ஹார்ட் ஒர்க்னா என்னன்னு தெரியுமா.. இன்னக்கி செத்தாலும்.. திரைப்பட விமர்சகரை வச்சு செய்த பாடலாசிரியர்!.

தற்சமயம் சமூக வலைதளங்கள் என்பது முக்கிய விஷயமாக மக்கள் மத்தியில் வளர்ந்து கொண்டு வருவதால் சினிமா பிரபலங்கள் எப்படி மக்கள் மத்தியில் முக்கியமானவர்களாக இருக்கிறார்களோ அதே போல சமூக வலைதளங்களில் பிரபலமாகும் நபர்களும் இருந்து வருகின்றனர்.

மேலும் அந்த பிரபலத்தை பயன்படுத்தி அவர்கள் நிறைய சம்பாதிக்கவும் செய்கின்றனர். இப்படியாக சமீபத்தில் இன்ஸ்டாவில் பிரபலமாக இருக்கும் அமலா ஷாஜி குறித்து சர்ச்சையான கருத்துக்களை பேசி இருந்தார் பாடலாசிரியர் பிரியன்.

ஹார்ட் ஒர்க்னா என்னன்னு தெரியுமா:

அவர் ஒரு திரைப்படத்தில் அமலா ஷாஜி ஒரு காட்சிக்கு மட்டும் வர வேண்டும் என்று கேட்டதாகவும் அதற்கு அமலா ஷாஜி பெரிய தொகையை தன்னிடம் கேட்டதாகவும் கூறியிருந்தார். படத்தின் உதவி இயக்குனர்கள் ஜுனியர் ஆர்ட்டிஸ்ட்டுகள் கூட அவ்வளவு தொகை வாங்குவது கிடையாது என இது குறித்து சர்ச்சையாக விமர்சனம் ஒன்றை கொடுத்திருந்தார்.

அதில் அவர் கூறும்பொழுது அவர்கள் நடனமாடும் பாடல்களுக்கு எந்த வித  தொகையும் கொடுப்பது கிடையாது. அதையெல்லாம் நாங்கள் கேட்டால் என்ன செய்வார்கள் என்று கேட்டிருந்தார். இந்த நிலையில் இதற்கு பதில் அளித்த சினிமா விமர்சகரான பிரசாந்த் ரங்கசாமி அமலாஷாஜி மிகவும் கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறார்.

அதன் மூலமாக லட்சக்கணக்கான நபர்களை பாலோவர்ஸ் ஆக வைத்திருக்கிறார். அவருடைய விளம்பரம் உங்களுக்கு தேவை என்பதால்தான் நீங்கள் அவரிடம் செல்கிறீர்கள். அப்படி இருக்கும் பொழுது உங்களுக்கு அவருடைய சம்பளம் ஓகே என்றால்  அவருக்கு வாய்ப்பு கொடுக்கலாம்.

விமர்சகரை வச்சு செய்த பாடலாசிரியர்

இல்லை என்றால் அதை அப்படியே விட்டுவிட்டு அடுத்த வேலையை பார்க்கலாம். அதை விட்டுவிட்டு தொடர்ந்து அவரை புண்படுத்தி பேசுவது சரி கிடையாது என்று கூறியிருந்தார் பிரசாந்த் ரங்கசாமி. இந்த நிலையில் இதற்கு பதில் அளித்த பாடலாசிரியர் பிரியன் கூறும்பொழுது கஷ்டப்பட்டு வேலை பார்ப்பது என்றால் என்னவென்று தெரியுமா?

சும்மா ஒரு பாடலுக்கு நடனம் ஆடிவிட்டால் மட்டும் அது கஷ்டப்பட்டு வேலை பார்ப்பதாக ஆகிவிடாது. ஒரு பாடலை உருவாக்குவதை விட அது ஒன்னும் கஷ்டமான வேலை கிடையாது. நாங்கள் உருவாக்கிய பாடல்களை போட்டு நடனமாடி அதன் மூலமாக பிரபலம் ஆகிவிட்டு பிறகு எங்களிடமே இப்படி பேசுவது சரி கிடையாது. நான் இப்போ செத்தா கூட நூற்றுக்கணக்கான பாடல் என் பெருமையை சொல்லும். எனக்கு ஹார்ட் ஒர்க் பத்தி சொல்ல தேவையில்லை என்று இதற்கு காட்டமான பதிலை கொடுத்து இருக்கிறார் பாடலாசிரியர் பிரியன். இதனை அடுத்து அவரின் இந்த பேட்டியானது பிரபலமடைந்து வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version