இதனால் தான் ஸ்ருதிஹாசனுடன் அப்படி நடிச்சேன்.. குண்டை தூக்கி போட்ட லேகேஷ் கனகராஜ்..

தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக என்றும் திகழும் உலகநாயகன் கமலஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் பற்றி உங்களுக்கு மிக நன்றாக தெரியும். இவர் ஏழாம் அறிவு என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார்.

தனது அப்பாவை போலவே பன்முக திறமையை கொண்டிருக்கும் ஸ்ருதிஹாசன் தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழி படங்களில் நடித்து ரசிகர்களின் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டவர்.

ஸ்ருதிஹாசன் உடன் இப்படித்தான் நடிச்சேன்..

அதுபோலவே தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக இருப்பதோடு மட்டுமல்லாமல் இவர் படத்தில் நடித்து விட்டால் ஓஹோ என்ற புகழ் பெறக்கூடிய நடிகர்கள் அதிகம் என்று சொல்லக்கூடிய வகையில் டாப் ஹீரோக்களை உருவாக்கிக் கொடுக்கும் லோகேஷ் கனகராஜ் மிகச்சிறந்த இயக்குனராக திகழ்கிறார்.

இதையும் படிங்க: இது பாவாடையா.. இல்ல.. ஊசி போன வடையா.. இப்படி நூல் நூலா தொங்குது.. தமன்னா கிளாமர் கலவரம்!

இவர் இயக்கத்தில் வெளி வந்த மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற படங்கள் அனைத்தும் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியை பெற்று தந்ததோடு மட்டுமல்லாமல் தற்போது ரஜினியின் 171 வது படத்தையும் இயக்க இருக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

அத்தோடு லோகேஷ் கனகராஜ் கையில் கைதி இரண்டு, ரோலக்ஸ், இரும்புக்கை மாயாவி போன்ற படங்களும் கைவசம் உள்ளது.

மேலும் இவர் இயக்கத்திற்கு மகுடம் சூட்டுவது போல கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் கூட்டணியில் சுருதிஹாசன் நடிக்க இருக்கிறாரா? என்ற கேள்விகள் எழுந்துள்ளது. மேலும் திடீர் என சுருதிஹாசனோடு கூட்டணி அமைத்த ரகசியம் என்ன என்று ரசிகர்கள் பல்வேறு வகையான கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள்.

லோகேஷ் இயக்கத்தில் ஸ்ருதி நடிக்கவில்லையா..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கவில்லை. ஆனால் ஸ்ருதிஹாசன் இயக்கத்தில் தான் லோகேஷ் நடிக்க இருக்கிறார் என்ற செய்தி படுவேகமாக பரவி வருகிறது.

மேலும் ஸ்ருதிஹாசன் இசையின் மீது அதீத ஆர்வம் உடையவர் என்பது உங்கள் அனைவருக்குமே மிக நன்றாக தெரியும். இவர் ஏற்கனவே பல இசை ஆல்பங்களை வெளியிட்டு இருக்கிறார்.

அந்த வகையில் தற்போது காதலர் தினத்திற்காக ஸ்ருதிஹாசன் ஒரு இசை ஆல்பம் பாடலை உருவாக்கி இருக்கிறார். அந்த பாடலை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

குண்டை தூக்கிப்போட்ட லோகேஷ்..

அந்த இசை ஆல்பத்தை பற்றி ஸ்ருதிஹாசன் சொன்ன கான்செப்ட் லோகேஷ் கனகராஜ் பிடித்ததின் காரணத்தால் அந்த ஆல்பத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். ஸ்ருதியின் இசையில் லோகி நடிக்க இருப்பது ரசிகர்களின் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதுமட்டுமல்லாமல் இது பற்றி லோகேஷ் கனகராஜ் கூறும் போது ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்துடன் பேசிக்கொண்டிருந்த போது நான் வேறு எதையோ பேசிக் கொண்டிருந்தேன். அவர்கள் என்னிடம் எந்த ஆல்ப பாடலை செய்யுமாறு கேட்டார்கள்.

எவ்வளவு பெரிய நிறுவனம் கேட்கும் போது நான் முடியாது என மறுத்தால் சரியாக இருக்காது என்ற ஒரு காரணத்துக்காக மட்டும் தான் சுருதிஹாசன்னுடன் அப்படி ஒப்புக்கொண்டேன் என்று கூறியதன் மூலம் விருப்பப்பட்டு சுருதிஹாசனுடன் நான் நடிக்கவில்லை என்பதை மறைமுகமாக தெரிவித்து இருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

இதையும் படிங்க: சிம்பு என்னை விட சின்ன பையன்.. ஆனால், என் கல்யாணத்துக்கு அப்புறம் கூட.. ஜோதிகா ஓப்பன் டாக்..!

மேலும் படு நெருக்கமாக ஸ்ருதிஹாசனுடன் நடித்திருக்க கூடிய காட்சிகள் இணையத்தில் வெளிவந்து ரசிகர்களின் மத்தியில் பல்வேறு விதமான விமர்சனங்களை வைத்துள்ளது.

இதனை அடுத்து இதனால் தான் ஸ்ருதிஹாசனுடன் அப்படி நடித்தேன் என்று குண்டை தூக்கி போட்ட லோகேஷ் கனகராஜ் பேச்சானது பரவலாக ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version