இதுக்காக வடிவேலு என்னிடம் கெஞ்சினார்.. நடிகர் சாமிநாதன் வெளியிட்ட தகவல்..!

ராஜ் கிரனால் தமிழ் திரை உலகத்திற்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்ட வைகை புயல் வடிவேலு பற்றி அதிக அளவு பேச வேண்டிய அவசியமே இல்லை. சிறுவர் முதல் பெரியவர்கள் வரை இவரது பாடி லாங்குவேஜ் பார்த்தாலே சிரிக்க ஆரம்பித்து விடுவார்கள். அந்த அளவு தனது நகைச்சுவை திறனால் அனைவரையும் கட்டிப்போட்டவர்.

ஆரம்பத்தில் சின்ன சின்ன வேடங்களில் சினிமாவில் தலைகாட்டிய இவர் தன்னுடைய தனிப்பட்ட நடிப்பு திறனால் ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கி விட்டார். இதனை அடுத்து பல படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடம் பிடித்துக் கொண்டார்.

நடிகர் சாமிநாதன்..

எனினும் விதி யாரை விட்டது ஒருவர் புகலின் உச்சத்தை நோக்கி செல்லும் போது தான் தன்னடக்கம் தேவை. அந்த அடக்கம் இல்லாமல் நாவை பல்வேறு வகைகளில் தேவையில்லாமல் பயன்படுத்தியதை அடுத்து சினிமாவில் இருந்து சில காலம் ஒதுங்கி இருந்த இவர் நாய் சேகர் ரிட்டன்ஸ் மூலம் ரீஎன்ட்ரி தந்தார்.

இதனை அடுத்து மாமன்னன், சந்திரமுகி படத்தில் நடித்த இவர் தற்போது மாரிசன் படத்தில் நடித்த முடித்து இருக்கிறார். கவுண்டமணி செந்திலுக்கு அடுத்த இடத்தில் தனக்கு என்று ஒரு நிரந்தர பெயரை பெற்றிருக்கக் கூடிய வடிவேலு தனக்கு கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் தக்க முறையில் பயன்படுத்திக் கொண்டார்.

ஒரு கட்டத்தில் வடிவேலுக்கு, கவுண்டமணி மற்றும் செந்தில் திரை உலகில் இருந்து விலகியது சாதகமாக ஆனதை அடுத்து அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு தனக்கு என்று ஒரு டீமை அமைத்து சினிமாவில் தன்னுடைய நகைச்சுவையால் அனைவரையும் கட்டி ஆண்டார்.

இதனை அடுத்து தான் 2000 ஆவது காலகட்டத்தில் வைகைப்புயல் இல்லாத படங்களை இல்லை என்ற ஒரு நிலை ஏற்பட்டது. எல்லா படங்களிலும் புது பாணியில் நடித்து அனைவரது கை தட்டல்களையும் பெற்றார்.

இதற்காக வடிவேலு என்னிடம் கெஞ்சினார்..

இதனை அடுத்து இவரது போராத காலத்தால் ஏற்பட்ட நெருக்கடிகளாலும் சில கண்ட பஞ்சாயத்தாலும் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த இவர் அந்த பிரச்சனைகள் தீர்ந்து மீண்டும் வந்ததை அடுத்து ரசிகர்கள் உற்சாகம் ஆனார்கள்.

எனினும் வடிவேலு உடன் இணைந்து நடித்த நடிகர்கள் பலரும் வடிவேலு தங்களை வளர விடவில்லை என்று ஓபனாக பேச ஆரம்பித்ததை அடுத்து அவர் மேல் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் இழந்ததோடு மட்டுமல்லாமல் கேப்டன் இறப்புக்கு இறுதி மரியாதை செலுத்தாத நபராக விளங்கியதால் அனைவரும் பேசி தீர்த்தார்கள்.

இதனை அடுத்து இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு எந்த விதமான பதிலையும் அளிக்காத நடிகர் வடிவேலு எந்தவிதமான ரியாக்ஷனையும் காட்டாமல் இருந்தார். இந்நிலையில் தற்போது லொள்ளு சபா சாமிநாதன் அளித்த பேட்டி ஒன்றில் வடிவேலு குறித்து பேசி இருக்கிறார்.

அப்படிப் பேசும் போது அவர் ராஜ்கிரன் ஆபீஸில் ஆபீஸ் பாயாக வடிவேலு இருந்த கதை சொன்னதோடு மட்டுமல்லாமல் ஒரு சான்ஸ் வாங்கி கொடுங்க அண்ணே என்று கேட்டு அதன் பின்பு தான் படிப்படியாக வளர்ந்ததாக சொல்லி இருக்கிறார்.

வெளிவந்த பரபரப்பு தகவல்..

இதனை அடுத்து பல வருடங்கள் கழித்து ஆறு படத்தில் அவருடன் ஆறு படத்தில் ஒன்றாக நடித்திருக்கிறேன். அந்த சமயத்தில் அவர் உச்சகட்டத்தில் வளர்ந்து விட்டார்.

டயலாக் பேசுவதற்கு முன்பு என்ன டயலாக்கை பாத்துட்டீங்களா என்று என்னிடம் வந்து கேட்பார் அத்தோடு வேண்டுமென்றால் அந்த டயலாக்கை மாற்ற வேண்டும் என்றால் சொல்லுங்கள் மாற்றிக் கொள்கிறேன் என்பார்.

இப்படி எதற்கெடுத்தாலும் நல்லா இல்லை என்று சொல்லாதீர்கள் என்று ஒரு சமயம் அவரிடம் சொல்லிவிட்டேன். இதை தொடர்ந்து ஒரு வழியாக ஹரியின் துணையோடு டேப் ஓகே ஆனது என்ற விஷயத்தை பகிர்ந்திருக்கிறார்.

இந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் பேசும் பொருளாக மாறி அனைவரும் பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version