நான் என்ன சர்ச்சைக்கு பிறந்தவனா..? வைரமுத்து காட்டம்..! என்ன காரணம் தெரியுமா..?

இது ஒரு பொன்மாலைப் பொழுது என்ற பாடல் வரிகளின் மூலம் திரை உலகிற்கு பாடல் ஆசிரியராக அறிமுகமான கவிஞர் வைரமுத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை எழுதி திரையுலகில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட கவிஞராக விளங்குகிறார்.

இவர் திரைப்படங்களில் பாடல் எழுதுவதோடு நிறுத்திக் கொள்ளாமல் சிறந்த கவிஞராகவும், கட்டுரை ஆசிரியராகவும் பல்வேறு வகைகளில் பல்வேறு நூல்களை பல்வேறு தலைப்புகளில் தந்து ரசிகர்களின் மத்தியில் கண்ணதாசனுக்கு அடுத்த இடத்தை பிடித்திருக்கிறார்.

நான் என்ன சர்ச்சைக்கு பிறந்தவனா..

கவிப்பேரரசு என்று அடைமொழியோடு அழைக்கப்படும் கவிஞர் வைரமுத்துவின் பாடல் வரிகள் ஒவ்வொன்றும் வைரமாக மின்னக்கூடிய வகையில் ஜொலிக்கும்.

இவர் எழுதிய காதல் பாடல்களும், சோகப் பாடல்களும், தத்துவ பாடல்களும் இன்றும் ரசிகர்களின் மத்தியில் முணுமுணுக்கக் கூடிய பாடல்களில் ஒன்றாக விளங்குவதோடு அனைவரும் ரசிக்கக்கூடிய வகையில் எக்காலத்திற்கும் பொருந்தும் வகையில் உள்ளது.

இந்நிலையில் அண்மை பேட்டி ஒன்றில் பாடலுக்கு வலு சேர்ப்பது இசையா? பாடல் வரிகளா? என்ற சர்ச்சையை கிளப்பி விட்ட இவருக்கு சற்று தலைக்கனம் அதிகரித்து இருப்பதாக கங்கை அமரன் மற்றும் பலரும் தங்களது கருத்துக்களை இணையங்களில் சொல்லியிருந்தார்கள்.

இதனை அடுத்து இளையராஜா குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்வியால் கோபம் அடைந்த வைரமுத்து எந்த ஒரு மேடைகளிலும் நான் சர்ச்சையான கருத்தை உண்டாக்க விரும்பவில்லை என்று பேசியதோடு நான் சர்ச்சைக்கு பிறந்தவன் அல்ல என்ற கருத்தை பதிவு செய்திருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் திரைப்பட பாடல்களுக்கு இசை மட்டுமல்ல பாடல் வரிகளும் முக்கியம் என பேசிய நிலையில் வைரமுத்து ஒரு நல்ல கவிஞராக இருக்கலாம். ஆனால் நல்ல மனிதர் அல்ல என்று கங்கை அமரன் வைரமுத்துவை டார் டாராக கிழித்து விமர்சனம் செய்திருந்தார்.

கவிஞர் வைரமுத்து காட்டம்..

இவர் எழுப்பிய கேள்வியால் பல்வேறு விதமான கலவை ரீதியான விமர்சனங்கள் வெளி வந்த நிலையில் இசையும் மொழியும் பரஸ்பரம் செய்து கொள்ளும் போது தான் கலை வெற்றிபெறுகிறது என்று அந்த விழாவில் சொன்ன வார்த்தைகள் எங்கே போனது என்று தெரியவில்லை.

இந்நிலையில் கங்கை அமரனை அடுத்து வைரமுத்துவை விமர்சனம் செய்தவர்கள் அவரை வாழ வைத்ததே பாரதிராஜாவும், இளையராஜாவும் தான். அதனால் இளையராஜா படத்தை நீங்கள் தினமும் கும்பிட வேண்டும்.

இது குறித்து எனது அண்ணன் எதுவும் பேச மாட்டார். அவருடைய தம்பி நான் தான் பேசுவேன் என்று வைரமுத்துவை மிரட்ட கூடிய தொனியில் கங்கை அமரன் பேசி இருந்தது நினைவில் இருக்கலாம்.

காரணம் என்ன தெரியுமா..

இந்நிலையில் மற்றொரு செய்தியாளர் அவர் சிம்பொனியை முடித்து வந்திருக்கிறார் இளையராஜா என்று கேட்டதை எடுத்து கோபம் அடைந்த வைரமுத்து இந்த செய்திகளை நீங்கள் தவிர்க்க விரும்ப மாட்டீர்கள்.

நான் இந்த மேடையில் சர்ச்சையான கருத்தை உண்டாக்க விரும்பவில்லை. நான் சர்ச்சைகளுக்கு பிறந்தவன் இல்லை . சமூகத்தால் சர்ச்சைகள் உண்டாக்கப்படுகிறது. இந்த சர்ச்சையில் இருந்து நான் வெளியேற விரும்புகிறேன் என்ற கருத்தை கூறியிருக்கிறார்.

மேலும் சமூகம் உருவாக்கக்கூடிய சர்ச்சைகளில் குளிர் காய சிலர் நினைக்கிறார்கள். அவர்களை விட்டு நான் தள்ளி நிக்கவே ஆசைப்படுகிறேன். நான் தமிழோடு நிற்க நினைக்கிறேன். அத்துடன் சர்ச்சைகளோடு விலகி நிற்கிறேன் என்று போட்டியில் விரிவாக பேசி அனைவரையும் சிந்திக்க வைத்தார்.

இதை அடுத்து இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் கவிப்பேரரசு வைரமுத்து கூறிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் வரலாற்றில் பொறிக்கக் கூடிய வார்த்தைகள். அவர் சர்ச்சைகளோடு விலகி தமிழோடு இணைந்து நிக்க நினைப்பதால் இந்தப் பிரச்சனையை இத்தோடு விட்டுவிடலாமே என்ற ரீதியில் பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version