“ஐயர் வீட்டு தாமரை தண்டு வாடாம் வத்த குழம்பு..!” – சுட்ட அப்பளம் பேஸ் பேஸ்..!!

பருப்பு சாம்பார், வறுத்தரைத்த சாம்பார், மொளகு அரைத்த குழம்பு,  பருப்பு, ரசம் என பலவகை சைடிஷ்  செய்து போர் அடிச்சிருக்கும். சில சமயம் புளிக்குழம்பு கூட வைத்து சாப்பிட்டு இருப்போம். எனினும் நாக்குக்கு சுவை ஏதும் தெரியாமல் இருக்கும் சமயத்தில் நீங்கள் வத்த குழம்பு வைத்து சாப்பிட்டால் படுஜோராக இருக்கும்.

அந்த வகையில் ஐயர் வீட்டில் தாமரை  தண்டு வத்தல் கொண்டு செய்யக்கூடிய வத்த குழம்பு எப்படி வைப்பது என்பதை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

தாமரை தண்டு வத்த குழம்பு வைக்க தேவையான பொருட்கள்

1.தாமரைக்தண்டு 100 கிராம்

2.துவரம் பருப்பு நூறு கிராம்

3.புளி சிறிதளவு

4.வரமிளகாய் நான்கு

5.மிளகு அரை டேபிள்ஸ்பூன்

6.சீரகம் அரை டேபிள்ஸ்பூன்

7.உளுத்தம் பருப்பு அரை டேபிள்ஸ்பூன்

8.மஞ்சப்பொடி ஒரு சிட்டிகை

9.பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை

10.கருவேப்பிலை ஒரு கொத்து

11.எண்ணெய் 50 மில்லி

 செய்முறை

உங்களுக்கு தாமரைத் தண்டு வடகம் தற்போது கடைகளிலேயே கிடைக்கிறது அதனை 100 கிராம் அளவு வாங்கி எடுத்து வைத்துக்கொண்டு நீங்கள் எந்த வத்தக் குழம்பை செய்யலாம்.

 நீங்கள் வாங்கி வைத்திருக்கும் தாமரை தண்டு வடகத்தை 50 மில்லில் எண்ணெயில் போட்டு நன்கு வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

 இதனை அடுத்து நீங்கள் உளுத்தம் பருப்பு, மிளகு, சீரகம், பெருங்காயத்தூள் மிளகாய் ,கருவேப்பிலை போன்றவற்றை லேசாக வரறுத்து உங்கள் நெற்றியில் அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

 இப்போது 100 கிராம் பருப்பை குக்கரில் போட்டு நன்கு வேக வைத்து எடுத்து மசித்து கொள்ளவும். மீண்டும் அடுப்பை பற்ற வைத்து வாணலியில் சிறிதளவு எண்ணெயை ஊற்றி அதில் நீங்கள் மசித்து வைத்திருக்கும் பருப்பையும் கரைத்து வைத்திருக்கும் புளி நீரையும் கலந்து விடுங்கள்.

 இப்போது இந்த பருப்பு நீரில் நீங்கள் வறுத்து வைத்திருக்கும் தாமரை தண்டை சேர்த்து விடவும். பிறகு பொடி செய்து வைத்திருக்கும் அந்தக் கலவையையும் இதோடு சேர்த்து விடவும் இவை அனைத்தும் ஒன்றாக கொதித்து வரக்கூடிய வேலையில் தேவையான உப்பு மற்றும் மஞ்சள் பொடியை சேர்த்து கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை போடவும்.

இப்போது சூடான சுவையான தாமரைக்தண்டு வடாம் வத்த குழம்பு ரெடி. இதோடு சுட்டு அப்பளமும் சேர்த்து நீங்கள் சாப்பிட மிகவும் பிரமாதமாக இருக்கும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …