இந்த ஹீரோவுடன் காதலா..? முதன் முறையாக மௌனம் கலைத்த மீனா..! என்ன சொல்லியிருக்கார் பாருங்க..!

தென் இந்திய சினிமாவில் பிரபல நடிகையான மீனா 90ஸ் காலகட்டத்தில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நட்சத்திர நடிகை என்ற இடத்தை தக்க வைத்துக் கொண்டு இருந்தார்.

ஹீரோயின் ஆக வருவதற்கு முன்னர் குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். முதன் முதலில் சிவாஜி கணேசன் நெஞ்சங்கள் திரைப்படத்தின் மூலமாக இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தார் .

மீனா:

அதை அடுத்து தமிழ் ,தெலுங்கு, கன்னடம் ,மலையாளம் உள்ளிட்ட அனைத்து தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்து பிரபலமான நடிகையாக இடத்தை தக்க வைத்துக்கொண்டார்.

இவரது நடிப்பில் வெளிவந்த தமிழ் திரைப்படங்களான அண்ணாத்த, அன்புள்ள ரஜினிகாந்த், வானத்தைப்போல, முத்து, மாயி ,பொற்காலம், கூலி , சிட்டிசன், எஜமான் உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

ஒரு ஊரில் ஒரு ராஜகுமாரி, என் ராசாவின் மனசிலே உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

மீனா நட்சத்திர நடிகையாக இருந்த போதே கடந்த 2009 ஆம் ஆண்டு வித்தியாசாகர் என்ற மென்பொருள் பொறியாளரை திருமணம் செய்து கொண்டார்.

பெற்றோர் சம்மதத்துடன் நடைபெற்ற இந்த திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். இவர்களுக்கு நைனிகா என்ற ஒரு மகள் பிறந்தார் .

நைனிகா விஜய்யின் தெறி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. திருமணம் குழந்தை பிறப்புக்கு பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார் மீனா.

தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆர்வத்தை செலுத்தி வருகிறார். முன்னதாக இவரது கணவர் வித்யாசாக தனது 2002 ஆம் ஆண்டு நுரையீரல் தொற்று காரணமாக சிகிச்சை பலனின்றி உயிர் இழந்து விட்டார்.

இந்த ஹீரோவுடன் காதலா..?

கணவர் இறப்புக்கு பிறகு மீனாவை குறித்த வாந்தி செய்திகளும் இரண்டாம் திருமணம் குறித்த செய்திகளும் காட்டுத் தியாய் பரவத்ததுவங்கியது .

குறிப்பாக இவர் நடிகர்களுடன் உறவில் இருப்பதாகவும் முக்கியமாக பிரபலமான டாப் ஹீரோ ஒருவருடன் உறவில் இருப்பதாகவும் அவரை இரண்டாம் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் செய்திகள் வெளியாகிய பரவியது.

மௌனம் கலைத்த மீனா

இதற்கு பதிலடி கொடுத்த நடிகை மீனா வதந்திகள் வெறுப்பவர்களால் உருவாக்கப்படுகிறது. முட்டாள்களால் பரப்பப்படுகிறது மற்றும் முட்டாள்களால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

அவரின் இந்த பதிவிற்கு பிரபலங்கள் பலரும் அவருக்கு ரிப்ளை செய்திருந்தனர். இதில் குறிப்பாக நடிகை குஷ்பு “More power to you woman!! Loads of love to you’ என பதிவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version