நிராகரித்த மாஸ் ஹீரோ.. பதிலடி கொடுத்த லோகேஷ் கனகராஜ்..!

தமிழ் திரை உலகில் தற்போது முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் லோகேஷ் கனகராஜ் ஒரு மிகச் சிறந்த இயக்குனர் மட்டுமல்லாமல் மிகச்சிறந்த திரைக்கதை ஆசிரியராக விளங்குகிறார்.

இவர் 2016-ஆம் ஆண்டில் இருந்து மாநகரம், கைதி போன்ற திரைப்படங்களை இயக்கினார். இதனை அடுத்து இவர் 2020 -ஆம் ஆண்டு விஜய் மற்றும் விஜய் சேதுபதியை வைத்து மாஸ்டர் என்ற திரைப்படத்தை இயக்கினார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ்..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளி வந்த விக்ரம் திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் வெகுவான ஆதரவை பெற்றதோடு மட்டுமல்லாமல் வசூலையும் வாரி குவித்தது.

மேலும் இந்த திரைப்படம் லோகேஷ் கனகராஜ் திரையுலக வாழ்க்கைக்கு திருப்பு முனையாக அமைந்தது என்று சொல்லலாம்.

இதனை அடுத்து தளபதி விஜய் நடிப்பில் வெளி வந்த லியோ திரைப்படத்தை இயக்கியதை அடுத்து மாஸ் டைரக்டர்களின் வரிசையில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்து நிரந்தரமான சிம்மாசனத்தை போட்டு அமர்ந்தார்.

நிராகரித்த மாஸ் ஹீரோ..

இவர் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் வலை தொடர்களையும் இயக்கி இருக்கக்கூடிய இவர் 2018-ஆம் ஆண்டு வெளி வந்த வெள்ள ராஜா என்ற வலைத்தொடருக்கு துணை எழுத்தாளராக பணிபுரிந்து இருக்கிறார்.

அத்தோடு அண்மையில் சுருதிஹாசன் உடன் இணைந்து ஆல்பம் ஒன்றில் படு நேர்த்தியான முறையில் நடித்து இருந்தது பல்வேறு வகைகளில் விமர்சனத்திற்கு உள்ளானது.

பதிலடி தந்த லோகேஷ் கனகராஜ்.

பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் பெரிய பட்ஜெட் படம் ஒன்றை இயக்க லோகேஷ் கனகராஜிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து, தயாரிப்பாளரை சந்தித்த லோகேஷ் கனகராஜ் நடிகர் பிரபாஸ் ஹீரோவாக நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று விருப்பப்பட்டிருக்கிறார்.

இதனை தொடர்ந்து பிரபாஸை சந்தித்து தன்னுடைய கதையையும் சொல்ல போய் இருக்கிறார். ஆனால் நடிகர் பிரபாஸ் கதை நன்றாக இருக்கிறது.
ஆனால் என்னால் நடிக்க முடியாது என சில காரணங்களை கூறி லோகேஷ் கனகராஜ் நிராகரித்திருக்கிறார்.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது.

அதன் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது.

ஆனால் லோகேஷ் கனகராஜ் படதயை தவிர்த்து விட்டு நடிகர் பிரபாஸ் தேர்வு செய்து நடித்த படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனத்தை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version