டு வாடகை தாய் மூலம் தனது இரண்டாவது மகனை பெற்றெடுத்துள்ளார்.

பாலிவுட் பிரபலமான ஷில்பா ஷெட்டியும் முதல் குழந்தையை அவர் பெற்றெடுத்துள்ளார். மீண்டும் 2020ல் ஒரு பெண் குழந்தையை வாடகை தாய் மூலம் பெற்றெடுத்துள்ளார்.

இதுபோலவே பாலிவுட்டில் மட்டும் அல்லாது அனைத்து திரையுலகிலும் பிரபலமான சன்னி லியோன் வாடகை தாய் மூலமே இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

மேலும் நடிகை பிரியங்கா சோப்ரா அவர்களும் 2018 ல் ஒரு பெண் குழந்தையையும், 2017ல் கரன்ஜோகர் இரட்டை ஆண் குழந்தையையும் வாடகை தாய் மூலம் பெற்றெடுத்துள்ளார்கள். பிரபல நடிகர் ஸ்ரேயாஸ்- தீப்தி ஜோடியும் 2017 இல் வாடகை தாய் மூலமே குழந்தை பெற்றுள்ளார்கள்.

இந்த வரிசையில் கடந்த ஜூன் மாதம் திருமணம் ஆன நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதியினர் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் இத்தகவல் குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினையும் இத்தம்பதியினர் இன்னும் அறிவிக்கவில்லை.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …