பிட்டு சீனில் நடிக்கும் முன்பு இதை பண்ணேன்.. கூச்சமின்றி கூறிய லவ் டுடே இவானா..

ஒரே படத்தில் மிகப்பெரிய அடையாளத்தை சில நடிகர்கள், நடிகைகள் பெற்று விடுகின்றனர். அது ஒரு அதிர்ஷ்டமான விஷயமாக நடந்து விடுகிறது. அந்த வகையில் நடிகை இவானாவுக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த படம் லவ்டுடே.

உத்தமன் பிரதீப்

பிரதீப் ரங்கநாதன் இயக்கி, ஹீரோவாக நடித்த லவ்டுடே படத்தில், அவரே உத்தமன் பிரதீப் என்ற கேரக்டரில் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக இவானா நடித்திருந்தார்.

இவானா ஏற்கனவே, நாச்சியார் என்ற படத்தில் ஜிவி பிரகாஷ்க்கு ஜோடியாக நடித்திருந்தார் என்றாலும், இந்த படத்தில் தான் அவர் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றார்.

இளம் வயது காதலன் (பிரதீப்), காதலி (இவானா). ஒரு கட்டத்தின் காதலி வீட்டுக்கு காதலன் பெண் கேட்டு செல்லும்போது ஒரு நாள் இருவரும் போனை மாற்றிக்கொள்ளுங்கள். பிறகு இருவரும் திருமணம் செய்துக்கொள்ள சம்மதித்தால் திருமணம் செய்து வைக்கிறேன் என்கிறார் பெண்ணின் தந்தை ( சத்யராஜ்)

மாமா குட்டி…

அப்படி இருவரும் போனை பரஸ்பரம் மாற்றிக்கொள்ளும்போது, இவானா மாமா குட்டி என்பவருடன் பழகியதும், லாங் டிரைவ் போன விஷயங்களும் பிரதீப்புக்கு தெரிய வருகிறது. அதே போல், பல பெண்களிடம் பிரதீப் ஜொள்ளு விட்டு பழகியதும், இவானாவுக்கு தெரிய வருகிறது.

இதையும் படியுங்கள்:  ரகசியம் சொன்ன கார்த்தி.. பொதுவெளியில் போட்டு உடைத்த ஆர்யா.. அட கொடுமைய..

இதற்கிடையே பிரதீப் அக்காவுக்கும், யோகிபாபுவுக்கும் திருமண ஏற்பாடுகள் நடக்க, அந்த கதையும் மிக சுவாரசியமாக இருக்கும். இப்படி படத்தில் பல விஷயங்கள், ஆரம்பம் முதல் இறுதி வரை அந்த படத்தை வெற்றிப்படமாக மாற்றியது.

படுக்கையறை காட்சி

அந்த படத்தில் கிளைமேக்ஸ் காட்சியில், இவானா படுக்கையறை காட்சி ஒன்று வரும். ஆனால் மார்பிங் முறையில் அவரை காட்டி வேறு யாரையோ எடுத்திருப்பார்கள், என்பது போல் கதை வரும்.

அந்த படத்தில், அந்த காட்சியில் நடித்தது குறித்து நடிகை இவானா ஒரு நேர்காணலில் பேசியதாவது,

அப்படி ஒரு சீன் இருக்கும் என்று முதலில் சொல்லும்போது நடுக்கம் இல்லை. ஆனால் எப்படி எடுப்பாங்க என்று ஒரு எண்ணம் இருந்தது. அதுகுறித்து முதலில் என் குடும்பத்துடன் நான் ஆலோசித்தேன்.

கதைக்கு அது வேண்டும்

சினிமாவை புல்லா பார்க்கும்போது கதைக்கு அது வேண்டும். அப்படித்தான் இருந்தது.

முன்னாடி இன்டர்வ்யூல எல்லாம் இதைப்பத்தி கேட்டாங்க. அப்போ அதை தப்பா எடுத்துக்குங்வாங்களோ நினைப்பேன். இது நடுநிலையான குடும்பத்தை சேர்ந்த பெண்களை பாதித்த ஒரு விஷயம்தான்.

ஆனால், உத்தமன் பிரதீப், நிகிதாவுக்கு கிடைத்த மாதிரி எல்லாருக்குமே புரிஞ்சுக்கிட்ட லைப் பார்ட்னர் கிடைக்கறதும் சந்தேகம்தான். அந்த விஷயத்தில் நிகிதா அதிர்ஷ்டசாலியாக இருந்தாள்.

அப்படி பண்ணவே கூடாது

தப்பு பண்ணினவங்க தான் மூஞ்சியை மறைச்சிட்டு ஒளிஞ்சு வாழணும். அதனால் தப்பு பண்ணாதவங்க அப்படி பண்ணவே கூடாது. தப்பு பண்ணாதவங்க வெளியில் வந்தால்தான் தப்பு பண்ணினவங்களை ப்ரூப் பண்ண முடியும்.

தப்பே பண்ணாதவங்க ஒளிஞ்சுக்கிட்டு இருந்தா, தப்பு பண்ணினவங்க வெளியில் ஜாலியாக சுத்திக்கிட்டு இருப்பாங்க, என்று பேசியிருக்கிறார் நடிகை இவானா.

இதையும் படியுங்கள்:  கொடைக்கானலில் இளம் நடிகருடன் வீட்டிலேயே சிறை வைக்கப்பட்டேன்.. சரண்யா பொன்வண்ணன் கதறல்..

லவ்டுேட படத்தில் அந்த மாதிரி சீனில் நடிக்கும் முன்பு, பெற்றோரிடம் ஆலோசனை செய்தேன் என்று இந்த நேர்காணலில் வெளிப்படையாக கூறியிருக்கிறார் லவ் டுடே படத்தின் நாயகி இவானா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version