40 வயதை தொட்டு விட்டாலும் இன்னும் கதாநாயகியாக வலம் வரக்கூடிய ஒரே நடிகை நம் திரிஷா தான். சினிமாவில் நுழைந்த நாள் முதல் இன்று வரை ஹீரோயினியாகவே நடித்து அசத்தி வரும் இவருக்கு 40 வயது ஆகியும் இன்னும் திருமணம் ஆகவில்லை.
இவர் நடிப்பில் பல படங்கள் உருவாகி உள்ளது. தற்போது வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தில் இவர் குந்தவையாக நடித்து ரசிகர்கள் மத்தியில் தற்போது சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார் என்று கூறலாம்.
இவர் முன்னணி நடிகர்களாக திகழும் விஜய், அஜித், ஜெயம் ரவி, சூர்யா போன்ற பல நடிகர்களோடு நடித்துவிட்டு எனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தியவர்.
இதனை அடுத்து தற்போது இவர் விஜய் நடிப்பில் உருவாக உள்ள தளபதி 67 படத்தில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். இந்த சூழ்நிலையில் திரிஷாவின் பேனர் புகைப்படத்தை பார்த்துவிட்டு அன்போடு ஒரு குழந்தை ஒன்று முத்தம் கொடுக்கும் வீடியோ தான் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த வீடியோவை நடிகை திரிஷாவே வெளியிட்டு அதில் கண்ணீர் எமோஜியுடன் எமோஷனலாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார். இதைப் பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியத்தோடு பார்த்து வருகிறார்கள்.
மேலும் சில ரசிகர்கள் உங்களை மணக்க ஒரு மன்னன் பிறந்து விட்டானா என்று கிண்டலாக கேள்வியை பதிவு செய்திருக்கிறார்கள். தற்போது இந்த வீடியோவானது மிகவும் வைரலாக பரவி வருகிறது இதனை அடுத்து சில பேர் இந்த வீடியோவையும் தங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்து வருகிறார்கள்.
தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வரக்கூடிய இவர் இது போன்ற வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அப்ளாசை பெற்றுள்ளார் என்று தான் கூற வேண்டும்.
🥹❤️ pic.twitter.com/NRbX4OesXG
— Kundavai (@trishtrashers) November 19, 2022
இதனை அடுத்து ரசிகர்கள் இவரது திருமணம் எப்போது என்ற கேள்வியை தற்போது இருந்தே கேட்க ஆரம்பித்து விட்டார்கள். இதற்கான பதிலை விரைவில் திரிஷா அளிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.