அம்மாடியோவ்..! – லவ் டுடே படத்தின் இறுதி வசூல்..! – லாபம் மட்டுமே இத்தனை கோடியா..?

தற்போதைய இளைஞர்கள் அனைவரும் விரும்பிப் பார்க்கக் கூடிய படமாக அமைந்த லவ் டுடே திரைப்படமானது சின்ன பட்ஜெட்டில் வசூலை வாரி குவித்து அனைவரையும் ஆச்சரியத்தில் தள்ளி இருக்கிறது.

இந்தப் படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்க கல்பாத்தி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் முக்கியமான நடிகர்களான யோகிபாபு,சத்தியராஜ், இவானா,ராதிகா,ரவீனா ரவி என பலர் நடித்திருக்கிறார்கள்.

கடந்த நவம்பர் மாதம் வெளிவந்த இந்த திரைப்படமானது தமிழகத்தில் ஆரம்ப நிலையில் சுமார் 30 கோடி அளவுக்கு வசூலி சாதனை புரிந்திருந்தது. என்ன படத்திற்கான இசையை யுவன் சங்கர் ராஜா அமைத்திருந்தார்.

மேலும் இந்த படத்தில் இயக்குனர் மற்றும் நடிகரான பிரதீப் ரங்க நாதனின் நடிப்பு பெருமளவு மக்கள் மத்தியில் பேசப்பட்டது அது மட்டுமல்லாமல் பல பாசிடிவ் கமெண்ட்களை பெற்றிருந்த இந்த படம் தெலுங்கிலும் ரிலீஸ் செய்யப்பட்டது.

இந்த படத்தையும் உதயநிதியின் ரெட் லைட் மூவி நிறுவனம் தான் வெளியிட்டது. ஆரம்பத்தில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து ஒரு வாரம் கழித்த நிலையில் உலகெங்கும் ரிலீசான இந்த படம் பிற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

வெறும் ஐந்து கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படமானது தற்போது அதைவிட பத்து மடங்கு அதிக அளவு வசூலை ஈட்டி தந்துள்ளது. அதாவது இதுவரை லவ் டுடே படம் உலக அளவில் 70 கோடிக்கு மேல் வசூலில் சாதனை புரிந்துள்ளது.

இதனை அடுத்து வசூல் மழை பொழியும் லவ் டுடே படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றிருப்பதால் மீண்டும் தியேட்டர்களில் வசூல் மழை கட்டாயம் பொழியும் என்று அனைவரும் கூறி வருகிறார்கள்.

இதனை அடுத்து தரமான திரைகதை அமைந்தால் நிச்சயம் அது வெற்றி அடையும். பட்ஜெட் திரைப்படத்திற்கு ஒரு முக்கிய பொருள் அல்ல என்பதை இந்த படம் விளக்கி விட்டது என்று பலரும் தங்கள் கருத்தை கூறி வருகிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …