திரை உலகில் சிறு வயதிலேயே நடிக்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் இருந்தாலும் ஒரு சிலருக்கு மட்டும் தான் அந்த வாய்ப்பு கிடைத்து ரசிகர்களின் மத்தியில் பேரும் புகழும் அடைகிறார்கள்.
வயது முதிர்ந்த போதும் நடிக்க மாட்டோமா? என்ற எண்ணத்தில் சினிமாவில் நடிக்க தினம், தினம் தேடுதல்களில் ஈடுபட்டு அதிர்ஷ்டம் இல்லாமல் பலரும் வாய்ப்புகளை இழந்து தவிக்க கூடிய நேரத்தில் 20 வயதிலேயே சினிமாவில் கால் பதித்த நடிகைகள் பற்றிய பதிவினை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
20 வயசுக்கு முன்னாடியே..
இந்திய திரை உலகில் 20 வயது ஆவதற்கு முன்பே சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து ரசிகர்களின் கனவு தேவதையாக உலா வந்த தென்னிந்திய நடிகைகள் யார்? யார்? என்பதை அறிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்.
அந்த வகையில் கீர்த்தி ஷெட்டி சூப்பர் 30 என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் இந்த தமிழ் படத்தில் அறிமுகம் ஆகும் போது இவரது வயது 17 தான்.
குறுகிய காலத்தில் ஏராளமான படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகைகளில் ஒருவர் கீர்த்தி.
இவரை அடுத்து இரண்டாவதாக காஜல் அகர்வாலை சொல்லலாம். இவர் முதல் படத்திலிருந்து தன் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தும் போது இவருக்கு வயது வெறும் 19 மட்டும் தான்.
மூன்றாவதாக இந்திய இளைஞர்களின் க்ரஷ் என்று சொல்லப்படும் ராஷ்மிகா மந்தனா. 2016 ஆம் ஆண்டு வெளி வந்த க்ரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இவரும் தனது முதல் படத்தில் நடிக்கும் போது வயது 19 என்பது பலருக்கும் தெரியாது.
நான்காவதாக மில்க் பியூட்டியாக திகழும் தமன்னா நடித்த முதல் படம் ஹிந்தி படம் தான். இந்த படத்தின் இவர் நடிக்கும் போது இவர் 16 வயது மட்டுமே நிறைந்திருந்தவராக இருந்தார்.
சினிமாவில் கொடி கட்டிய நடிகைகள்..
அடுத்ததாக 90-களில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்த நடிகை சிம்ரன் தென்னிந்திய சூப்பர் ஸ்டார் நடிகையாக மாறுவதற்கு முன்பு பாலிவுட்டில் தனது பயணத்தை ஆரம்பிக்கும் போது இவருக்கு வயது 19. இந்த வயதிலேயே முக்கியமான ரோலில் நடித்து மிகவும் பிரபலமானார்.
இவரை அடுத்து குந்தவையாக வந்து ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்த நடிகை திரிஷா 1999-ஆம் ஆண்டு பிரசாந்த் நடிப்பில் வெளி வந்த ஜோடி படத்தில் அறிமுகமாகும் போது இவருக்கு இளமை மாறா பதினாறு வயதாகும்.
லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகை நயன்தாரா மலையாள படத்தில் முதல் முதலாக நடிக்கும் போது இவருக்கு வயது 19 தான். தற்போது தென்னிந்திய திரை உலகில் நம்பர் ஒன் நடிகையாக மாறி இருக்கும் இவர் பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து அசத்தி வருகிறார்.
லிஸ்டை பாத்தா ஷாக்காவிங்க..
நயன்தாராவை அடுத்து பிரியா பிரகாஷ் வாரியார் அடர் லவ் என்ற திரைப்படத்தில் கண் அடிக்கும் காட்சியின் மூலம் பிரபலம் ஆனவர். அந்தப் படத்தில் நடிக்கும் போது அவர் வயது 18 ஆகும்.
சின்ன வயதிலேயே தென்னிந்திய சினிமாவில் நுழைந்து இன்று வரை தனக்கென ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகைகளின் லிஸ்ட்டை பார்த்து நீங்கள் மலைத்து போய் இருக்கலாம்.
தற்போது இந்த லிஸ்ட் இணையத்தில் வைரலாக பரவி ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளதால் ரசிகர்கள் அனைவரும் இது பற்றி பேசி அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.