முடிச்சிடலாமா.. கூலி படத்தின் முதல் அப்டேட்டிலேயே கமலை வம்பிழுத்த படக்குழு.. ரைட்டு சம்பவம் இருக்கு!.

தற்சமயம் தமிழில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் முக்கியமானவராக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இருந்து வருகிறார். தமிழில் தோல்வி முகம் காணாத ஒரு இயக்குனராக இருந்து வருபவர் லோகேஷ் கனகராஜ். அவர் இயக்கிய முதல் படமான மாநகரம் திரைப்படமே ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது.

அடுத்து அவர் இயக்கிய இரண்டாவது திரைப்படமான கைதி திரைப்படம் தென்னிந்திய அளவில் பெரிதாக பேசப்பட்ட படமாக இருந்தது. கைதி திரைப்படத்தை தொடர்ந்து மூன்றாவது திரைப்படமே நடிகர் விஜய்யை வைத்து இயக்கும் வாய்ப்பை பெற்றார் லோகேஷ் கனகராஜ்.

ரஜினியோடு காம்போ

அந்த வகையில் அவர் இயக்கிய மாஸ்டர் திரைப்படமும் எக்கச்சக்கமான வெற்றியை பெற்று கொடுத்தது. அடுத்து நான்காவது திரைப்படம் கமலை வைத்து இயக்கினார். கமலை வைத்து அவர் இயக்கிய விக்ரம் திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்போதைய தமிழ் சினிமாவில் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு பெரும் வெற்றியை கொடுத்த திரைப்படமாக விக்ரம் திரைப்படம்தான் இருந்து வருகிறது. அதற்கு பிறகு விஜய்யை வைத்து லியோ என்கிற திரைப்படத்தை இயக்கினார். இந்த நிலையில் தமிழில் பிரபல நடிகரான ரஜினியை வைத்து மட்டும்தான் படம் இயக்காமல் இருந்தார் லோகேஷ் கனகராஜ்.

அந்த வகையில் சமீபத்தில் நடிகர் ரஜினியின் நடிப்பில் கூலி என்கிற திரைப்படத்தையும் இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. ஏனெனில் ரஜினி லோகேஷ் கனகராஜ் இணையும் போது கண்டிப்பாக அது பெரிய ஹிட் படமாக இருக்கும் என்பது பலரது கருத்தாக இருக்கிறது.

கமலை வம்பிழுத்த படக்குழு

நடிகர் ரஜினியுமே கூட இந்த படத்தின் மீது அதிக நம்பிக்கையுடன் இருந்து வருகிறார். இந்த நிலையில் கூலி படம் குறித்த முக்கிய அப்டேட் நாளை வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அறிவித்து இருக்கிறது.

இந்த நிலையில் இந்த படம் குறித்து அதிக எதிர்பார்ப்பு உருவாகி வருகிறது மேலும் இந்த படமும் போதை தடுப்பு தொடர்பான படமாக இருக்கும் என்று ஒரு பக்கம் பேச்சு இருக்கிறது. ஆனால் படத்தில் ஆரம்பம் முதலே கடிகாரம் ஒரு அடையாளமாக காட்டப்பட்டு வருவதால் கடிகாரத்திற்கும் இந்த படத்திற்கும் ஏதோ தொடர்பு இருக்கும் என்று கூறப்பட்டு வந்தது.

ரைட்டு சம்பவம் இருக்கு

அதற்கேற்றார் போல இப்பொழுது அப்டேட் குறித்த போஸ்டர் வெளியானதிலும் கடிகாரம் முள்தான் முக்கிய விஷயமாக இருக்கிறது அதனை பார்த்து வரும் ரசிகர்கள் ஒருவேளை படத்தில் ரஜினி வாட்ச் மெக்கானிக்காக இருப்பாரோ என்றெல்லாம் பேசி வருகின்றனர்.

இதற்கு நடுவே இந்த புகைப்படத்தை வெளியிட்ட சன் பிக்சர்ஸ் நிறுவனம் கீழே முடித்து விடலாமா என்று கேப்ஷனை போட்டு இருக்கின்றனர். அதாவது விக்ரம் திரைப்படத்தில் கமலுக்கு ஆரம்பிக்கலாமா என்கிற ஒரு வசனம் ஐகானிக் வசனமாக இருக்கும்.

அதேபோல ரஜினிக்கு இந்த படத்தில் முடிச்சிடலாமா என்கிற வசனத்தை வைத்திருக்கின்றனர் போல என்று பேச்சுக்கள் இருக்கின்றன. ரஜினி கமல் போட்டி என்பது இன்னமும் லோகேஷ் படம் வரையில் தொடர்கிறது என்று இது குறித்து ரசிகர்கள் மத்தியில் பேச்சுக்கள் இருக்கின்றன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version