சினேகன் மனைவி கன்னிகா நிறுவன ஹேர் ஆயிலின் விலை இவ்வளவா..?

கண்ணதாசன், வாலி, வைரமுத்துவை அடுத்து தமிழ் திரையுலகில் மிகச்சிறந்த பாடல் ஆசிரியராக விளங்கும் சினேகன் பல்லாயிரக்கணக்கான தமிழ் பாடல்கள் மட்டுமல்லாமல் கவிதை கட்டுரை நூல்களையும் எழுதி அசத்தியவர்.

இவர் சீரியல் நடிகையான கன்னிகா ரவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் வயது வித்தியாசம் அதிகம் இருப்பதால் அது பேசும் பொருளாய் இணையத்தில் பேசப்பட்டது.

பாடல் ஆசிரியர் சினேகன் மனைவி..

இவர்கள் இருவரும் இணைந்து சினேகம் ஹெர்பல்ஸ் என்ற பெயரில் தலைமுடிக்கு எண்ணெய் தயாரித்து விற்பனை செய்து வருகிறார்கள். அந்த எண்ணெயின் விலை எவ்வளவு என்று தெரிந்தால் நீங்கள் வாய்ப்பிளந்து விடுவீர்கள்.

மார்க்கெட்டில் எக்கச்சக்கமான ஹேர் ஆயில் கிடைக்கக் கூடிய நிலையில் இவரது ஆயிலுக்கு மட்டும் அப்படி என்ன எவ்வளவு விலை என பலரும் பல்வேறு வகைகளில் கேள்வியை எழுப்பிய நிலையில் இதற்குரிய பதிலை கன்னிகா தெரிவித்திருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் நடிகை கன்னிகாவை போல நடிகை நயன்தாரா மற்றும் பல கதாநாயகிகள் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்து வருகிறார்கள். அந்த வரிசையில் நடிகை சினேகா கூட புடவை பிசினஸ் செய்து வருகிறார்.

கன்னிகா நிறுவன ஹேர் ஆயில்..

சினேகம் ஹெர்பல் தயாரிக்கும் ஹேர் ஆயில் விலை 200 மில்லி என்பது 999 விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை எதனால் அதிகம் என்பது குறித்து கன்னிகா முதல் முதலில் விளக்கம் தந்திருக்கிறார்.

இது குறித்து கன்னிகா கூறும் போது கடந்த ஒரு வருடமாகவே ஹெர்பல் ஹேர் ஆயில் தயாரிக்கும் முயற்சியில் தொடங்கி இருப்பதாக கூறினார். இது கன்னிகாவின் குடும்பம் பிசினஸை செய்து வருவதாக கூறியிருக்கிறார்.

ஆத்தாடி ஹேர் ஆயில் இம்பூட்டு விலையா?

சினிமா என்பது ஒரு நிலையான வருமானத்தை தராது என்பதால் ஏதாவது ஒரு பிசினஸை செய்ய வேண்டும் என்ற ஐடியா ஆரம்ப நாட்களில் இருந்ததாகவும் அதை சரி செய்ய கூடிய வகையில் இந்த பிசினஸை துவங்கி இருப்பதாகவும் இதில் எனக்கு மட்டுமல்லாமல் என் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் நீண்ட தலை முடி இருந்ததற்கு காரணம் அவர்கள் பாட்டி தயாரித்துக் கொடுத்த ஹேர் ஆயில் என்ற கருத்தை கூறியிருக்கிறார்.

இந்த ஹேர் ஆயிலை பயன்படுத்துவதன் மூலம் மூலிகைகளால் செய்யப்பட்டது என்பதால் உடலை குளிர்ச்சியாகவும் முடி வளர்வதற்கு ஏதுவாகவும் இருப்பதால் தான் இந்த பிசினஸை தேர்வு செய்திருக்கிறார்.

இவரது ஹேர் ஆயிலை லேபுக்கு அனுப்பி வைத்து டெஸ்டிங் செய்து ரிசல்ட் வந்ததும் மிகவும் சந்தோஷமாக இருந்ததாக கூறிய இவர் இந்த நிறுவனத்தை ஆரம்பித்து விளம்பரத்திற்கு தானே நடித்ததாக கூறியிருக்கிறார்.

இந்த எண்ணெயை பலருக்கும் கொடுத்து டெஸ்ட் செய்த பின்பு தான் மார்க்கெட்டிங் செய்திருப்பதாக சொல்லி இருக்கும். இந்நிலையில் இவர் விலை அதிகமாக உள்ளது என்று பலர் கமாண்ட் செய்து வருவது வேதனையாக இருக்கிறது.

இதற்கு காரணம் அதிகமாக ஜிஎஸ்டி கட்ட வேண்டி இருப்பதாலும் பொருட்களை உலர வைக்காமல் பிரஷாக வைத்து பயன்படுத்துவதாலும் ஊழியர்களுக்கு சம்பளம் போன்ற வகைகளில் பல வகைகளில் செலவு அதிகரித்து இருப்பதாலும் இதற்கு உரிய பொருள் வாங்குவதால் தயாரிப்பு செலவு ஏற்படுவதாக கூறினார்கள்.

மேலும் இந்த பொருளை பயன்படுத்துவதன் மூலம் முடி கொட்டுவது நின்று விடும். அத்துடன் உடல் குளிர்ச்சியாகும் மீண்டும் முடியின் வேர் கால்களில் மசாஜ் செய்வதின் மூலம் முடியின் வளர்ச்சி அதிகரித்திருக்கும் என கன்னிகா கூறி இருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version