“அய்யா.. அங்குசாமி.. இதுக்கு தானே காத்துகிட்டு இருக்கோம்..” – தளபதி 67 குறித்து லோகியின் சூப்பர் அப்டேட்..!

நடிகர் விஜய் தற்பொழுது வாரிசு என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகின்றார் இந்த படம் ஒரே நேரத்தில் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகின்றது.

நடிகர் விஜய்யின் முதல் நேரடி தெலுங்கு திரைப்படம் வாரிசு ஆகும். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

வாரிசு என்ற தலைப்பை பார்த்த ரசிகர்கள் கதை என்னவாக இருக்கும் என்று பல்வேறு விதமான கதைகளை இணையத்தில் எழுதி வருகின்றனர்.

மட்டுமில்லாமல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் என படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள் அனைத்தும் கூகுளில் இருந்து எடுக்கப்பட்டவை எனவும் படத்திற்காக பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு எதுவும் தனியாக போட்டோ ஷூட் நடத்தவில்லை எனவும் ரசிகர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

 

மேலும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மானின் உதட்டை வைத்து பிரபல ஆடை நிறுவனத்தின் விளம்பர போஸ்டர் போல ரெடி செய்து துணி கடைக்கு பிரமோஷன் பண்ணிட்டு இருக்கீங்க என்று கருத்துக்களையும் ரசிகர்கள் பதிவிடுவதை அங்கொன்றும் இங்கொன்றுமாக பார்க்க முடிந்தது.

இப்படி இந்த படத்தின் மீது எந்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தாம இருக்கின்றது இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் என்கிறார்கள் ரசிகர்கள்.

அதுவும் சரியான விஷயம்தான். ஏனென்றால் வழக்கமான விஜய் படங்களிலிருந்து இந்தப் படம் முற்றிலும் மாறுபட்டது. ஆரம்ப காலத்தில் விஜய் நடித்த குடும்பப்பாங்கான காதல் திரைப்படங்களை மீண்டும் கண்முன் கொண்டுவரும் ஒரு முயற்சியில் இப்படக்குழு இறங்கியுள்ளது.

எனவே ஆக்ஷன் அதிரடி போன்ற விஷயங்கள் படத்தின் பர்ஸ்ட் லுக் மட்டுமல்ல டீசர் ட்ரைலர் இதுவும் எதிர்பார்க்க முடியாது படத்தின் மீது எதிர்பார்ப்பை எகிற வைத்து விட்டு ரசிகர்களை திரையரங்குக்கு கொண்டுவந்து ஏமாற்றும் ஜிம்மிக்கலை படக்குழு விரும்பவில்லை என தெரிகின்றது.

இந்நிலையில் தளபதி 67 படத்தை இயக்க உள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்த படம் குறித்து சில தகவல்களை ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார். அதில் குறிப்பிடும்படியாக நடிகர் விஜய் இந்த படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

முழுநீள வில்லனாக நடிக்க வேண்டும் என்று நடிகர் விஜய்யின் நீண்ட நாள் ஆசை எனவும் அதனை என்னிடம் பலமுறை கூறியுள்ளார் எனவும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

இதனை அறிந்த அய்யா அங்குசாமி.. இதுக்கு தானே காத்துகிட்டு இருந்தோம்.. தளபதியை வில்லன் கதாபாத்திரத்தில் பார்க்க வேண்டும் என்று தங்களுடைய நீண்ட நாள் ஆசை அதனை லோகேஷ் கனகராஜ் நிறைவேற்றுவார் என்று எதிர்பார்க்கிறோம் என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

லோகேஷ் கனகராஜ் இந்த பேட்டிக்கு பிறகு வாரிசு படத்தை தாண்டி தளபதி 67 படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எதிரி உள்ளது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …