WPL ஏலத்தில் அதிக விலை கொடுத்து எடுக்க பட்ட 10 வீராங்கனைகளில் பட்டியல்..!! யார் யார் எந்த அணிக்காக விளையாடுவார்கள்..!!

WPL ஏலத்தில் அதிக விலை கொடுத்து எடுக்க பட்ட 10 வீராங்கனைகளில் பட்டியல்:கிரிக்கெட் வரலாற்றில் நாளை முதல் ஒரு புதிய ஆரம்பம் நடக்க உள்ளது.
இந்தியாவில் முதல் முறையாக பிசிசிஐ மகளிர் பிரீமியர் லீக்கை (WPL) மார்ச் 4 முதல் தொடங்க உள்ளது. முன்னதாக பிப்ரவரி 13 ஆம் தேதி, பெண்கள் பிரிமியர் லீக் ஏலம் நடைபெற்றது, இதில் இந்திய வீரர்கள் உட்பட பல வெளிநாட்டு வீரர்ககளுக்கும் பண மழை கொட்டியது.

WPL இன் மிகவும் விலையுயர்ந்த 10 வீரர்கள் பெயர்கள் பின்வருமாறு.

இந்திய அளவில் மிக அதிக விலை குடுத்து வாங்க பட்ட நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா WPL இன் விலை உயர்ந்த வீராங்கனை ஆவார், அவர் RCB ஆல் 3 கோடியே 40 லட்ச ரூபாய்க்கு வாங்கப்பட்டார், அதே நேரத்தில் RCB அவரை தங்கள் அணியின் கேப்டனாகவும் ஆக்கியுள்ளது. சிறப்பு என்னவென்றால், அதே நேரத்தில் அவர் அதிக விலைக்கு வாங்க பட்ட இந்திய வீராங்கனை ஆவார்.

ஸ்மிருதி மந்தனா – ரூ 3.40 கோடி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (அடிப்படை விலை – 50 லட்சம்)
ஆஷ்லே கார்ட்னர் – ரூ 3.2 கோடி, குஜராத் ஜெயண்ட்ஸ் (அடிப்படை விலை – 50 லட்சம்)
நடாலி ஸ்கிவர் – 3.2 கோடி, மும்பை இந்தியன்ஸ் – (அடிப்படை விலை – 50 லட்சம்)
தீப்தி சர்மா – ரூ 2.6 கோடி, யுபி வாரியர்ஸ் – (அடிப்படை விலை – 50 லட்சம்)
ஜெமிமா ரோட்ரிக்ஸ் – ரூ 2.2 கோடி, டெல்லி கேப்பிடல்ஸ் (அடிப்படை விலை – 50 லட்சம்)
ஷஃபாலி வர்மா – ரூ 2 கோடி, டெல்லி கேப்பிடல்ஸ் – (அடிப்படை விலை – 50 லட்சம்)
பெத் மூனி – ரூ 2 கோடி, குஜராத் ஜெயண்ட்ஸ் (அடிப்படை விலை – 50 லட்சம்)
ரிச்சா கோஷ் – 1.9 கோடி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (அடிப்படை விலை – 50 லட்சம்)
பூஜா வஸ்த்ரகர் – 1.9 கோடி, மும்பை இந்தியன்ஸ் (அடிப்படை விலை – 50 லட்சம்)
ஹர்மன்பிரீத் கவுர் – ரூ 1.8 கோடி, மும்பை இந்தியன்ஸ் (அடிப்படை விலை – 50 லட்சம்)
இது தவிர, ரேணுகா சிங் – 1.7 கோடி, ஆர்சிபி (அடிப்படை விலை – 50 லட்சம்)

முதல் போட்டியில் குஜராத் மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன
மகளிர் ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டம் குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையே நடைபெறுகிறது. அனைத்து போட்டிகளும் மும்பையின் மூன்று மைதானங்களில் நடைபெற உள்ளது. முதல் போட்டி டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. மும்பை அணியின் கேப்டன் பதவி இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரிடம் கொடுக்க பட்டுள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைமை பெத் மூனியிடம் கொடுக்க பட்டுள்ளது.

 

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …