“தீராத கடன் தொல்லையா..! கவலை வேண்டாம் ..! – இதை பண்ணுங்க கடனை எளிதில் கட்டி முன்னேறுங்கள்..!!

கடன் தொல்லை, தீராத கடனினை பெற்று என்று எப்படி அந்த கடனை அடைப்பது என்று தெரியாமல் பெருவாரியான மக்கள் திண்டாடி வருகிறார்கள். போதாக்குறைக்கு கிரெடிட் கார்டு என்ற ஒரு கார்டை கொடுத்து கடன் வாங்காதவர்களே இல்லை என்று கூறும் அளவு அனைத்து மக்களின் தலையிலும் ஒரு குறிப்பிட்ட  அளவு கடன் சுமையை ஏற்றி விட்டார்கள்.

 இப்போது கடனை எப்படி அடைப்பது என்று தெரியாமல் தத்தளிக்கும் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கக்கூடிய தெய்வங்களை வழிபட்டால் எளிதில் உங்கள் கடனை அடைத்து விடலாம்.

 கடன் தொல்லையில் இருந்து விடுவிக்கும் முருகன்

 கடன் தொல்லையிலிருந்து விடுபட நீங்கள் செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து அருகில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று 12 முறை பிரதட்சணம் செய்வதோடு மட்டுமல்லாமல் நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.இதில் முக்கியமாக கிருத்திகை நட்சத்திரத்தன்று முருகப்பெருமானுக்காக விரதம் இருந்து முருகனை தரிசித்து வரும்போது உங்கள் கடன் தீரும்.

 கடன் தொல்லையில் இருந்து விடுவிக்கும் லட்சுமி நரசிம்ம பெருமாள்

கடன் தொல்லையிலிருந்து நீங்க வேண்டும் என்றால் லட்சுமி நரசிம்ம பெருமாளை பௌர்ணமி பிரதோஷ காலத்தில் தரிசனம் செய்து சுவாதி நட்சத்திரத்தில் பால், இளநீர், பன்னீர், தேன், மஞ்சள், சந்தனம் அபிஷேகப் பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்து துளசி மாலை சாற்றி வழிபட்டு வந்தால் தீராத கடனும் தீரும்.

 மேலும் நீங்கள் சஷ்டி கவசம், முருகன் கவசம் மட்டுமல்லாமல் ஸ்ரீ நரசிம்ம பெருமாள் திருவடிகளில்  சரணாகதி அடைந்து மனம் உருக வேண்டுவதோடு மட்டுமல்லாமல் கடன் தொல்லையை தீர்க்கக்கூடிய ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம பெருமாளின் ஸ்தோத்திரங்களை தினமும் ஜெபிப்பதின் மூலம் கடன் தொல்லையிலிருந்து விரைவில் வெளியே வர முடியும்.

 அதுமட்டுமல்லாமல் நீங்கள் வாங்கி இருக்கும் எல்லா கடன்களும் தீர யோக நரசிம்மரை நீங்கள் உங்கள் வீட்டில் பூஜை அறையில் வைத்து அகல் தீபத்தில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி வழிபட வேண்டும்.

 மேலும் நீங்கள் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் கடன் வாங்க கூடாது. இது தவிர தினமும் காலை மாலை மந்த்ர ராஜபத ஸ்தோத்திரத்தை நீங்கள் சொல்லுவதின் மூலம் கடன் தொல்லையில் இருந்து விடுதலை அடைக்கலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam