“விஜய் படத்தை இப்படி எடுக்க சொன்னா..” – எப்படி முடியும்..? – ஓப்பனாக பேசிய லோகேஷ் கனகராஜ்..!

இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் சமீபத்திய ஒரு பேட்டியில் நடிகர் விஜய் படத்தை வேறுவிதமாக.. அதாவது ஹீரோயின் இல்லாமல்.. பாடல்கள் இல்லாமல்… பழக்கப்பட்ட சென்டிமெண்ட் காட்சிகள் இல்லாமல் ஒரு முழு நீள படத்தை எடுக்க முடியுமா..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

பொதுவாகவே முன்னணி நடிகர்களின் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு கேள்விதான் இது. படங்களில் பாடல்கள்.. தேவையில்லாத சென்டிமென்ட் காட்சிகளில்.. ஹீரோயின்.. இதெல்லாம் தேவைதானா..? என்ற கேள்வி சமீப காலமாக தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தொடங்கியிருக்கிறது.

காரணம் திரைப்படங்களில் ஹீரோயினாக வரும் நடிகைகள்… ஹீரோவுடன் சேர்ந்து கொண்டு நாலு பாடலுக்கு டூயட் பாடுவதற்கும்.. ஹீரோ சோகமாக அல்லது தோல்வி அடைந்து விட்டதாக உணரும் பொழுது அவருக்கு அட்வைஸ் கொடுக்கும் நான்கு காட்சிகளில் நடிப்பதற்கும்.. கொஞ்சம் கிளாமர் காட்டுவதற்கும்.. என மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள்.

வெகுசில படங்களில் மட்டுமே கதையோடு சேர்ந்து பயணிக்க கூடிய கதாபாத்திரங்களில் ஹீரோயின்கள் இருக்கிறார்கள். குறிப்பாக விஜய் படங்களை எடுத்துக் கொண்டால் பெரும்பாலான படங்களில் ஹீரோயின்களை எடுத்து விட்டு படத்தை பார்த்தால் இன்னும் விறுவிறுப்பாக இருக்கும்.. என்று ரசிகர்கள் நம்புகிறார்கள்.

இப்படியான கேள்வியை பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களிடம் எழுப்பிய பொழுது அவர் கூறிய பதில் என்னவென்றால், இப்படி ஒரு விஷயத்தை நடிகர் விஜயிடம் கூறினால் அவர் உடனே ஓகே பண்ணுங்க என்று சொல்லி விடுவார். என்னோட ஐடியா 50% உன்னோட ஐடியா 50% என்றெல்லாம் அவர் சொல்லவே மாட்டார்.

100% உன்னுடைய படம் எப்படி இருக்குமோ.. நீ எப்படி எதிர்பார்கிறாரோ.. அப்படியே பண்ணு என்று கூறி விடுவார். ஆனால், இந்த இடத்தில் ஒரு பிரச்சனை இருக்கிறது. படம் என்றால் பாடல்கள் ஹீரோயின் காட்சிகள் உள்ளிட்டவை இருக்க வேண்டும் சென்டிமெண்ட் காட்சிகள் இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்கும் ரசிகர்கள் கூட்டம் ஒரு பக்கம் இருக்கிறது.

அதனை அப்படியே தவிர்த்துவிட்டு முழுமையாக பாடல்கள் ஹீரோயின் காட்சிகள் இல்லாமல் ஒரு படத்தை இயக்க முடியுமா என்றால் கண்டிப்பாக முடியும். ஆனால், அதற்கு ரசிகர்களை முதலில் தயார்படுத்த வேண்டும். மெது மெதுவாகத் தான் அவருடைய படங்களில் இப்படியாக மாற்ற முடியும்.

ஏனென்றால் இதற்கு பின்னால் நம்முடைய யோசனை.. நடிகர்களின் உழைப்பு.. நம்முடைய உழைப்பு.. என வ்வளவோ இருந்தாலும் கூட.. கோடிக்கணக்கான பணமும் இருக்கிறது.

தைஒரு தொழிலாக நாம் முன்னெடுக்கும் போது நிச்சயமாக ஒரு புதிய ஒரு முயற்சியை இத்தனை கோடி ரூபாய்களை வைத்துக்கொண்டு சோதனை செய்வது என்பது சிக்கலாக மாறி விடுமோ என்ற அச்சமும் உள்ளது.

எனவே மெதுவாக தான் இப்படியான படங்களை எடுக்க முடியும். உடனே விஜய் படத்தை எப்படி எடுக்க வேண்டும் என்று கூறினால்.. எடுத்து விடலாம்.. ஆனால், வியாபார ரீதியாக அது பொருத்தமாக இருக்குமா..? என்று எனக்கு சந்தேகம் இருக்கிறது.

கண்டிப்பாக ஒரு நாள் நடிகர் விஜயின் படம் சினிமா ரசிகர்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு ஹீரோயின் இல்லாமல் பாடல்கள் இல்லாமல் உருவாகும் அதற்கான வாய்ப்பு எனக்குக் கிடைத்தால் நிச்சயம் நான் அதை செய்வேன் என்று கூறி இருக்கிறார்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …