கேரளாவில் இருந்து பல நடிகைகள் இங்கு தமிழ் சினிமாவுக்கு வருவதெல்லாம் இப்போது புதிதல்ல இது காலம் காலமாக நடந்து கொண்டிருப்பது தான்.
குறிப்பாக இதில் முக்கியமான பிரபல நடிகைகள் கேரளாவில் இருந்து இங்கு வந்து நட்சத்திர நடிகையாக கோலிவுட்டில் அந்தஸ்தை பிடித்தவர்கள் பல பேர் இருக்கிறார்கள்.
இளம் நடிகை இவானா:
அதிலும் நயன்தாரா, அசின், அமலாபால், மீரா ஜாஸ்மின், மஞ்சு வாரியர், அனுபமா பரமேஸ்வரன், கீர்த்தி சுரேஷ் இப்படி பல நடிகைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
அந்த லிஸ்டில் இடத்தை பிடித்திருப்பவர் தான் நடிகை இவனா. டீன் ஏஜ் வயசிலேயே தனது நடிப்புத் துறையை ஆரம்பித்த இவானா தமிழ் மற்றும் மலையாள மொழி திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.
இவர் முதன்முதலில் கடந்த 2012 ஆம் ஆண்டு மாஸ்டர்ஸ் எனும் மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி திரையுலகில் நுழைந்தார்.
அதன் பிறகு 2018 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். பாலா இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த நாச்சியார் திரைப்படத்தின் மூலமாக இவர் இளம் ஹீரோயினாக அறிமுகமானார்.
லவ் டுடே இவானா:
தொடர்ச்சியாக பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளிவந்த லவ் டுடே திரைப்படத்தில் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மிகப்பெரிய அளவில் பெரும் புகழ்பெற்றார் என்று சொல்லலாம்.
நாச்சியார் படத்திலேயே இவனாவின் நடிப்பை நடிகை ஜோதிகா வெகுவாக பாராட்டி தள்ளினார். இந்த படத்தில் ஹீரோயின் நானே கிடையாது இவானா தான் என்று அந்த அளவுக்கு மேடையில் இவானாவின் நடிப்பை வெகுவாக புகழ்ந்து தள்ளினார்.
அதை அடுத்து லவ் டுடே திரைப்படத்திலும் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார் இவானா.
குறிப்பாக இளைஞர்களை அந்த திரைப்படம் கொண்டாட வைத்தது. வித்தியாசமான கதைக்களத்தில் தற்போது உள்ள டெக்னாலஜி உலகத்தில் இளைஞர்களின் காதல் எப்படி இருக்கிறது என்பதை வெளிக்காட்டும் விதமாக அந்த படம் அமைந்திருந்தது.
இந்த படம் மாபெரும் வெற்றி படமாக இருந்தது. இந்நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால்,
பிரபல தொகுப்பாளனி விஜே பார்வதி சமீபத்தில் லவ் டுடே திரைப்படத்தில் நடித்திருந்த நடிகை இவானாவிடம் பேட்டி கண்டார் .
எக்குத்தப்பாக கேள்விக்கு பளார் பதில்:
அதில் அவர் சில கொக்குமாக்கான கேள்விகளை எழுப்பினார். குறிப்பாக லவ் டுடே படத்திலிருந்து ஒரு காட்சியை பிரதிபலித்து இவானாவிடம் அதே கேள்வியை எழுப்பினார் .
அதாவது லவ் டுடே திரைப்படத்தில் இவானா ஹீரோ பிரதீப் ரங்கநாதனிடம் ஒரு கேள்வி எழுப்புவார் இவ்வளவு பிட்டு படம் பாக்குறியே நீ ஒரு காம பிசாசா என்று கேள்வி எழுப்புவார்.
இதனை அப்படியே இந்த கேள்வியை அப்படியே இவனாவிடம் கேட்டார் VJ பார்வதி நீங்கள் பிட்டு படம் பார்ப்பீர்களா..? என்று கேட்டதற்கு இவானா கொடுத்த பதிலானது நான் திரைப்படங்களை மட்டும் தான் பார்க்கிறேன்.
நிறைய பேர் அப்படியான படங்களை பார்த்தால் ஒன்றும் பிரச்சனை இல்லை. நீ நினைப்பது போல் எதுவும் இருக்காது சாதாரணமாக தான் இருக்கும் என்றெல்லாம் கூறுவார்கள்.
ஆனால், எனக்கு அதனை பார்க்க வேண்டும் என்ற எந்த விருப்பமும் இதுவரை வந்தது கிடையாது. பிட்டு படங்கள் அந்த பக்கம் திரைப்படங்கள் இந்த பக்கம் நான் திரைப்படங்கள் மட்டுமே பார்த்துக் கொள்கிறேன் என கூறினார்.