அமெரிக்காவின் கலிஃபோர்னிய மாகாணத்தில் இருக்கும் பல்வேறு பகுதிகளில் காட்டுத்தீ பரவி வீடுகள், மருத்துவமனைகள், பள்ளிகள், என எரிந்து நாசமாகி இருக்கின்றன.
இதற்கான காரணம் என்ன..? நிஜமாகவே காட்டு தீ தான் இந்த விபத்துக்கு காரணமா..? என்ற விவாதங்கள் கிளம்பி இருக்கின்றன.
காட்டு தீ ஊருக்குள் பரவியது எப்படி..? என்பது பொதுமக்களின் கேள்வியாக இருக்கிறது. அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள இந்த மோசமான தீ விபத்து வரலாறு காணாத தீ விபத்து என்றும் இதனால் 1.5 லட்சம் மக்கள் தங்களுடைய வீடுகளை இழந்து இருக்கிறார்கள். வாழ்வாதாரத்தை இழந்து இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
மட்டுமில்லாமல் அடுத்த சில நாட்களில் அமெரிக்காவில் புதிய அதிபர் பதவி ஏற்க உள்ள நிலையில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் பெரும்பாலான இடத்தை நாசம் செய்திருக்கிறது. இன்னும் தீ கட்டுப்படுத்த முடியாமல் பரவிக் கொண்டே தான் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் அங்கே இருக்கக்கூடிய தண்ணீர் தட்டுப்பாடு தான்.
இதனால் மக்களிடம் தண்ணீரை பயன்படுத்த வேண்டாம். ஏற்கனவே நீங்கள் வைத்துள்ள தண்ணீரை பயன்படுத்துங்கள். தண்ணீரில் போதுமான அளவுக்கு அழுத்தம் கிடைக்கவில்லை. இதனால் தீயை அணைப்பதில் மிகப்பெரிய சவால் நிலவுகிறது என தீயணைப்புத் துறை சார்பில் அமெரிக்க மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருக்கிறது.
இப்போதுதான், காட்டுத்தீ ஏற்படுகிறதா என்று கேட்டால்.. கிடையாது. இதுவரை 40க்கும் மேற்பட்ட முறை காட்டுத்தீ ஏற்பட்டிருக்கிறது. ஆனால், வழக்கத்திற்கு மாறாக இந்த காட்டுத்தீ ஊர் முழுக்க பரவி ஒன்றரை லட்சம் பேருடைய வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி இருக்கிறது.
மூன்று லட்சம் பேர் கலிபோர்னியாவை விட்டு தங்களுடைய உறவினர் வீடுகள், நண்பர்கள் வீடுகள் என அருகில் இருந்த மாகாணங்களுக்கு சென்று விட்டனர். தங்களுடைய உடைமைகள் சொத்து என அனைத்தையும் இழந்து இருக்கின்றனர்.
இப்படி காட்டுத்தீயை அணைப்பது மிகவும் சிரமமான காரியமாக இருக்கிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியை இந்த காட்டுத்தீ அடைவதற்குள் எப்படியாவது அதனை அணைத்து விட வேண்டும் என அரசு முயற்சி செய்து கொண்டிருக்கிறது.
இந்த தீயில் இதுவரை பத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கின்றனர் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் 50க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள் 10,000 மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
இதுவரை 750 கோடி ரூபாய்க்கு மேல் இந்த தீயை அணைக்க மட்டும் செலவு செய்திருக்கிறது அமெரிக்க அரசு என்று கூறப்படுகிறது. எவ்வளவு இழப்பு..? என்ன உயிரிழப்பு..? எவ்வளவு சேதம் என தீ அணைந்த பின்பு தெளிவாக கூற முடியும்.
குறிப்பாக 4,700 கோடிக்கும் அதிகமான இழப்புகள் ஏற்பட வாய்ப்பு இருப்பாதாக கணிக்கப்பட்டு இருக்கிறது. இங்கே தீயை அணைக்க போதுமான வாகனங்களோ ஊழியர்களோ இல்லை என்பதால் ஏற்கனவே தீயணைப்புத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற 600 ஊழியர்கள் மீண்டும் பணிக்கு அழைத்து வந்திருக்கிறது அரசு.
மேலும், தீயை அணைப்பதில் பைடன் அரசு தோல்வி அடைந்து விட்டதாக புதிதாக அதிபராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் டிரம்ப் குற்றச்சாட்டு வைத்திருக்கிறார். இதில் கூட அரசியல் செய்வீர்கள்..? என்று பைடன் தரப்பினர் ட்ரம்புக்கு அரசியல் செய்ய வேண்டாம் என வேண்டுதல் விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த தீ விபத்துக்கு காரணம் நிஜமாகவே காட்டுத்தீதானா..? அல்லது செயற்கையாக யாரேனும் திட்டமிட்டு இந்த நாசகர வேலையில் ஈடுபட்டார்களா..? உள்ளிட்ட விசாரணையும் மறுபக்கம் முடுக்கி விடப்பட்டிருக்கிறது.
மேலும், காற்று பலமாக வீசிக்கொண்டே இருப்பதால் அடுத்தடுத்த பகுதிகளுக்கு தீ பரவிக்கொண்டே இருக்கிறது.
Summary in English : The recent fires in Los Angeles have been absolutely devastating, claiming five lives and destroying over a thousand structures. It’s heartbreaking to see such destruction, but it also raises some important questions about what this means for the future of wildfires in Southern California and beyond.